
விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய புள்ளி! எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தனையும் இருந்தும், அவரை தமிழக வெற்றிக்கழகம் சேர்த்துக் கொள்ளலாமா ?வேண்டாமா? என்ற ஒரு யோசனையில் காலம் கடத்தி வருவதாக தகவல்.

மேலும், விராலிமலை தொகுதி பொறுத்தளவில் இவர் சுயாட்சியாக நின்றாலும், வெற்றி பெறக்கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ,அப் பகுதி மக்கள். இருப்பினும், விஜய் பாஸ்கர் மீது ஏற்கனவே, பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை பாய்ந்தால், அது தமிழக வெற்றிக்கழகத்திற்கும் பாதிக்கும் அல்லவா? அந்த யோசனையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இருப்பதாக தகவல். பெரும்பாலும் அதிமுக ,திமுகவில் இருக்கக்கூடிய ஊழல் புள்ளிகளே அதிக அளவில் கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது கூட வேலுமணி மற்றும் தங்கமணி கூட திமுகவில் சேர இருப்பதாக தகவல். ஒருவேளை அவர்கள் இருவரும் சேர்ந்தால் அவர்களுடைய அரசியல் என்பது பீல்ட் அவுட் தான். இன்னொரு தகவலும் வருகிறது.

அதாவது விஜயபாஸ்கரும், சி.வி .சண்முகமும் இணைந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் தகவல். இப்படி அரசியலில் நேர்மையானவர்கள் ,அரசியலுக்கு வரக்கூடாது. அப்படி தான் திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தது.
மேலும்,ஒவ்வொரு அரசியல் நிர்வாகிகள் பின்னாடி ,குறைந்த பட்சம் 500 லிருந்து 1000 ரவுடிகளும் ,வெத்து வெட்டுகளும் கட்சி என்று எடுப்பு வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி இருந்தால், எப்படி தகுதியானவர்கள், நேர்மையானவர்கள், அரசியலுக்கு வர முடியும்?

மேலும் தமிழக வெற்றிக்கழகம் ஊழலுக்கு எதிரான அரசியல் என்பதை ஊழல் வழக்கு உள்ளவர்களை ,ஊழல்வாதிகளையும் சேர்த்துக்கொண்டு எப்படி நேர்மையான அரசியலை மக்களுக்கு கொடுக்க முடியும் ?இந்த கேள்வியில்தான் தமிழக வெற்றி கழகத்தில் இதற்கான கால நீடிப்பு செல்கிறது.
இது ஒருவேளை தூய்மையான அரசியலுக்கு தேவையற்றது என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கருத்து .
