
மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இலவசத்தை ஒழிக்காமலும், ஓட்டுக்கு பணம் வாங்காமலும் மக்கள் வாக்களிக்கும் வரை, நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற முடியாது.
மேலும்,ஊழல்வாதிகளை இந்த வாக்காளர்கள் தான் அவர்களை தான் உருவாக்குகிறார்கள். எதற்காக ஒருவருக்கு பணம் கொடுப்பார்கள்? ஏன்? ஒருவருக்கு இலவசத்தை கொடுப்பார்கள்? இந்த புரிதல் கூட இல்லாமல் மக்கள் வாக்களிப்பது வீண்.

இந்த தவறு! இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்கள் செய்த தவறு. பத்திரிகைகள் , தொலைக்காட்சிகள் ,இதைப் பற்றி வாய் திறக்காமல், அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் வீதி ,வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்,தாய்மார்களிடம் வாக்கு சேகரித்தார், விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார், இந்த செய்திகள், மக்களுக்கு தேவையில்லாத செய்திகள், மக்களிடம் திணிக்கப்படும் செய்திகள். மேலும்,
இது பற்றி பத்திரிக்கை என்றால் !அதன் நோக்கம் என்ன ?அது எதற்கு ?என்று படித்தவனுக்கு தான் இந்த உண்மை புரியும். பாமர மக்களுக்கு புரியாது. ஐடி கார்டு தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு இது புரியாது.

மேலும் ,செய்தித் துறையில் பணியாற்றியவர்கள், பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், இது மாத பத்திரிகையா? தினசரி பத்திரிகை எல்லாம் என்ன? என்ன செய்தி ?தினசரி மக்களுக்கு சொல்கிறது? யாருக்காக பத்திரிகை நடத்துகிறார்கள்? இதற்கே இவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. அப்படி இருக்கும்போது, இவர்களிடம், பத்திரிகையின் அதிகாரத்தை கையில் கொடுத்து விட்டு, காங்கிரஸ் ஆண்ட காலத்தில் , போடப்பட்ட தவறான சர்குலேஷன் சட்டம், இதை எதிர்த்து இந்த பத்திரிகைகள் எப்படி நாட்டில் வளர்ந்து மக்களிடம் உண்மைகளை கொண்டு செல்ல முடியும்?

தவிர,ஒரு பக்கம் வியாபார பத்திரிகைகள், இன்னொரு பக்கம் அரசியல் கட்சி பத்திரிக்கைகள், இதற்கு கொடுக்கக்கூடிய முன்னுரிமைகள்,சலுகைகள் எதற்கு?இவர்கள் ஆட்சியாளர்களோடு சேர்ந்து செய்யும் உள்ளடி அரசியல் மீறி, மக்களுக்கு எப்படி? உண்மைகள் சமூக நோக்கத்தோடு, நடுநிலையோடு, செயல்பட கூடிய பத்திரிகைகளின் செய்தி தரம் என்ன? இதுவாவது தமிழ்நாட்டின் செய்தித்துறை அதிகாரிகளுக்கு புரியுமா?

இந்த உண்மைகள் தற்போது மத்திய அரசின் செய்து துறை அதிகாரிகளுக்கு புரிந்திருக்கிறது. அவர்கள் இப்போது எந்தெந்த பத்திரிகை ?என்பதை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தவிர, மத்திய அரசின் அரசு அடையாள அட்டை கொடுக்கவும், தற்போதைய இயக்குனர் அருண் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய அமைச்சகத்தில் தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறை மற்றும் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் எப்படி செயல்படுகிறது? என்பதும் அதன் நோக்கமும் அவர்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை.
70% ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் பத்திரிக்கைத்துறை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படி என்றால், எந்த அளவுக்கு பத்திரிக்கை துறை செயல்படுகிறது ?என்பதை தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் வைஷ்ணவ் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை போல, ஏதோ ஒன்று, இரண்டு தமிழ்நாட்டில் இருந்தால், ,அதுவே தற்போது பெரிய விஷயமாக தான் நினைக்கிறேன். தற்போது மக்கள் பத்திரிக்கையை வாங்கி ஆனால் சர்குலேஷன் சட்டத்திற்கும் அச்சு ஊடகத்திற்கும், செய்தித் துறையில் முக்கியத்துவம் தருவதன் நோக்கம் என்ன? இணையதளத்தில் மக்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள் என்றால் இவர்களுடைய சுயநலம் என்ன? மேலும்,

இப்படிப்பட்ட பத்திரிகைகள் வளரவே கூடாது .அதை எல்லாம் ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படக்கூடிய அதிகாரிகள், மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் உள்ளடி வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதையும் மீறி இந்த பத்திரிகைகள் போராடி வெளிவந்து கொண்டிருக்கிறது. என்றால் கடவுள் கொடுத்திருக்கிற ஒரு சக்தி தான் இது.

மேலும்,வாக்காள பெருமக்கள் இதிலிருந்து எந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்? ஒரு பத்திரிக்கைக்கே அதன் உரிமையை பெறுவதற்கு போராட வேண்டி இருக்கிற இந்த நிலைமை என்றால்! இலவசத்தையும், ஓட்டுக்கு பணத்தையும், வாங்கி வாக்களிக்கும் உங்களுக்கும், உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கும், எப்படி அவர்களோடு போராட வேண்டி இருக்கும் ?என்பதை சிந்திப்பீர்களா?

மேலும்,இலவசத்தையும் ,பணத்தையும் கொடுப்பது, உங்கள் தலையில் அதையெல்லாம் வரியாக ஏற்றுவது, டாஸ்மாக் குடிகாரர்களுக்கு பாட்டில்கள் விற்பனையில், மின் கட்டணம் ஏற்றுவது, இப்படி எல்லாவற்றையும் உங்கள் தலையில் தான் கை வைக்கிறார்கள் . இன்னும் ஏன்? அது புரியவில்லை?
மேலும்,இதற்கு சரியான உதாரணத்தை சீமான் பேசியிருக்கிறார். அதை சொல்லி தான் ஆக வேண்டும். அதாவது ஒரு குற்றவாளி ராஜாவிடம் தண்டிக்கும் போது, அந்த ராஜா ஐம்பது மிளகாய் நீ கடித்து தின்ன வேண்டும். அல்லது 50 சவுக்கடி வாங்க வேண்டும். ஐந்து சவுக்கடி வாங்கும் போதே, முதுகில் வலி தாங்க முடியாமல் கத்துகிறார்கள். ஐந்து மிளகாய் கடிக்கும்போதே நாக்கில் தண்ணீர் கொட்டி வயிறு எரிகிறது. அப்போது அந்த குற்றவாளி மிளகாய் கடிக்கு அதிமுகவை போலவும், திமுகவுக்கு சவுக்கடி போலவும், இந்த இரண்டு கட்சிகளின் அவலத்தை தாங்கிக் கொண்டு ,மக்கள் மாற்றி, மாற்றி வாக்களித்து, இவர்களுடைய வாழ்க்கையின் போராட்டம் என்ன? என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். மேலும்,

பெண்களுக்கு அரசியல் கட்சியினர் கொடுக்கக்கூடிய அண்டாவும், குண்டாகவும், வாங்கும் போது எதற்கு கொடுக்கிறார்கள்? என்று கூட சிந்திக்காமல் வாங்குகிறார்கள். இன்று உங்களுக்கெல்லாம் பாதுகாப்பு இல்லாமல் ,உங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்குள், உங்கள் மனம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறது? நன்றாக போன பெண் பிள்ளைகள் வீட்டுக்கு திரும்பவில்லை என்றால், எந்த பெற்றோருக்கு தான் அந்த மனவலி இருக்காது.

மேலும்,காவல்துறையில் மனசாட்சி இல்லாதவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தவிர,மனசாட்சி இல்லாமல், பலர் பெண்களைப் பற்றி அவதூறாக பேசுகிறார்கள். திமுகவில் சமீபத்தில் பொன்ராஜ் என்ற நபர் பேசிய பேச்சு பெண்களையும் ,எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களையும் ,வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்,ஒவ்வொருவரும் ஒரு தாயின் கருவில் இருந்து தான் வெளிவந்திருக்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், உடன் பிறந்த அக்கா, தங்கைகள் இருக்கிறார்கள் .அவர்களுக்கெல்லாம் இந்த நிலைமை வந்தால், யார் தான் இதை ஏற்றுக் கொள்வார்கள்?
மேலும்,ஒரு நடிகர் பேசி உள்ளார் புதருக்குள் நடக்கின்ற விஷயத்திற்கு எப்படி வெளியில் உண்மை தெரியும் ? தவிர,பணக்காரன், பதவியில் இருப்பவன், ஆணவத்திலும், திமிரிலும் எதை வேண்டுமானாலும் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு என்ன சூழ்நிலை ஏற்பட்டது? என்பது கடவுளுக்கு தான் தெரியும். மேலும்,ஒரு பெண் தனியாக சென்றால், ஒரு ஆணை எதிர்த்து போராட முடியுமா?

இதை பற்றி துணிந்து நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் டி ஜி பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,வேறு எந்த அரசியல் கட்சியும், இவ்வளவு துணிந்து இதற்காக சட்டப் போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. விஜயின் அரசியல் மனிதபிமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மேலும்,அரசியல் என்பது ஆட்சியாளர்களோடும், அரசியல் கட்சியினரோடும், மக்கள் போராடுவதற்காக இல்லை என்பதை இலவசத்தையும் ,ஓட்டுக்காக பணத்தை வாங்கும் வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?