
தமிழ்நாட்டு மக்கள் எது நல்லது ?எது உண்மையானது ? எது தேவையானது? இதை சிந்திக்காமல், பணத்தால் எது பெரியது? ஆடம்பரத்தால் எது பெரியது? முதலில் அரசியல் கட்சியினர் பேசுவது உண்மையானதா? என்பதை சிந்திக்காமல் ,அவர்களின் பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள்.இது அத்தனையுமே மக்களுக்கு தவறான தேர்வில் தான் முடிகிறது.

மேலும்,ஒரு அரசியல் கட்சி பணத்தால் பெரியது. ஆனால், ,செயலால் பெரியதா? அது தனக்கு மட்டும் நல்லதாக இருந்தால் போதுமா? அது மட்டுமல்ல ,

தன்னுடைய ஜாதி கட்சி என்று நம்பி பின்னால் சென்றால் , முதல் ஏமாற்றுகிற கட்சி அதுவாக தான் முதலில் இருக்கிறது. அந்தக் கட்சி தலைவனும் ,அவர்களுடைய கூட்டமும், கொள்ளை அடிப்பதற்கு ஒரு கட்சி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஜாதி என்று நம்பி ஏமாறுபவர்கள் அதிகம் .அது பின்னால், மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது என்பதை சிந்திப்பதில்லை. இப்படி மக்கள் அரசியலை புரிதல் இல்லாமல், சிந்திக்காமல் இருக்கும்போது, எப்படியெல்லாம் இந்த போலி அரசியலால் பாதிக்கப்படுகிறார்கள்?

மேலும்,இதில் படித்தவர்களும் ஏமாறுகிறார்கள், படிக்காதவர்களும் ஏமாறுகிறார்கள். அதுதான் கொடுமை. அவர்கள் என்ன சில பேர் பேசுகிறார்கள் என்றால், எவன் வந்தாலும், இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு அவநம்பிக்கையை அவர்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஒன்று மட்டும் மக்கள் நம்ப வேண்டும் .

நாட்டில் போலிகள் அதிகரித்துவிட்டது. எல்லாத் துறைகளிலும், அதனால், ,உண்மையை நிதானத்துடன் சிந்தித்து தேர்வு செய்தால் தான், ,நீங்கள் மட்டுமல்ல உங்கள் சந்ததிகளும், நல்ல முறையில் வாழ முடியும்.
ஆனால், அப்படி சிந்திக்காமல், தான் வாழ்ந்தால் போதும், தனக்கு கிடைத்தால் போதும்,
இப்படிப்பட்ட சுயநலத்தை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் அரசியலை எதிர்கால நன்மைக்கு தேடினால் ஒருகாலும் ,

அதற்கு தகுதியானவர்கள் கிடைக்க நீங்கள் முதலில் உங்கள் மனதில் ஒரு நல்ல சமுதாயத்திற்கு பயன்படக்கூடியவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தேர்வு செய்யவில்லை.
அதனால்தான் இன்று சமூகம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கிக் அதன் வலிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும்.

இப்படி ஒரு சுயநலத்திற்கு அரசியல் தேர்வு செய்வதன் விளைவு என்று பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,அதே போல் தான் பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி, இதில் வரக்கூடிய அரசியல் செய்திகளால் இன்று நம்பி ஏமாறும் மக்களின் வாழ்க்கை ,நடுத்தர மக்களின் வாழ்க்கை அதன் பின் விளைவு பாதிப்புகள் எவ்வளவு ஏற்படுத்துகிறது என்பது இவர்களுக்கு புரியுமா?

அப்படி வாழும் போது, ஏற்படுகின்ற பிரச்சனைகள் தாங்க முடியாமல் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் துடிக்கிறார்கள். பாதிப்பில்லாதவர்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சீமான் சொல்வது போல ,அது பழக்கமாகவும் ஆகிவிட்டது. இந்த இலவசம் ?ஓட்டுக்கு பணம்? இது எல்லாம் எதற்காக கொடுக்கிறார்கள்? என்பது கூட சிந்திப்பதில்லை.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். ஏனென்றால்! அவர்கள் ஒரு பக்கம் படித்து அதன் மூலம், அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் .உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் போது, அவர்கள் எல்லாவற்றிலும் இந்த போலி அரசியலால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றமும், அல்லது வேலை வாய்ப்பு எதுவும் கிடைப்பதில்லை.
மேலும்,நேற்று கூட வந்தவாசிக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்து இளைஞர் ஒருவர் பி. இ .பட்டதாரி .இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் ஒரு பக்கம் வேதனையாகவே இருக்கிறது. இதைவிட ஒரு கொடுமை இவருடைய கிராமத்தில் ஆறு, ஏரிகளில் ,மண் எடுத்து விட்டதால் விவசாயம் செய்ய முடியாமல் ,எந்த அளவுக்கு ஆழம் போனாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்கிறார். அது மட்டுமல்ல குடிநீரும் அங்கு பற்றாக்குறையாக இருக்கிறதாம் அந்த கிராமத்தில்!இப்படி எல்லாம் இயற்கை வளங்களை கூறு போட்டு ,விற்பதற்கு அரசியல் கட்சியினர் அந்தந்த கிராமங்களில் இருப்பதால் ,ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அதுமட்டுமல்ல ,
மேலும்,அந்த கிராமத்தில் எரிமேடை அமைப்பதற்கு அரசு பணத்திலே, அந்த ஊர் கிராம பஞ்சாயத்து தலைவர் வீடு கட்டிக் கொண்டாராம். எப்படி எல்லாம் மக்கள் இந்த போலி அரசியலால், போலி அரசியல்வாதிகளால், பாதிக்கப்படுகிறார்கள் ?என்பது இன்னும் கூட இந்த மக்கள் சிந்திக்கவில்லை.

மேலும்,அந்த நேரத்திற்கு காசு கொடுத்தால், அந்த நேரத்திற்கு அண்டா ,குண்டான் கொடுத்தால் ,அந்த நேரத்திற்கு பணத்தை கொடுத்து, நாலு நல்ல வார்த்தை பேசி, அவர்கள் கையில் ,காலில் பலமுறை கும்பிடு, போட்டு உனக்கு இதை செய்கிறேன். அதை செய்கிறேன் என்று ஆசை வார்த்தை சொல்லி, ஏமாற்றிக் கொண்டிருக்கும் , போலி அரசியல்வாதிகளிடமும், ,ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தும், பத்திரிகை ,தொலைக்காட்சிகள், பெரிய பத்திரிகை, என்று அதையும் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் சிந்திக்கவில்லை என்றால்!
மக்களை ஏமாற்றுவது எப்படி? என்ற சிந்தனையிலே, இன்றைய அரசியல் கட்சியினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எப்படி நல்லது செய்ய வேண்டும் ?என்று ஒரு சதவீத அரசியல் கட்சியினர் கூட, இன்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் தேர்வார்களா?

மேலும்,விஜய் போன்ற தலைவர்கள் ஏமாற்றவோ ,கொள்ளை அடிக்கவோ, விரும்பாத ஒருவர் ,அரசியலில் தேர்வு செய்யப்படும் வரை ,அரசியல் என்பது நாட்டு மக்களுக்கு ஏமாற்றும் தான்.
இங்கே விஜய் பெரிய அரசியல் கட்சி என்று இல்லையா? என்று கூட கேள்வி கேட்கலாம். நான் பெரிய அரசியல் கட்சி, சிறிய அரசியல் கட்சி என்ற பேதத்திற்கு இடமில்லை. நான் சொன்ன கருத்து! எது மக்களுக்கு நல்லது ?எது உண்மையானது? எது தேவையானது? இதை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றேன்.

அதேபோல் தான் ,எது பெரிய பத்திரிக்கை? எது சிறிய பத்திரிக்கை? என்பதை விட ,எது தேவையானது ?எது உண்மையானது? எது தரமானது ? எது நம்பிக்கையானது?இதுதான் தேர்வு செய்யப்பட வேண்டும். இனி மேலாவது,
இந்த மக்கள் திருந்துவார்களா? அல்லது உண்மையை புரிந்து கொள்வார்களா?