தமிழக சட்டமன்றத்தின் மாண்பை எதிர்க்கட்சிகள் மதிக்கிறார்களா? குறை சொல்வதே எதிர்க்கட்சியின் வேலையா? அவர்கள் கதறலில் நோக்கம் என்ன?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால் தான் ,ஆளும் கட்சி நேர்மையான, நல்லாட்சி மக்களுக்கு கொடுக்க முடியும்.

எதிர்க்கட்சியினர் சட்டமன்ற பேரவையின் மாண்பை மதித்து ஆளும் கட்சியின் தவறுகளை ,குறைகளை,சுட்டிக்காட்டி கேள்வி கேட்க வேண்டும் .அதில் தவறு இல்லை.

ஆனால், உள்நோக்கத்துடன் உள்ள கேள்வியாகவும், விமர்சனமும்மாக இருக்கக் கூடாது . மேலும்,திமுக வின் உதயநிதி ஸ்டாலின் ,ஆரம்பத்திலிருந்து இந்த சட்டமன்றம் முடியும் தருவாயில் வரை, மக்களுக்காக எந்த கேள்வியும் கேட்கவில்லை .

பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை வைத்துக்கொண்டு , கொலை செய்யப்பட்டது வெட்டப்பட்டது, இது குறித்து கேள்வி கேட்கலாம், தவறில்லை. ஆனால் ,அந்தக் கேள்விகளின் மூலம்,ஆளும் கட்சியை கேள்வி கேட்டு வீழ்த்துவதும், விமர்சனம் செய்து வீழ்த்துவதும், எதிர்க்கட்சியின் நோக்கமாக இருக்கக் கூடாது.

இங்குதான் இவர்களின் அரசியல்! சுயநல அரசியலா? அல்லது பொது நல அரசியலா? என்று தெரியாமல் மக்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி எந்த பத்திரிக்கையும், ஒரு செய்தி கூட எழுதவில்லை.

மேலும்,மக்களுக்காக பேசுவது போல், ஆளும் கட்சியை குறை சொல்லிக் கொண்டு, இருப்பதால் அந்த அரசியலுக்கு என்ன அர்த்தம்?

இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் அதிகாரிகள் மூலம் வராமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே பேசவில்லை.

யாரோ எழுதிக் கொடுப்பதை தான் பேசுகிறார். அதையாவது மக்களுக்காக எழுதி கொடுத்து பேசினால் ,ஆவது பரவாயில்லை. இவர்கள் அரசியல் செய்ய தமிழக சட்டமன்றம் இல்லை.

மேலும், எதிர்க்கட்சியினரை சுட்டிக்காட்டினால் ,அல்லது ஊழல்களை எடுத்துரைத்தால் ,அலறுகிறார்கள், கதறுகிறார்கள் ,அதை திசை திருப்ப கூச்சல் போடுகிறார்கள். மேலும்,

ஆரம்பத்தில் இருந்து திமுகவின் அரசியல்! பேசுவதெல்லாம் பொது நலமாக இருக்கும். ஆனால், செயல்படுவது எல்லாம் சுயநலமாக இருக்கும். இது ஆளும் கட்சியாக இருக்கும் போதும், அதே நிலைமைதான்! இன்று மக்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்தும் ,அதே நிலைமையாக தான்! இருக்கிறது.

கேள்வி கேளுங்கள்? அது மக்களுக்காக இருக்க வேண்டும். பொது நன்மைக்காக இருக்க வேண்டும். ஆளும் கட்சியினர் உங்களைக் கேட்கும் போது, ஒவ்வொரு கேள்விக்கும், பதிலுக்கும், நீங்கள் எல்லாம் ஏன்? பதறுகிறீர்கள்? கதறுகிறீர்கள்? எதற்காக?

மேலும்,ஆளுங்கட்சியாக நீங்கள் செய்த கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டும் போது, அதை எல்லாம் பேசவிடாமல் கதறிக் கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு தெரிந்து விடப் போகிறதோ என்ற பயமா ?ஏற்கனவே மக்களுக்கு தெரிந்து தான் உங்களை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்திருக்கிறார்கள். தெரியாமல் மக்கள் உட்கார வைக்கவில்லை .

அதனால் ,உங்களுடைய சுயநல அரசியலுக்கு, சட்டமன்றத்தை பயன்படுத்தாமல், மக்களின் பொதுநல அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகைகளின் வேண்டுகோள்.

மேலும்,எப்படியும் பேசுவது அரசியல் அல்ல, இப்படி தான் பேச வேண்டும் என்று அரசியல் இருக்க வேண்டும். அது மக்களுக்காக! மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும்.

மக்களுடன், மக்களுக்காக ….! என்றும் மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *