
நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு, நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது .

ஆனால், மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கே, சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி கற்பக விநாயகம் நீதியரசரிடம் கூட விவாதித்து இருக்கிறேன். அவரும் இது நியாயமானது இல்லை என்று தான் தெரிவித்துள்ளார். மேலும்,

இந்த உண்மைகளை மத்திய ,மாநில அரசின் செய்தி துறைக்கு, பலமுறை செய்திகள் மூலம், மக்கள் அதிகாரம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு தேவை கமிஷன், அதை யார் கொடுப்பார்கள்? இந்த பத்திரிகைகளால் முப்பது சதவீதம் கொடுக்க முடியாது. அதனால், மந்திரிக்கும், பயனில்லை. நமக்கும் பயனில்லை. எப்படி கொடுப்பார்கள்?

மேலும், ஊழலுக்கு ஆதரவாக இருந்தால் தான், மக்களிடம் இந்த ஊழல்வாதிகள் நல்லவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இவர்களை வைத்து இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் சலுகை, விளம்பரங்களை, மக்களுடைய வரிப்பணத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

இதற்காக பல ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் அதிகாரம் போராடி வருகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து ,தகவல் உரிமை சட்டத்தில், இது பற்றி கேள்வி கேட்டால், என்ன பதில் கொடுக்கிறார்கள், என்றால்! பதில் அளிக்க இயலாது. என்ற ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.

மேலும்,நான் கேட்பது, இவர்களுடைய சொந்த குடும்பத்திலோ, அல்லது தனிப்பட்ட முறையில் ஆன உறவுகளிலோ, சொந்த விஷயங்களிலோ ,செய்தித் துறை அதிகாரிகளை கேட்கவில்லை.
எல்லா கேள்விகளும், பத்திரிகை துறை சம்பந்தப்பட்ட கேள்விகள். தவிர, இது ஒன்றும் நாட்டின் இராணுவ ரகசியம் கிடையாது. இந்த கேள்விகள் எல்லாம், இதுவரை யாரும் கேட்டு இருக்க மாட்டார்கள். அதனால், ஒரே வார்த்தையில் பதில் அளிக்க இயலாது.
மேலும், இப்படிப்பட்ட சர்குலேஷன் சட்டத்தை வைத்து, அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கின்ற பத்திரிகைகள் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டார்களா? அப்படி ஒழித்து இருந்தால், ஏன் ? இந்தியாவில் இருந்து , இவ்வளவு கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கொண்டு போய் போட்டு இருக்கிறார்கள். இதற்கு மத்திய மாநில அரசின் செய்தித்துறை பதிலளிக்க முடியுமா?

மேலும், வெளிநாடுகளில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள். அதற்கெல்லாம் தமிழ்நாட்டில் நிதி இருக்கிறது. ஆனால், இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க நிதி இல்லை . இப்போதாவது ஊழலுக்கு எதிராக போராடுகின்ற பத்திரிக்கைகளுக்கு இந்த உண்மைகள் புரிகிறதா?

மேலும் ,அதே நிதி ஊழலுக்கு ஆதரவாகவும், ஊழல்வாதிகளின் ஊழலை ,மக்களிடம் நியாயப்படுத்துகிற பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்க நிதி இருக்கிறதா? இதற்கான தீர்வு தான் என்ன? வியாபாரம் அரசியல், அரசியல் கட்சியினர் அடாவடித்தனங்கள் ,ஊழல்வாதிகளின் ஊழலை நியாயப்படுத்தும், பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கலாம்.

ஆனால், ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு தினசரி, மாதம், வாரம் என்று பிரித்து ,அதில் சர்குலேஷன் சட்டத்தை வைத்து, ஏமாற்றலாம். இதுதான் செய்தி துறையின் முக்கிய வேலை.மேலும், செய்தித்துறை ஆட்சியாளர்களின் எடுபிடி வேலையை செய்து கொண்டிருக்கிறது.இதனால் போலிகள் பத்திரிக்கை துறையில் அதிகரிக்கிறது. மேலும், இவர்களுக்கு, பத்திரிக்கை என்றால் எதற்கு? என்று தெரியால் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ,தமிழ்நாட்டில் ஒரு பத்திரிக்கை கூட ,மக்கள் அதிகாரம் தவிர, இந்த உண்மைகளைக் கேட்டு போராடவில்லை. இந்த உரிமைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்கவில்லை. ஒரு பக்கம் இந்த சப்ஜெக்ட் தெரியாது. இன்னொரு பக்கம் பத்திரிகை என்றால், ஆட்சியாளர்களின் பின்னால் நின்றால்! தான் நமக்கு சலுகை, விளம்பரங்கள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட சுயநலத்திற்கு பத்திரிகையே நடத்த தேவையில்லை. அதற்கு அரசியல் கட்சிக்காரர்களே வாயிலே, பத்திரிக்கை நடத்தி விடுவார்கள். நாங்கள் செய்வதெல்லாம் சரியானது. முடிஞ்சு போச்சு. மேலும்,பல சிறிய பத்திரிகைகள் RNI இருந்தால், பத்திரிகை என்று நினைத்து, ஏதோ காப்பி அடித்தோ அல்லது அந்தப் பகுதி அதிகாரிகளை மிரட்டியோ பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளர்கள், பத்திரிகையின் அடையாள அட்டை தான், பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி தகுதி இல்லாத பத்திரிகைகள், நாட்டில் குப்பை குளங்களாக, ஒருபுறம், இவர்களுக்கு சங்கம் ஒரு புறம், இது தவிர, பல கார்ப்பரேட் ஊடகங்கள், தேவையில்லாத செய்திகளை பல பக்கங்கள் தான் பெரிய பத்திரிக்கை என்று மக்களுக்கு கொடுத்து ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு பக்கம் கார்ப்பரேட் ,இன்னொரு பக்கம் இந்த சிறிய பத்திரிகைகள், இதை வரைமுறைப்படுத்தாத வரை பத்திரிக்கை துறையை சீர் செய்ய முடியாது. அதற்கான தீர்வு தான் என்ன? மேலும்,மாநில அரசின் செய்தி துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டால் சரியான பதில் கொடுப்பதில்லை.

அதேபோல், மத்திய அரசின் செய்தி துறையில் கேட்டாலும் ,இதே பதில்தான் சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சியாளர்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, பத்திரிக்கை என்று தீர்மானித்து விட்டார்கள். ஒருவர் கூட ,மக்களுக்கு பத்திரிக்கை என்று தீர்மானிக்கவில்லை.
அதனால் தான் ,பத்திரிக்கை துறையில் இவ்வளவு போலிகள்! மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு தகவல் ஆணையத்தின் கிடைக்கும் என்று தான், நம்புகிறேன். இது பற்றி இன்று தகவல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அதிகாரம் கொண்டு செல்கிறது.

மேலும்,நிச்சயம் மாற்றத்தை நோக்கி மக்களுக்காக பத்திரிகைகள் , ஊழலுக்கு எதிரான போராடுகின்ற பத்திரிகைகள் . இதற்கான தீர்வு தகவல் ஆணையம் ஏற்படுத்துமா? சரியான பதிலை கொடுத்தாலே போதும். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்.