
சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் அது மீண்டும் காமராஜரை தலைவராக கொண்டு, சமூக நலனும், தேச நலனும், முக்கிய நோக்கமாக தேச உணர்வாளர்களால் இன்று புதுப்பிக்கப்பட்டது. இதற்கு வந்தவர்கள் அரசியல் என்பது வியாபார நோக்கம் கொண்டதல்ல. என்ற அடிப்படை கருத்தை முன் வைத்து பேசினார்கள்.
தலைவர் காமராஜர் !சமூக நலனுக்காகவும் ,இந்த தேசத்திற்காகவும் ,தன்னை அர்ப்பணித்தாரோ ,அதே கருத்தை தான் இவர்கள் முன் வைத்து பேசினார்கள். மேலும், ஸ்தாபன காங்கிரஸ், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசபக்தர்களின் காங்கிரஸ் கட்சி. இந்த காங்கிரஸ் கட்சி 1968இல் இந்திரா காந்தியால் பிரிக்கப்பட்டது.

மேலும், இக் கட்சியில் , அப்போது தேச உணர்வாளர்களுக்கும் ,இந்திரா காந்திக்கும் இடையே உள்ள கருத்து மோதல் வெடித்து, அதிலிருந்து இந்திரா வெளியேறி ,இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை தோற்றுவித்தார். அது மட்டுமல்ல,
இந்திரா காந்தி தேச தலைவர்களை மதிக்கவில்லை . அவர்களை எல்லாம் சட்டத்தின் மூலம் ஒடுக்க எமர்ஜென்சி கொண்டு அந்த நேரத்தில்,காமராஜரையும் மதிக்கவில்லை .

மேலும் இந்திரா காந்தி இவர்களிடம் இருந்து பிரிந்து பதவி மட்டுமே அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக அரசியல் இருந்தது. ஆனால் ,காமராஜர் போன்ற தேச தலைவர்கள் மக்கள் நலன் மட்டுமே அரசியலாக இருந்தது. இப்போது பதவிக்காக, அதிகாரத்திற்காக, பணத்திற்காக ,அரசியல் ஆகிவிட்டது. அவர்கள் எல்லாம் காமராஜரை பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா?

திருச்சி சிவா! காமராஜரை பற்றி பேசியதை தமிழ்நாட்டு ஊடகங்கள் தொலைக்காட்சி செய்திகளாகவும், பத்திரிகைகள் செய்திகளாகவும் ,வர்ணித்து கொண்டிருந்தது. தவிர, சுதந்திர இந்தியாவின் வரலாறு தெரியாத பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான் காமராஜரரோடு திருச்சி சிவாவை ஒப்பிட்டு செய்திகளை போட்டுக் கொண்டிருந்தது.
காமராஜர் எங்கே ?திருச்சி சிவா எங்கே? மலைக்கும் ,மடுவுக்கும் உள்ள வித்தியாசம் கூட கிடையாது. இப்படி பட்ட ஊடகங்களுக்கு தான் தமிழ்நாட்டில் சலுகை , விளம்பரங்கள், கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உண்மை தெரியாது. ஆனால் உண்மை தெரியாத மக்களிடம் எது சொன்னாலும், அதுதான் அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்த மோசமான அரசியல் சூழ்நிலையை மக்களுக்கு இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அரசியல் வியாபார நோக்கத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளிடம் பத்திரிக்கை வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது. காமராஜர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு அரசியல் என்பது எளிமையானது. ஆடம்பரம் இல்லாதது. இப்போது அது கார் கண்ணாடிகளை மூடிக்கொண்டு செல்கிறது.
அப்போது இருந்த தலைவர்கள் கார் கண்ணாடியை திறந்து வைத்து செல்வார்கள் .ஏனென்றால், மக்கள் பிரச்சனை பற்றி ஏதாவது மனு கொடுத்தாலோ அல்லது அந்த பிரச்சனையை பற்றி சொன்னாலோ அதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்.

இப்போது யாரும் எதுவும் சொல்லக்கூடாது. யாருடைய பிரச்சனைகளையும் பார்க்கக் கூடாது. எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் பிரச்சனையே காதில் வாங்கவில்லை என்றால் ,நாட்டு மக்களின் பிரச்சனைகளை திமுக அரசு !எப்படி காதில் வாங்கப் போகிறார்கள்?.
எனவே, இப்போதாவது, மக்களின் பிரச்சனைகளை காதில் வாங்க ஸ்தாபன காங்கிரஸ் ,மீண்டும் காமராஜரை தலைவராகக் கொண்டு உயிர் பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பணமும், அதிகாரம் எங்கே? என்று தேடி அலைவது விட, மக்களுக்காக அரசியல் எது ?என்று தேடிச் செல்வது தான் மக்களுக்கு நல்லது. அதுதான் உங்களை வாழவைக்கும். அதுதான் ஊழலற்ற ஆட்சியை கொடுக்கும்.மேலும்,

இந்த ஸ்தாபன காங்கிரஸ் பொது நலன் ,தேச நலன் கருதி பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை இயற்றியுள்ளது அதில் சில,
பதினாறு வயது பூர்த்தியான அனைத்து பள்ளி மாணவர்களையும் ராணுவத்தில் இரண்டு ஆண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை ஸ்தாபன காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்,மாநில அரசுக்கு, அரசின் பள்ளிகளில் மாணவ ,மாணவிகளுக்கு என்ன கட்டணமோ, அதே கட்டணத்தை தனியார் பள்ளிகளிலும் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளது.
தவிர, தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ஊதியமாக ரூபாய் 6000/- வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.மேலும்,
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் ,அனைத்தும் எடுக்கப்பட்டு ,அதற்கான குத்தகை ,வரி வசூல் பாக்கி, உயர்த்தி உடனடியாக நிலுவைத் தொகையினை வசூல் செய்ய வேண்டும் .
மேலும், கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில் நிர்வாகத்தில் வேலை செய்யக்கூடாது. அவர்களுக்கு எந்த ஆகம விதிகளும் தெரியாது. மேலும், கோயில்களில் யாராவது வேற்று மதத்தினர் பணியாற்றி கொண்டிருந்தால், உடனடியாக அவர்களை வேறு இடத்திற்கு, அல்லது வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், கோயில்களில் தேவாரம், திருவாசகம் ,போன்ற பாடல்களை கோயிலில் இறைவனுக்கு பாட அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய ,மாநில அரசுக்கு நிறை வேற்ற ஸ்தாபன காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது .
மேலும், தேசிய ஸ்தாபன காங்கிரஸின் இப் பொது குழு தேசிய பொதுச் செயலாளர் டி .வி. நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவுக்கு அகில இந்திய தேசிய ஸ்தாபன காங்கிரஸின் அமைப்புச் செயலாளர் சஜா குணா முன்னிலை வகித்தார். தேசிய செயலாளர்கள் கிஷோர் குமார், வெங்கடேஷ் ஆகியோர் நன்றியுரை கூறினார்.