
ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியில், சாமானிய பத்திரிகைகள், நடுநிலையான பத்திரிகைகள் ,மக்களுக்கான பத்திரிகைகள் ,செய்தித் துறையின் மூலம், அவர்களின் அதிகாரத்தால் ,மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது .

பத்திரிக்கை என்றால் என்ன? என்று படிக்காத அரசியல் கட்சிக்காரர்களைப் போல், அந்தப் பின்புலத்தில் வந்த பி.ஆர்.ஓ க்களுக்கு என்ன தெரியும்? கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் தான் பத்திரிக்கை என்று தீர்மானித்து மக்களிடம் உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகளுக்கு மிகப் பெரிய சோதனையான கால கட்டம் ஸ்டாலின் ஆட்சியில், நடந்து முடிந்த கொடுமை வேதனையானது.

மேலும், இது பற்றி எவ்வளவோ செய்திகள் மக்கள் அதிகாரத்தில் செய்தித் துறை அதிகாரிகளுக்கு, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி வைத்தியநாதனுக்கும், இது புரியவில்லை. நேரடியாக சொல்லிப் பார்த்தும், அவர் அங்கே அரசியல் அடிமையாக உட்கார்ந்து இருக்கிறார்

மேலும், கார்ப்பரேட் பத்திரிக்கை பின்னணியில் உள்ளவர்கள் மட்டும்தான் செய்தித் துறையை ஆளுமை செய்து கொண்டிருக்கிறது. ஏதோ எங்களைப் போன்ற ஒரு சில பத்திரிகைகள் தான், இந்த உண்மையைக் கூட புரிந்து, கேள்வி கேட்கிறோம்? எழுதுகிறோம். ஆனால், வந்த பிறகு நானும் கேட்டேன், நானும் எழுதினேன், என்று பேசக்கூடிய போலி கூட்டங்கள் பத்திரிகை துறையில் அதிகரித்து விட்டது.

ஒரு செய்தியை ஒழுங்காக எழுத தெரியாதவர்கள் எல்லாம், இன்று பத்திரிகை ஆசிரியர் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடந்த நிகழ்வுகளை செய்தியாக்குவது பெரிய காரியமல்ல . ஒருவர் பேசியதை செய்தி என்று வெளியிட்டு தன்னையே ஆசிரியர் என்று பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருப்பது அதுவும் பத்திரிகை அல்ல.

அது ஒரு நிருபர் செய்யக்கூடிய வேலை. ஆனால் ஆசிரியர் அதைவிட ஒரு கடுமையான பணி, பத்திரிக்கை நடத்துபவர்களுக்கு உண்டு. அதுதான் அந்த பத்திரிகையின் செய்திகளின் தரம். அந்த தரத்தை பற்றி செய்தி துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

மேலும்,அரசு செய்தியை வெளியிடுவதற்கு ஒரு துறையை ஏற்படுத்தி, அது பத்திரிக்கை துறையின் அதிகார மையமாக ஆளுமை செய்வது, பத்திரிக்கை சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்த முடியாது. அதனுடைய உரிமைகள் கூட பறிக்கப்படும் போது பத்திரிக்கை சுதந்திரம் பேசுவதற்கு இடமே இல்லை.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிக்கை ,உண்மையிலேயே வரவேற்க வேண்டிய அறிக்கை தான். அதேபோல், விஜயும் தேர்தல் அறிக்கையை போட்டி ,போட்டு தான் கொடுத்திருக்கிறார். இந்த அறிக்கையில் ,சமூக நலன் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

அனுப்பப்பட்ட ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அது எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான நன்றி பத்திரிக்கை துறையில் பணியாற்றக்கூடிய சமூக நலன் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கோரிக்கை கடிதம் ஆனது விஜய் மற்றும் பிஜேபியின் நாயனார் நாகேந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் ,இவர்கள் யாரும் அது பற்றி பேசவில்லை. பிஜேபி தமிழ்நாட்டில் அவர்களுடைய சொந்த நலனுக்கான கட்சியாக அதை மாற்றி விட்டார்கள். மக்கள் நலனுக்கான அரசியல் கட்சி பிஜேபி செயல்படவில்லை என்பது தான் இதன் மூலம் தெரிய வருகிறது. மோடி செய்வதை வைத்து மக்கள் வாக்களித்து விடுவார்கள்.

இங்கே நாம் மக்களின் கோரிக்கையோ, இது போன்ற பத்திரிகைகளின் கோரிக்கையோ, எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு தவறான பாதையில் பிஜேபி சென்று கொண்டிருக்கிறது. என்பதை அக் கட்சியின் உயர் மட்டும் புரிந்து கொள்வார்களா?
மேலும் ,கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பத்திரிகை துறையில், இந்த பத்திரிகைகளுக்கு ஸ்டாலின் செய்த துரோகம் மிகப்பெரியது. அது என்ன என்றால், கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு ஒரு விதமாகவும், சாமானிய பத்திரிகைகளுக்கு ஒரு விதமாகவும், எந்தவித சலுகைகளும் ,உரிமைகளும் கொடுக்கவில்லை.

மேலும் ,பத்திரிக்கை துறை என்பது ஒரு அறிவு சார்ந்த துறை !இந்த துறையில் பணக்காரனுக்கும், ஏழைக்கும் உள்ள வித்தியாசத்தை ஸ்டாலின் ஏற்படுத்தி விட்டார்.
மேலும்,இவருக்கு பத்திரிக்கை பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லை. கருணாநிதி யாவது காலையில் எழுந்து, பத்திரிகைகளில் உள்ள செய்திகள் என்ன ?என்றாவது கேட்பார் . படிப்பார்.அதே போல் ஜெயலலிதாவாவுது, எல்லா பத்திரிகைகளையும் படிப்பார் .

அது மட்டுமல்ல, உளவுத்துறை மூலம் வருகின்ற செய்திகளையும் படிப்பார். அப்போதுதான் நாட்டில் என்ன நடக்கிறது? என்னென்ன விஷயங்கள் நம்முடைய காதுக்கு வராமல், ஏதாவது மறைக்கப்படுகிறதா ?என்பதை எல்லாம் தெரிந்து கொள்வார்.

ஆனால், ஸ்டாலின் போல ,ஒரு தகுதியற்ற முதலமைச்சரை என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்ததும் இல்லை. தமிழகமும் இதுவரை பார்த்ததில்லை. அறிவுக்கு ஏதுயா! ஏழை? பணக்காரன்? பணத்துக்கு தான் ஏழை ?பணக்காரன்?
சொத்துக்கு தான், ஏழை? பணக்காரன்? நீ வசதியான காரில் போகலாம் ஏழை சாதாரண பைக்கில் போகலாம் .அதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஒரு அறிவு சார்ந்த பத்திரிகையில் என்ன ஏற்றத்தாழ்வு இருக்கிறது ?
செய்திக்கு அர்த்தம் தெரியாத கூட்டம் எல்லாம், செய்தித் துறையில் போட்டு விட்டு ,நாங்கள் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்..

மேலும்,பத்திரிக்கையில் அதன் தரத்தை எப்படி பார்க்க வேண்டும் ?என்று கூட தெரியாமல், அரசு செய்தியை வைத்து பத்திரிக்கையை தீர்மானிக்க முடியுமா? இல்லை அரசு செய்தி மட்டுமே போட்டால், அது பத்திரிகையா?
இது பற்றி எதுவும் தெரியாதவர்கள் ,செய்து துறையில் பணியாற்றினால், ஸ்டாலின் போல தகுதியற்ற முதல் அமைச்சர்கங்ள் ,இருந்து விட்டுப் போன சரித்திரம் தான், தமிழ்நாட்டுக்கு பத்திரிக்கை துறையில் எழுதி வைக்க முடியும்.

மேலும்,இந்த செய்தி துறையில், அதிகாரிகள் போர்வையில்,அரசியல் கட்சியினர் போல் , இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி செயல்படுவதின் விளைவு பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில், கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் தலைமை நிருபர்கள் மட்டுமே முக்கிய பொறுப்பாளர்களாக அதில் இருக்கிறார்கள். அதனால், இந்த சமூக நலன் பத்திரிகைகளை பற்றி கவலைப்படாமல், அவர்களுடைய கோரிக்கையை அலட்சியம் செய்து,
இவர்கள் இந்த ஆட்சியை ஜால்ரா பத்திரிகைகள் மூலம் முட்டு கொடுத்து, காப்பாற்றி விட்டதுபோல, இவர்கள் நினைப்பு ,அதே போல் அந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளின் நினைப்பு. ஏன்? இப்போது இவை எல்லாம் ஏன் மக்களிடம் எடுபடவில்லை? மேலும்,

எனவே , நாட்டில் பத்திரிகை துறையில்,போலிகளும் ,தகுதி இல்லாத கூட்டமும் போட்டி ,போட்டு இன்று பத்திரிகை துறை மக்களின் விமர்சனத்திற்கும், அவர்கள் கேவலமாக பேசும் அளவிற்கும், கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். இருக்கட்டும் இதற்கு எல்லாம் நிச்சயம் காலம் பதில் சொல்லத் தான் போகிறது….!
மேலும்,வருகின்ற அரசியல் மாற்றத்தின் புதிய ஆட்சி! போலிகளை களை யெடுத்து, தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் அதன் உரிமைகள் கொடுக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம் .