
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்கு ஆலை மற்றும் காப்பர் ஊருக்கு ஆலை ஆகியவற்றில் அடிக்கடி இந்த பாய்லர்கள் ,வெடித்து சிதறுகிறது.
இது கம்பெனி நிர்வாகம், தங்களுடைய உற்பத்தி திறன் சம்பந்தப்பட்ட பொருட்களை, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய வேலை.
மேலும்,இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலனை மட்டுமே ,பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அவர்களுக்கு இவர்கள் எப்படிப்பட்ட பாய்லர் வைத்திருக்கிறார்கள்? என்னென்ன கருவி வாங்கி அங்கே பொறுத்து இருக்கிறார்கள்? இது எல்லாம் அவர்கள் ஆய்வு செய்ய முடியாது.

என்ன ஆய்வு செய்யலாம் என்றால், தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க ,எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட கருவிகள், மற்றும் உற்பத்தி செய்யும் போது சில பொருட்கள் கையிலே எடுப்பார்கள், அங்கே பாதுகாப்பு கவசம் அவர்களுக்கு இருக்கிறதா? எல்லா கம்பெனிகளிலும் பாதுகாப்பு கவசங்கள், உடைகள் ஆகியவற்றை கம்பெனி நிர்வாகம் அவர்களுக்கு கொடுத்திருக்கிறதா? இதையெல்லாம் ஆய்வு செய்வார்கள்.
ஆனால், இவர்கள் எவ்வளவு அந்த பாய்லர் கொள்திறன் ?அதற்கு மேலும் இவர்கள் பொருட்களை போட்டால், இந்த வெயிலுக்கு வெடித்து சிதற தான் செய்யும். ஒரு பக்கம் அந்த மெஷின் ஓட்டக்கூடிய தொழிலாளர்கள், பொறியாளர்கள், அந்த பாய்லர் தொழிலாளர்கள் ,இவர்கள் அனைவரும் இதை பாதுகாப்பான முறையில் செயல்படுத்திருக்க வேண்டும்.

இதற்கு கம்பெனி நிர்வாகம் எந்த அளவுக்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களை, பணியில் அமர்த்தி இருக்கிறார்கள்? என்பது பொருத்துதான் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல், ஒவ்வொரு கம்பெனிகளிலும் இருக்கும். மேலும்,
இங்கே கம்பெனி நிர்வாகம் ஏகப்பட்ட குளறுபடிகளை ,தவறுகளை செய்து கொண்டு, அரசு அதிகாரிகளின் ஆய்வு திறனை குறை சொல்லிக் கொண்டிருந்தால், அதையெல்லாம் அந்த கம்பெனி நிர்வாகம் செய்ய வேண்டிய, நிர்வாக சீர்கேடுகளை, ஒவ்வொரு கம்பெனிக்கும் ,அரசு அதிகாரிகள் வந்து அதை சரி செய்ய முடியாது. மேலும்,
அவர்களுடைய பணி என்னவோ, அதை மட்டும் தான், அவர்கள் ஆய்வு செய்ய முடியும். ஆனால், ஒவ்வொரு கம்பெனியின் நிர்வாகமும், தவறு அவர்கள் மேல் வைத்துக் கொண்டு, அதிகாரிகள் மீது பொதுமக்கள் பார்வையில் ,இவர்கள்தான் இந்த தவறுக்கெல்லாம் உடந்தையாக இருப்பது போல, நமது பத்திரிகைகளும் எழுதிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன என்றால்?இதே தவறு தற்போதைய ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கண்ணிகப் பேர் இறால் மற்றும் மீன் பதப்படுத்துதல் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, உயிரிழந்த சம்பவத்தை பார்த்திருக்கிறோம். இங்கேயும், கம்பெனி நிர்வாகம் என்ன தவறு செய்திருக்கிறது என்றால்?

அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட பைப்புக்குள் ,இரண்டு பைப்புகளையும் இணைக்கும் இடத்தில் ,சரியான வால்வு போடப்படும் இடத்தில் வாஷர் பொருந்தாமலே பைப்பை பிட் செய்திருக்கிறார்கள். அது என்ன ஆகி இருக்கிறது? நாளடைவில் சிறிது, சிறிதாக இடைவெளி ஏற்பட்டு ,அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
அதையும் ஒரு தொழிலாளி கவனித்து கவசத்தை அணிந்து கொண்டு உயிரையும் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய அமோனியா வாயு சுச்சை ஆப் பண்ணி இருக்கிறார்.அதை நிறுத்த வில்லையென்றால், அந்த கம்பெனியில் இன்னும் அதிகமான உயிர் இழப்புகள் நடந்திருக்கும் என்று எனக்கு வந்த தகவல்.
இருப்பினும், ஏற்கனவே, பைப்புக்குள் இருந்த அமோனியா வாயுவை அதை நிறுத்த முடியாது. அது குறைந்த அளவில் வெளிவந்ததால் தான், இந்த அளவுக்காவது உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்சனைகளை கம்பெனி நிர்வாகம் ஒவ்வொரு நாளும், பார்க்க வேண்டியது ,அவர்களுடைய கம்பெனி பொறியாளர்கள் செய்கின்ற தவறு, இன்று அரசு அதிகாரிகள் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது.
மேலும்,இதையெல்லாம் அரசு அதிகாரிகள் சரி செய்ய முடியாது. இவர்கள் கம்பெனியில் இவர்கள்தான் சரி செய்ய வேண்டும் .இவர்கள்தான் அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு நலன் கருதி, எந்தெந்த இடத்தில்? எது முக்கியமானது? எந்த இடத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலையின் முக்கியமான பகுதி ?என்பது ஒவ்வொரு கம்பெனி நிர்வாகமும், அதை தினமும் ,ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,அதை அரசு அதிகாரிகள் அவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படுத்த, தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
மேலும்,இந்த கம்பெனியிலிருந்து வெளி வரக்கூடிய துகள்கள் , சுற்றியுள்ள வீடுகளுக்கு ,சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தி, வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுச்சூழல் அலுவலர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.
இனியாவது இந்த தவறுகளை கம்பெனி நிர்வாகம் சரி செய்யுமா? மேலும், கம்பெனி நிர்வாகம் உயிரிழந்த வடமாநில தொழிலாளருக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ஆவது இழப்பீடு வழங்க வேண்டும். அதாவது அவருடைய இன்சூரன்ஸ், கம்பெனியில் வேலை செய்த பிஎஃப் எல்லாம் அனைத்தும் உட்பட அந்த தொழிலாளிக்கு நஷ்ட ஈடாக இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் .

அப்போதுதான் அவரது குடும்பம் ஒருவேளை சோறாவது நிம்மதியாக சாப்பிடுவார்கள். அப்போதுதான் கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ,கவன குறைவாக இருந்தால், நமக்கு தான் அது நஷ்டம் என்பதை உணர்ந்து சரியான முறையில் நிர்வாகத்தை நடத்துவார்கள். மேலும்,
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ இப் பிரச்சனைக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ,இழப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் என அறிவித்துள்ளார். மேலும் ,சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
