
ராகுல் காந்தி தொடர்ந்து பல மாதங்களாக வாக்குத் திருட்டு, வாக்கு மோசடி , என்று தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். அதோடு சேர்த்து பிஜேபியும் ,அதில் இணைத்து பேசுகிறார்.

வாக்குத்திருட்டு என்பது இவர்கள் ஒரு பெயரை புதுமையாக கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாக்குத் திருட்டு என்றால் என்ன ? ஒருவருடைய வாக்கை யார் திருடுவார்கள்? தேர்தல் ஆணையம் திருடுமா? அதனால அவர்களுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? இல்லையென்றால் பிஜேபி திருடிவிட்டதா? அல்லது மோடி திருடி விட்டாரா?

இப்படி பல அக்கப் போர் கிளப்பிக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சிகளின் அரசியலுக்கு பின்னால் என்ன இருக்கிறது? ஏன்? இப்படி புலம்பித் தவிக்கிறார்கள்? ராகுல் காந்தி ஒரு பக்கம் புலம்பல், தவிப்பு ,அவருடைய மீடியா பேச்சிலிருந்து தெரிய வருகிறது.

அதே போல் ஸ்டாலின் புலம்பல் பேச்சும் தெரிகிறது. இதைவிட ஒரு படி மேலே போய் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு தடையானை வாங்க ஓடிக்கொண்டிருக்கிறார். இதுக்கெல்லாம் பின்னால் என்ன இருக்கிறது? தேர்தல் ஆணையம் தவறு செய்தால் தானே, ஓட்டுகளை திருட முடியும் .

இப்படிப் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் வாக்காளர்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், எதிர்கட்சிகள். இதைப் பற்றி எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சிகளும் உண்மையை வெளிப்படுத்தவில்லை.

அது என்ன? தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் சீர்திருத்தத்தில் பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில் முதலாவதாக இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்கள் அந்த விலாசத்தில் இல்லாமல் இருப்பார்கள் ,அவர்களையெல்லாம் நீக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் தேர்தல் ஆணையத்தின் தவறா? அல்லது மத்தியில் ஆளுகின்ற பிஜேபியின் தவறா? எந்த தவறும் இல்லையே! இதற்கு ஏன் ?இவர்கள் இவ்வளவு புலம்பலும், போராட்டமும் மக்களை வாக்குத் திருட்டு என்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்? மேலும், ஒரு வேலை எதிர்க்கட்சிகளுக்கு கள்ள ஓட்டு போட முடியாது என்று புலம்புகிறார்களா ? அதுதான் இருக்குமா? ஏனென்றால்,

ஒருவர் ஒரு தடவை கையை வைத்து EVM மிஷின் பொத்தானை அழுத்தி ஓட்டு போட்டு விட்டால், மீண்டும் அவர் எங்கு சென்றாலும், கையை வைத்து அழுத்தும் போது ,அந்த மிஷின் வேலை செய்யாது .அப்படி என்றால் ,கள்ள ஓட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது .
அடுத்தது வாக்காளர்கள் இறந்து போனவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள், நீக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த பெயர்களை வைத்து ஆதார் மற்றும் ஓட்டர் ஐ .டி.களை வைத்து கள்ள ஓட்டு போட முடியாது. ஆக கூடி கள்ள ஓட்டு போட எதிர்க்கட்சிகள் கத்திக் கொண்டிருக்கின்றன.

இப்படி பல தொகுதிகள் இவர்கள் கள்ள ஓட்டின் மூலம் ஜெயிக்கப்பட்டிருக்கிறார்களா?இதற்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவரும் எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியும், இதற்காகத்தான் போராடுகிறார்களா? இந்தப் போராளிகள்.

இதனால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ,அவர்களுடைய பெயர்களை சேர்க்க முடியாது. அவர்களை வைத்து ஒரு பக்கம் ஓட்டு போட போராடுகிறார்கள். இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியர்கள் எவ்வளவு பேர் ? அந்தப் பட்டியலையும் NIA எடுக்க இப்படி தேர்தல் ஆணையம் மற்றும் NIA தோண்ட ஆரம்பித்து விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப வாக்குத் திருட்டு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் திருத்தப்பட்டியலில், வாக்காளர்கள் ஒவ்வொருவருடைய விலாசங்கள் கண்டறியப்படுகிறது. அப்படி கண்டறியும் போது, அவர்கள் எங்கு வாழ்ந்தார்கள்? அவர்களுடைய பூர்வீகம் என்ன? அப்பா ,அம்மா எந்த ஊர்? இப்படி எல்லாமே வெளி வருகிறது. இவர்களை எல்லாம் வைத்து இவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க பார்க்கிறார்கள். இது ஒரு புறம் இதற்காக கதறல் .

இப்படிப் பல கதறல்களுக்கு எதிர்க்கட்சிகள் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கிறது. இதில் தேர்தல் ஆணையம் நேரடியாகவே ராகுல் காந்திக்கு குற்றச்சாட்டுகள் சுமத்துவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், எங்கள் மீது உள்ள களங்கத்தை துடைக்க தேர்தல் ஆணையம் கொடுக்கின்ற சம்மன்லல் கையெழுத்திட்டு கேளுங்கள், உரிய பதில் தருகிறோம். என்று சொல்கிறார்கள் .அதற்கு ராகுல் காந்தி இன்று வரை சம்மதிக்கவில்லை. அப்படி என்றால்! இவர்கள் பேசுவது மக்களை குழப்பவா?