தேர்தல் ஆணையம் ! டிஜிபி சந்திப் ரத்தோர் ராய் நியமனத்தால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சரி செய்வாரா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிக மோசமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதற்கு முன் டிஜிபி ஆக இருந்த வெங்கடேசனை தேர்தல் ஆணையம் அப் பொறுப்பில் இருந்து நீக்கி ,அவருக்கு பதிலாக சந்திப் ராய் ரத்தோர் என்பவரை நியமித்துள்ளது.

மேலும்,இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து, தேர்தலை நியாயமான முறையில், அனைத்து அரசியல் கட்சிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவருக்கான முக்கிய கடமை.

மேலும், திமுகவின் அராஜகங்கள் ஒவ்வொரு தேர்தலிலும், எதிரொலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அது இந்த தேர்தலிலும் ,மிகப்பெரிய அளவில், ரவுடிசத்தை கட்டவிழ்த்து விட்டு, சட்டமன்ற தேர்தலில் பிரச்சனையை தமிழ்நாட்டில் உருவாக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்து வருகிறது.

மேலும் , திமுக தோற்கும் நிலையில் ஒவ்வொரு தொகுதி வேட்பாளரும் வருகின்றபோது, அவர்கள் அங்கே கலவரத்தில் ஈடுபட்டு வாக்காளர்கள், சுதந்திரமாக வாக்களிக்க முடியாத சூழ்நிலைக்கு கொண்டு , செல்வார்கள் .அதுதான் அவர்களுடைய அது வெற்றி என்று நினைத்தாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை அங்கு ஏற்பட்டு விடுகிறது அல்லவா?

மேலும், டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் திமுக அரசியல் கட்சி ரவுடிகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு, நடவடிக்கை எடுப்பாரா? இல்லையென்றால், இது தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்துமா? என்ற சூழ்நிலை உருவாகலாம் என்று எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்களிக்கும் போது, பொது மக்களின் பாதுகாப்பு மிக, மிக முக்கியமானது. அந்த நேரத்தில்,காவல்துறையினர் இப் பிரச்சனையை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்? இது பெரும் சவாலாக இருக்குமா? உளவுத்துறை !இது பற்றி மத்திய அரசுக்கு என்ன தகவல் கொடுக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *