
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் ,தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், இப்போதே திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை பொங்களை சாக்காக வைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இது இலவசம் என்ற பெயரில் எதற்காக கொடுக்கிறார்கள் ?ஏன் கொடுக்கிறார்கள்? இதை வாங்குகின்ற மக்களுக்கு இது தெரியுமா? தெரியாதா? இதுபோல்,இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகின்ற நிலைமையா? அல்லது ஓட்டுக்காக இந்த இலவச பொருட்கள் கொடுக்கின்ற ஒரு வேலையா?

மேலும்,அண்டா, குண்டா இல்லாமல் மக்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? அல்லது இவர்கள் கொடுக்கின்ற மளிகை பொருட்களில் தான் பொங்கல் வைக்கப் போகிறார்களா?

இது எல்லாம் உழைத்து வாழக்கூடிய மக்களை, கேவலப்படுத்துகின்ற வேலை. ஆனால், இந்த இலவச பொருட்களை கொடுத்து திமுக கட்சியினர் கொடுத்ததற்கு ஓட்டு போடுங்கள் என்று அவர்களை மிரட்டவா? அல்லது இந்த இலவச பொருட்களை கொடுத்து, அவர்களை ஈர்க்கக்கூடிய வேலையா? எதற்காக இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டும்?
உங்களுக்கு கொடுத்த வேலை என்ன ? மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் ,மக்களுக்கான சேவை, இதற்கு தான் வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால், மக்களுக்கு இலவசத்தை கொடுத்து, அதாவது நீங்கள் கொள்ளை அடித்ததில், இது எல்லாம் ஒரு பிச்சை. நீங்கள் இந்த பிச்சையை போட்டு, உங்களை மல்டி மில்லினர்களாக ஆக்கிக் கொள்ள மக்கள் வாக்களிக்கவில்லை.

இதைப் படிக்கின்ற பாமர மக்கள் உண்மை தெரியாமல் கூட இருக்கலாம். இவ்வளவு காலம் இல்லாமல், திமுகவினர் இப்போது எதற்காக ?இந்த அண்டா, குண்டா, இலவச பொருட்கள், இவர்கள் கொடுக்கிறார்கள்? மக்கள் இதை சிந்திப்பார்களா? இல்லை தேர்தல் ஆணையம் ஆவது இதை சிந்திக்குமா?

மேலும் , திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு வார்டுகளுக்கு, இந்த இலவசப் பொருட்கள் திமுகவினர் மூலம் விநியோகிக்கப்படுவதாக தகவல். இதை வாங்குகின்ற மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இவர்கள் கொள்ளையடித்த பொருட்களை இலவசமாக கொடுக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் வாக்கை நாம் விலைக்கு வாங்கி விட்டோம் என்று பதவிக்கு வந்தவுடன் வந்தவர்கள் நினைக்கிறார்கள். இது இரண்டுமே தவறு. இதனால், பாதிக்கப்படுவது ,இப்படிப்பட்ட மக்கள் மட்டுமல்ல, உழைப்பவர்களும், பாதிக்கிறார்கள் என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள் ?