மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன் ராஜினாமாவா? அல்லது ராஜினாமா செய்ய சொன்னார்களா?-பிஜேபி அரசியல் வட்டாரம்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில்! ஒரு மத்திய இணை அமைச்சராக இருந்து கொண்டு, செய்தித் துறைக்கு ஐந்தாண்டுகளுக்கு மேல் இருந்து, தமிழ்நாட்டு பத்திரிக்கை நலனில் அக்கரை செலுத்தாத எல்.முருகன், இப்போது பிஜேபியை பலப்படுத்த ராஜினாமா செய்கிறாரா?

ஏன் இதுவரை பிஜேபி கட்சியை பலப்படுத்த இவர் செய்யவில்லை? இவர் பிஜேபியின் மாநில தலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். அப்போதும் செய்யவில்லை. பிறகு, மத்திய இணை அமைச்சர் ஆகவும் இருந்திருக்கிறார் .அப்போதும் செய்யவில்லை.

மேலும்,எல்.முருகன் என்னதான் செய்தார்? பத்திரிக்கை துறைக்கு என்ன செய்தார்? அமைச்சர் பொறுப்புக்கு என்ன செய்தார்? பிஜேபிக்கு என்ன செய்தார்? இந்த கேள்வி எல்லாம் மோடி ஒருவேளை கேட்டு இருப்பாரோ, இல்லை அமித்ஷா கேட்டிருப்பாரோ,யாருக்கு தெரியும்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மக்கள் அதிகாரம் இணையதளத்தின் , செய்தியில், எதற்கும் உதவாத ஒரு மத்திய இணையமைச்சரை பிரதமர் நரேந்திர மோடி போட்டிருக்கிறார். என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அது ஒரு வேலை ,உளவுத்துறை பிரதமர் மோடி இடம் சேர்த்திருக்குமோ? எது எப்படியோ, ஒரு டம்மி தமிழ்நாட்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது, பிஜேபிக்கும் நல்லது,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *