ரஜினியின் ஆசிர்வாதத்தோடு, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! தமிழகத்தில் மக்களுக்கான அரசியலை ஏற்படுத்துவாரா? – தமிழக மக்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழகத்தில்! அரசியல் கட்சிகள் பல நூற்றுக்கணக்கில் இருந்தாலும், மக்களுக்கான அரசியல் கட்சி எது? என்ற இடைவெளி இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த இடைவெளியை அண்ணாமலை சரி செய்ய முடியுமா? அதை சரி செய்தால் தான், இவரால் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும்? மேலும், அண்ணாமலைக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறது .இல்லை என்று மறுக்க முடியாது.

மேலும் ,இவர் கட்சி ஆரம்பித்தால்! பிஜேபியில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் வெளியே வருவார்கள். அதிமுக மற்றும் தவெக விலிருந்தும் வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. அதாவது படித்த ஜெனரேஷன் அண்ணாமலை பின்னால் செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.தவிர, இங்கே அரசியல் தரம் இருக்கும்.

இருப்பினும், அண்ணாமலை பிஜேபியில் இவரைப் பார்க்க மணி கணக்காக காத்திருப்பது போல், இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. மக்களை நேசிக்கக் கூடிய தலைவராக அண்ணாமலை வர வேண்டும் என்றால், அவர் எளிமையானவராக இருக்க வேண்டும்.

மேலும்,இப்போது இருக்கக்கூடியவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு இவர்கள் காஸ்ட்லியாக இருக்கிறார்கள்.

மேலும்,இவர்கள் பின்னாடி பத்து பாடி கார்டு, கட்சியின் அடியார்கள் கூட்டம் இது எல்லாம் மக்களுக்கான அரசியல் இல்லை. இந்த மாற்றத்தை யார் ?தமிழ்நாட்டில் உருவாக்குகிறார்களோ இனி அவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியும்.

மேலும்,சுருக்கமாக சொன்னால், பழைய காலத்தில் அரசியல் எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு அண்ணாமலை கொண்டு வர வேண்டும். போட்டிகள் எவ்வளவு இருந்தாலும் ,அதனை கடந்து செயலால் வெற்றி பெற முடியும்.

மேலும், மக்கள் எதிர்பார்க்கின்ற ஊழலுக்கு எதிரான ஆட்சியை நிலை நிறுத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, மக்களை ஏமாற்றக் கூடாது.

இது எல்லாம் தமிழக அரசியல்வாதி என்று ஊரை ஏமாற்றும் கூட்டம் ,என்றும் சொல்லலாம். போலி அரசியல்வாதிகள் என்றும் சொல்லலாம். மேலும்,இந்தப் போலி அரசியல் செயல்பாட்டில் இருந்து வித்தியாசமான, மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்தால், அண்ணாமலையால் ஜெயிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *