
திமுக வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏ க்களை வைத்து ஆட்சி அமைத்தல் ,அது எப்படி இருக்கும்? அல்லது இருக்கப் போகிறது? மேலும்,
திமுக மக்கள் விரோத சக்தி ,தீய சக்தி என்று சொல்லிவிட்டு, இன்று அவர்களின் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது தவிர,

அவர்களுக்கு மந்திரி பதவியும் கொடுத்தால் ,விஜயின் அரசியல் மக்களுக்கான அரசியலாக அது இருக்காது. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் அராஜகங்களை தட்டிக் கேட்காமல், அவர்கள் போடும் பிச்சையை வாங்கிக் கொண்டு, கம்யூனிஸ்டுகள் ,திருமாவளவன், போன்ற கட்சிகள், ஐந்து வருடம் அங்கேயே இருந்தார்கள்.

முடிந்த பிறகு மக்களுக்கு ஏதோ பணத்தை கொடுத்து, ஆளுக்கு இரண்டு சீட்டு ஜெயித்திருக்கிறார்கள். அவர்களை வைத்துக் கொண்டு ஆட்சி அமைத்தால், தமிழ்நாட்டில் விஜயால் நல்லாட்சி கொடுக்க முடியாது.
மேலும்,அவரால் அவருடைய தேர்தல் வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்ற முடியாது. தவறான பாதையில் விஜய் சென்று விட்டார். இவர் இந்த கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்தாலும் ,அது எத்தனை ஆண்டு ?எத்தனை மாதம் ?என்று தான் இந்த ஆட்சி நாட்களை தான் எண்ணிக் கொண்டிருக்கும்.

மேலும்,ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி இனி விஜயால் தர முடியாது. மக்கள் எதிர்பார்த்த ஒரு ஆட்சியை விஜயால் கொடுப்பது முடியாத காரியம். இதுவும் ஒரு மக்கள் விரோத ஆட்சியாக தான் இருக்கப் போகிறது. இவரை யாரோ தவறான வழியில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . விஜய்க்கு அரசியல் தெரியவில்லை.
மேலும்,தமிழ்நாட்டில் தற்போது இருக்கக்கூடிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில், நெருப்பின் மீது நடக்கக்கூடிய சூழ்நிலை !அந்த சூழ்நிலையில் அரசியல் நடத்தி இவர் எப்படி ஜெயிக்கப் போறார்? என்பது தான் மிகப் பெரிய கேள்வி ?

மேலும்,தான் வர மாட்டோம் என்று வாய்க்கு வந்த படி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதை நிறைவேற்ற முடியுமா? முடியாதா ?என்று கூட தெரியாமல் கொடுத்திருக்கிறார்.
மேலும் ,எதிர்கட்சிகள் இப்போது அதை எல்லாம் நிறைவேற்று என்று சொல்வார்கள். அதை எல்லாம் நிறைவேற்ற முடியுமா? என்பது மில்லியன் கேள்விகளாக உள்ளது.
தவிர,ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கொடுப்பதே, ஒரு மாதத்திற்கு 1500 கோடி என்றால் ,இவர் 2500 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 கொடுப்பதாக சொல்லிவிட்டார்.
இது தவிர, மாமன் சீர்வரிசை என்று ஒரு சவரன் இதெல்லாம் இனி பேப்பரில் தான் பார்த்துவிட்டு போக வேண்டும்.
மேலும்,தமிழ்நாட்டின் கஜானாவில் எங்கே இருக்கிறது இவ்வளவு பணம்? தவிர ,தமிழ்நாட்டின் வருமானம் என்ன ?கடன் எவ்வளவு? மேலும், திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி எவ்வளவு தேவைப்படுகிறது?

ஐந்தாண்டுகளுக்கு எவ்வளவு தேவைப்படும்? என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த போகிறோம்? இப்படி எதுவுமே தெரியாமல் இந்த இலவச அறிவிப்பு விஜயால் செயல்படுத்த முடியாது.
மேலும், சமூக நலன் பத்திரிகைகளுக்கெல்லாம் இதுவரை எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்காமல் திமுக ஆட்சியில் இருந்தார்கள். காரணம் இவர்களை எதிர்த்து உண்மை செய்திகளை வெளியிட்டு அதற்காக கொடுக்கவில்லை. இந்தப் பிரச்சனை எல்லாம் எப்படி சரி செய்யப் போகிறார்?

தவிர, தகுதியான பத்திரிகைகளுக்கு கூட அதைத் தேர்வு செய்து ,இவரால் கொடுக்க முடியுமா ? என்பதெல்லாம் சமூக நலன் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்து உள்ள கேள்வி?
அதேபோல் ,விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள், ஒவ்வொரு துறையிலும் இருக்கிறது.
இது தவிர ,அரசு ஊழியர்கள் பிரச்சனை? இவர் என்ன செய்யப் போகிறார்? இது எல்லாம் விளையாட்டான அரசியல் இல்லை.
மேலும்,சினிமாவில் அரசியல் காட்சிகள் நடத்துவது போல்! நிஜத்தில் அவ்வாறு நடத்த முடியுமா? – ஆசிரியர்.