
தமிழகத்திற்கு தலைமைச் செயலாளராக தற்போது இருந்து வரும் சாய்குமார் ஐஏஎஸ் ஓய்வு பெற்ற பிறகும் ,அவரை பணி நீடிப்பு செய்து , தமிழக முதல்வர் பணி ஆணை வழங்கியுள்ளார் .
இது குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் , அரசியல் கட்சிகள் மட்டத்திலும்,ஒரு பக்கம் சர்ச்சையும் , சல சலப்பும் ,இருந்து வருகிறது. இது தவிர, தமிழகத்தில் ,தமிழக ஐஏஎஸ் களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ,ஆந்திராவிலிருந்து வந்த சாய்குமார் ஐஏஎஸ் க்கு முக்கியத்துவம் தருவது ஐஏஎஸ் மத்தியில் ஒரு நெருடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் சீனியர் ஐஏஎஸ் மற்றும் அவரைவிட சிறப்பாக பணியாற்ற கூடிய தகுதி வாய்ந்த சீனியர் ஐஏஎஸ் 1993 பேட்ச் விஜய குமாரை நியமிக்காமல், சாய் குமார் ஐஏஎஸ் க்கு பணி நீடிப்பு வழங்கியது உண்மையிலே அது தமிழக மக்களுக்கே, ஒரு வெறுப்பை தான் ஏற்படுத்துகிறது. தவிர, இவர் கடந்த அதிமுக ஆட்சியில், எடப்பாடி பழனிசாமியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தும் இவரை நியமிக்காதது ஏன் ?என தற்போதைய கம்யூனிஸ்டுகளின் முக்கிய கேள்வி?
மேலும், தற்போதைய அரசியல் கட்சிகள் அதுவும் கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள் சிபிஐ ,சிபிஎம், இரண்டுமே தலைமைச் செயலாளர் சாய் குமாரை மாற்ற சொல்லி போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இது தவிர, பல்வேறு அரசியல் கட்சிகள் சாய் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, விரைவில் விஜயகுமார் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கோட்டை வட்டார தகவல்கள் வெளி வந்துள்ளன.
மேலும், விஜயகுமார் ஐஏஎஸ் நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் எக்ஸ்பர்ட் (expert) என்று பெயர் எடுத்தவர் . மிகவும் எளிமையானவர். இவர் சேலம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது, அப்போது செய்த, செயல்பாடுகள் காரணமாக ,இன்றும் இவரை தேடி விவசாயிகள் சங்கம் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறது.மேலும்,
இவருக்கு, டாப் டு பாட்டம் (Top to bottom) வரை திட்டங்கள் செயல்படுத்துவதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர் . தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் அதனால்,தமிழக மக்களுக்கு எதை எப்படி கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று நன்கு தெரிந்தவர். அதனால், கோட்டை வட்டாரம் இவரை தலைமைச் செயலாளராக அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.
