
திமுக மாதிரி ஒன்னாம் நம்பர் அரசியல் கேடிகள் வேறு எந்த கட்சியிலாவது பார்க்க முடியுமா? மேலும், திமுகவின் ஒரிஜினல்ட்டியை எங்களைப் போன்ற விஷயம் தெரிஞ்ச பத்திரிகையாளர்களிடம் காட்ட முடியுமா? ஏதோ கூலிக்கு மாரடைக்கிறவன், இல்லையென்றால், உங்களுடைய கட்சிக்கு ஆதரவு ஊடகங்கள், நீங்கள் சொல்வதை அப்படியே போட்டுக் கொண்டிருப்பார்கள்.
நாங்கள் அப்படியல்ல, மக்களுக்காக தான் பத்திரிக்கை. மக்களுக்காக தான் ஆட்சி ,அதிகாரம், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் மக்கள் அதிகாரத்தின் நோக்கம்.

மேலும், திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் தான் போதைப் பொருள் கலாச்சாரம் அதிக அளவில் இருந்தது. அது மக்களுக்கும் தெரியும் . போதை பொருட்கள் கடத்தல் மன்னன் ஜாபர் செரிஃப், திமுகவில் அயலாக அணி மாநில பொறுப்பில் இருந்தவன். அப்போதுதான் மத்திய அரசு இவனை கைது செய்கிறது.
மேலும்,எத்தனையோ கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், இந்த போதைப் பொருளால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். எங்கேயாவது மக்களாக பிடித்துக் கொடுத்தால் கூட ,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கூட்டம் மக்கள் இவர்களுடைய ஆட்சியின் அவல நிலையை மறந்து விட்டிருப்பார்கள் என்று ,இன்று அமைச்சரை மாற்று என்று சொல்லி ,மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இவர்கள் எல்லாம் என்ன நினைக்கிறார்கள் ?என்றால், மக்களைத் தொடர்ந்து, இந்த கார்ப்பரேட் தொலைக்காட்சிகளை வைத்தும், கார்ப்பரேட் பத்திரிகைகளை வைத்தும் ,ஏமாற்றலாம் என்று இப்படிப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள் தவறான கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் உண்மையைப் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் .யார் உண்மையை எழுதுகிறார்கள்? யார் பொய்யை சொல்கிறார்கள்? என்பதை அவர்கள் ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும்,எத்தனை பேர் சோசியல் மீடியாவில் கமெண்ட் போடுகிறார்கள்? இதில் அமைச்சர் ரமேஷ் சொல்லுகின்ற விளக்கத்திற்கும், இவர்கள் சொல்லுகின்ற விளக்கத்திற்கும், எது உண்மை என்று தமிழக முதல்வர் விஜய் ஜோசப் தான் முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் ,மற்ற கட்சிகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தாலும் ,இப்போது எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக! அன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது, இந்த போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்காமல் எங்கே போனார்கள்? இதுதான் தமிழக மக்களின் கேள்வி?

மேலும்,நீங்கள் இனி எத்தனை கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில், இப்படிப்பட்ட மக்களை ஏமாற்றக்கூடிய பேச்சுக்களை அரசியல் செய்து வெற்றி பெற முடியாது . மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.

மீண்டும், மீண்டும் ,இந்த கார்ப்பரேட்டுகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைத்தால் ,நீங்கள் தான் முட்டாளாகி அரசியலை விட்டே ,விலகி போய் விடுவீர்கள். இது உறுதி.
