
நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது.

அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா?
மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! முதல்வர் ஜோசப் விஜய் இந்த சட்டம் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், பல லட்சம் கோடிகள், பல ஆயிரம் கோடிகள், பல நூறு கோடிகள், சட்டத்தின் படி நியாயப்படுத்தி, நீதிமன்றம் செல்லக்கூடிய அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் எம்பிக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மேயர்கள் ,கவுன்சிலர்கள் ,பஞ்சாயத்து தலைவர்கள்,,சேர்மேன்கள், அரசியல் கட்சியினர், இவர்கள் அடிக்கக்கூடிய கொள்ளைக்கு என்ன சட்டம் கொண்டு வரப் போகிறீர்கள்? மேலும்,
நீதிமன்றங்கள் பலமுறை இப் பிரச்சனைக்கு கேள்வி எழுப்பியுள்ளன, தவிர,பல முக்கியத் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளன. அதாவது

சொத்துக் குவிப்பு வழக்குகள் !இந்தியாவில் பல முன்னணி அரசியல்வாதிகள் மீது “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக” (Disproportionate Assets) வழக்குகள் தொடரப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.சிலர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளனர்.பெரும்பாலானார் தண்டனை பெறாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் அது ஏன்?

மேலும்,தேர்தல் பிரமாணப் பத்திரம் (Affidavit), தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தங்களின் சொத்து விவரங்கள், கடன்கள் மற்றும் வருமான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கும் ,தேர்தல் ஆணையத்திற்கும், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதே உச்ச நீதிமன்றம் தான். இதன் மூலம் பொதுமக்கள் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பைத் தெரிந்துகொள்ள முடிகிறது.மேலும்,
200% – 300% லாபம் மற்றும் முதலீடு எப்படி சாத்தியமாகிறது?
ஒரு சாதாரண தொழிலதிபருக்கு 10% முதல் 20% லாபம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய லாபம் வருவதன் பின்னணியில் சில சட்டவிரோத உத்திகள் இருப்பதாகப் புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகின்றன. அது என்ன என்றால்?

அதிகார பலம் மற்றும் “குரோனி கேபிடலிசம்” (Crony Capitalism): ஆட்சியில் இருக்கும்போது தங்களுக்குச் சாதகமான நிறுவனங்களுக்குப் பெரிய திட்டங்களை (Tenders) ஒதுக்குவது, அதற்குப் பதிலாக மறைமுகப் பங்குகளை (Shares) அல்லது கமிஷன்களைப் பெறுவது, மேலும், இவர்கள்
பினாமி பரிவர்த்தனைகள், தங்களின் உண்மையான வருமானத்தை நேரடியாகக் காட்டாமல், தங்களுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் அல்லது போலி நிறுவனங்கள் (Shell Companies) பெயரில் சொத்துக்களை வாங்குவது இதை ஏன் எடுக்க முடியவில்லை? மேலும்,

கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது (Money Laundering): சட்டவிரோதப் பணத்தை ஏதோ ஒரு தொழிலில் முதலீடு செய்து, அதை நியாயமான லாபம் போலக் கணக்குக் காட்டுவது இதையெல்லாம்

நீதிமன்றம் இந்தக் கணக்குகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறதா?
இல்லை, நீதிமன்றங்கள் இந்தக் கணக்குகளை அப்படியே குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில்லை.
ஒரு அரசியல்வாதி மீது புகார் எழும்போது, நீதிமன்றம் நேரடியாக விசாரிக்காமல் சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (ED), லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போன்ற சிறப்புப் புலனாய்வு அமைப்புகளை விசாரணை நடத்த உத்தரவிடுகிறது.

இந்த அமைப்புகள் சொத்துக்களின் சந்தை மதிப்பு, வங்கிப் பரிவர்த்தனைகள், ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தாலும், அதற்குதகுந்த ஆதாரங்கள் இல்லாத பட்சத்திலோ அல்லது புலனாய்வு அமைப்புகள் சரியாக வழக்கை நடத்தாத போதோ, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தில் உள்ள துவாரங்களைப் பயன்படுத்தித் தப்பித்து விடுகிறார்கள். இந்த நிலைமை ஏன்? அவர்களுக்கு மட்டும் ஒரு பாரபட்சம்?

இதற்கு இன்னும் ஏன் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படவில்லை?

உண்மையில்! இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act) மற்றும் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் போன்ற மிகக் கடுமையான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றைப் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் அந்த சவால்களை முறியடிக்க இன்னும் கடுமையான சட்டத்தை

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிராக இன்னும் கடுமையான சட்டங்களை உருவாக்குவதில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில்லை? மேலும், நீண்ட கால விசாரணை ,ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு இறுதித் தீர்ப்பைப் பெற 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகிறது. இந்த இடைவெளியில் பல சாட்சிகள் கலைக்கப்பட்டு விடுகிறார்கள்.மேலும்,
அரசியல் செல்வாக்கு, புலனாய்வு அமைப்புகள், பல நேரங்களில் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும், இதனால் எதிர்க்கட்சியினர் மட்டுமே குறிவைக்கப்படுவதும் ,சட்டத்தின் நடுநிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. எனவே!

மக்களின் குரல்! “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று சொல்வதை விட, “சட்டம் அனைவருக்கும் சமமாக, மிக வேக மாகச் செயல்பட வேண்டும்” என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும்,அரசியல்வாதிகள்! தங்களின் வருமானத்திற்கான ஒவ்வொரு பைசாவிற்கும், பொதுவெளியில் கணக்குக் காட்டும் வெளிப்படைத்தன்மை வரும் வரை மக்களின் இந்தக் கேள்வி தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.

மேலும் ,ஏன் ?மத்திய மாநில அரசு !இன்னும் கடும் சட்டம் கொண்டு வரவில்லை? முதலில் இங்கே கொண்டு வாருங்கள். இவர்களுக்கு ஒரு சட்டம் ?அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டமா?
மேலும்,மலையையே கொள்ளை அடித்து விடுகிறார்கள். அப்படி கொள்ளை அடிக்க பட்ட ஆட்சியாளர்கள் மீது மக்களால் ஒன்றும் கேள்வி கேட்க முடியவில்லை ஏன்? மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரம்! அப்படிப்பட்ட மக்கள் அதிகாரம் இருந்தும் ,அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றாலும், அங்கே நீதியை நிலை நட்ட முடிகிறதா?

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் ஊழல்! தமிழ்நாட்டில் பல லட்சம் கோடி ஊழல்! அப்படி ஊழல் செய்து சம்பாதித்த திமுக, அதிமுகவை ஒன்றுமே செய்ய முடியவில்லை .இந்த ஊழல்வாதிகள் எல்லாம் பரம்பரை பணக்காரர்கள் அல்ல.

மேலும், இவர்களுக்கு எப்படி இதனை கோடி சொத்து வந்தது? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ன ஆதாரத்தை காட்டுவார்கள்? என்ன பிசினஸ் ?என்ன தொழில்? எப்படி வந்தது? இது பற்றி முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ?
இதற்கு தமிழக முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் ?என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி?
