
காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த ஐந்தாண்டுகளாக அமைச்சர் பதவியில் துரைமுருகன் இருந்தும், தன் சமுதாய மக்களுக்கும், தன் தொகுதி மக்களுக்கும், எதுவுமே செய்யவில்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அவர் வெற்றி பெற்று விடுவாரா? இல்லை, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, பதவிக்கு வந்தவுடன் இவர் ஏமாற்றியது போல், அவர்கள் ஏமாற்றி விடுவார்களா? இருப்பினும், துரைமுருகன் வெற்றி கனவில் இருப்பதாக கட்சி வட்டார தகவல்.

மேலும்,அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தன்னுடைய காட்பாடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ,மக்களை சந்தித்து குறைகளை கேட்டிருந்தால் அல்லது மக்கள் பணியை செய்திருந்தால் ,அவருடைய அலுவலகம் இவ்வளவு முட் புதராக இருக்குமா?
மேலும், இப்போது தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்டு, மக்களை சந்தித்து பிச்சை கேட்காத குறையாக 80 வயதுக்கு மேல், பதவி ஆசை தேவையா ?என்று ஒரு பக்கம் மக்கள் பேசுகிறார்கள். மற்றொரு பக்கம்,அரசியல் கட்சியினர் பேசுகிறார்கள்.
பதவியில இருந்த போது,அப்போது செய்யாதது ,இப்போது செய்வேன் என்று மக்களுக்கு ஆசைகளை தூண்டி, இந்த முறை வந்தால் டிவி ,பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின், கிரைண்டர், நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் ரூ. 8000 குப்பம் தருகிறேன் என்று கூறி வருவது மக்களை ஏமாற்றும் அரசியல் கலையா? மேலும்,

தன் சொந்த சமுதாயத்திடம் நான் பள்ளியில் படிக்கும் போது கூழ் குடிச்சது, கிழிந்த சட்டையை போட்டுக் கொண்டு போனது, இப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வருகிறதா?
அதெல்லாம் மறந்து ராஜபோக வாழ்க்கையில், பல லட்சம் கோடி அதிபதியாக இப்போது துரைமுருகன் இருக்கும்போது, இவருடைய பணத்தைப் பார்த்து தான் ,இந்த மக்கள் ஏமாறுகிறார்கள். மேலும் வன்னியர் சமுதாயம் ஒரு ஏமாந்த சமுதாயம். பணம் இருக்கிறது, சொத்து இருக்கிறது என்றால், பதவி இருக்கிறது என்றால், அவர்கள் பின்னால் ஓடுவார்கள்.
ஆனால்,நல்ல பண்பு இருக்கிறது ,குணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது, நல்ல தகுதி இருக்கிறது, நல்லவனாக வாழ்கிறார்கள் என்றால், மதிக்க மாட்டார்கள். மேலும்,
இந்த அரசியல் கட்சிகளின் பணக்கார ஏமாற்ற கூட்டத்திடம் சென்று, ஏமாந்து ,ஏமாந்து இறுதியில் உணர்ந்து திருந்துவார்களா?. இதுதான் வன்னியர் சமுதாயம்.

மேலும்,ஏற்கனவே ராமதாஸ் ஒரு ஏமாற்று பேர்வழி, துரைமுருகன் ஜெயிச்சதும் டாடா காட்டிவிட்டு போய்விடுவார். இவர்களெல்லாம் திருந்தாத ஜென்மங்கள். அதனால் தான், இந்த தடவை நான், இதை செய்வேன் ,அதை செய்வேன் என்று சொல்லி வரும் போது ,மேலே பூக்களை போட்டு ,இவருக்கு திருஷ்டி ஆர்த்தி ,அடுத்து வர வேற்கிறார்களா?
இந்த மக்கள் எப்போது பணத்தை மட்டுமே பார்க்கிறார்களோ ,இவர்கள் அவர்கள் கொடுக்கின்ற கூலியை மட்டும் வாங்கிக் கொண்டு, ஓட்டு போடுகின்ற கூட்டம். எப்போது திருந்த போகிறது? – வன்னியர் சமுதாய சமூக ஆர்வலர்கள்.