
திமுகவும், அதிமுகவும் பல அரசியல் கட்சிகளை கூட்டணியின் சேர்த்துக் கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விஜயின் அரசியல் இருக்கப் போகிறது.
இதுவரையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக அதிமுக விட்டால், திமுக, திமுக விட்டால் அதிமுக ,இப்படி மாறி, மாறி மக்கள் வாக்களித்து, இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியலை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள்.

ஆனால்,இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,சிந்திக்கத் தெரிந்தவர்கள் ,இவர்கள் மட்டும்தான் ,இதற்கு மாற்று ஒரு அரசியல் தேவை என்று நினைக்கிறார்கள்.
அது மட்டுமல்ல,அதிமுக ,திமுகவை சேர்ந்த மந்திரிகள், எம்எல்ஏக்கள் சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். அதனால்தான் இருவரும் இலவசத்தையும் ஓட்டுக்கு பணமும் கொடுத்தால்தான் நமக்கு வாக்களிப்பார்கள் என்று மக்களை பணத்தால் ஈர்க்கிறார்கள். ஆனால், இது ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் மீண்டும் மீண்டும் அதே நபர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை. இந்த வாக்குகள் அனைத்தும் விஜய்க்கு பிளஸ். இதுதான் மாற்றத்திற்கான அரசியலுக்கு முக்கிய காரணம்.

மேலும், மக்கள் இந்த இரண்டு அரசியல் கட்சிகளிலும், உள்ள அரசியல் கட்சியினரால் இருக்கக்கூடிய வெறுப்பு அரசியல், அடுத்தது , இந்த இரண்டு கட்சிகளின் இவர்களின் கூட்டணி கட்சிகள் பற்றி மக்கள் தற்போது யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் ,அந்தந்த கட்சியினர் மட்டும் ,அவர்களை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு அணி கூட்டணி கட்சிகளுக்கும், மக்களின் வாக்கு மிக, மிக குறைவாகத்தான் இருக்கப் போகிறது. அந்த வாக்குகள் அனைத்தும் விஜய்க்கு போய் சேரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல், திமுகவிலும், அதிமுகவிலும் ,கடந்த முறை தேர்தலை சந்தித்தவர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள், மந்திரிகள் இவர்களுக்கு சீட் வழங்கி இருக்கிறார்கள். இது இரண்டு பேருக்குமே மைனஸ்.

மேலும்,கடந்த சில தினங்களுக்கு முன் என் .டி ஏ கூட்டணியில் வேட்பாளர்கள் தேர்வு மிக, மிக அவசியம் என்பதை தெளிவாக கொடுத்திருந்தேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை அலட்சியம் செய்து விட்டார். இவர்கள் இரண்டு பேரும் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று தான் நினைக்கிறார்கள். அது எல்லோரிடமும் வாங்க முடியாது. இவர்கள் எங்கே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ?அரசியல் தெரியாத மக்களிடம், கூலிக்கு போகின்ற மக்களிடம், இங்குதான் ஓட்டை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் அந்த மக்களிடம் சென்று பணத்தை வாங்கினால் ,நீங்கள் வாக்களிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்ல வேண்டும். ஏனென்றால் திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் பணம் வாங்காமல் ,வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் கட்சியினராக இருந்தாலும் ,அவர்களுக்கு பணம் போய் சேர்ந்து தான் அவர்களும் வாக்களிக்கிறார்கள்.
அதேபோல் அதிமுகவிலும், அதே நிலைமைதான். ஆனால், விஜய் நிறுத்தி இருக்கும் வேட்பாளர்கள் அரசியலில் அனுபவம் இல்லாதவர்கள் என்று அவரே சொல்லிவிட்டார். அது உண்மை தான். காஞ்சிபுரத்தில் நிற்கக் கூடிய ஒரு வேட்பாளர் இந்த இரண்டு கட்சியினரை பார்த்தாலே, தலை இறங்கிக் கொண்டு போகக் கூடியவர் என்று அந்தப் பகுதியில் பேசுகிறார்கள். அவர்களை எதிர்த்து இவரால் அரசியல் செய்ய முடியாது.
இப்படி பல தொகுதிகளில் பல சூழ்நிலைகளில், அதிமுக, திமுகவை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ரவுடிசம், இவர்களுக்கு தெரியாது. ஆனால், நிலைமை அதுவல்ல. விஜய்க்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் யார் தெரியுமா? பெரும்பாலும் 18 வயதிலிருந்து 50 வயதிற்குள் இருப்பவர்கள்தான் விஜய்யை அதிகம் விரும்புகிறார்கள்.
அப்படி இருக்கும் இளைஞர்களின் ஓட்டுகள், இது ஓட்டாக விழுமா ?இல்ல கூட்டமாக வந்துவிட்டு போய்விடுமா? இப்படி எல்லாம் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒரு பக்கம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயம் இது வாக்காக தான் விஜய்க்கு மாற வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் அந்த இளைஞர்களின் துடிப்பு வேகம், சமூக வேதனைகள் ,இந்த ஆட்சியில் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பு, நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, அவர்களுடைய வருமானத்தில், தொழிலில் ,வேலையில், திமுக கை வைத்திருக்கிறது. இது நேரடியாக இல்லை என்றாலும் ,மறைமுகமாக அவர்கள் பாதித்திருக்கிறார்கள்.

இது தவிர,வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, இதையெல்லாம் சாதாரண கடை வியாபாரம் செய்யக்கூடியவர்கள், அனுபவிக்கின்ற ஒரு கொடுமை. நாங்கள் 1500 ரூபா மின் கட்டணம் கட்டியிருந்தோம், இப்போது 3000 கட்டுகிறோம் என்றால்! நீ 5000 கொடுத்தால், ஓட்டு போடுவார்களா? இல்லை,50,000 கொடுத்தாலும் ஓட்டு போடுவார்களா?
மேலும், விஜயின் பேச்சு! நான் உங்களுக்காக ,என்னுடைய சொகுசு வாழ்க்கையை விட்டு,விட்டு வந்திருக்கிறேன். உங்களை நம்பி வந்திருக்கிறேன். உங்கள் பக்கம் நிற்கிறேன். ஒரு காலம் உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். இந்த வார்த்தைகள் விஜயின் அடி மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகள். இது நடிக்கின்ற வார்த்தைகள் அல்ல. இதற்கு நிச்சயம் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள்.
காரணம் திமுக, அதிமுக என்ற இரண்டு கடுமையான ஆட்சிகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள். மேலும் இந்த இரண்டு கட்சிகளிலும் உள்ள திமுக மந்திரிகள் ,ஊழல் வாதிகளாகவும், அதிமுகவில் ஊழல்வாதிகளாகவும் , ஒவ்வொருவரும் ஊழல் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பது, விஜய்க்கு மக்கள் மத்தியில் ஒரு செல்வாக்கை உருவாக்கி வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, இங்கே ஜாதி கட்சிகள், ஜாதியை ஏமாற்றி பிழைப்பு நடத்தியது தான் அதிகம். அவை அத்தனையும் அடிபடும். அதற்குரிய விலை அவர்கள் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் வாங்கிக் கொள்வார்கள். பணம் கொடுத்தால் மக்கள் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்று அதிமுகவும், திமுகவும் போட்டி போடுகிறது.
மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவரவர் உள்ளத்திற்கு தான் அது தெரியும். இங்கே மாற்றத்தை ஏற்படுத்தப் போவது இளைஞர்களின் வாக்குகள். அதிமுக திமுகவுக்கு எதிரான வாக்குகள். இந்த நான்கு முனை போட்டியில், மூன்று முனை போட்டி தான் இருக்கப் போகிறது.
இதில் சீமான் கத்தியது தான் மிச்சமாக இருக்கப் போகிறது. சீமானும் நிறைய விஷயங்களை சிந்திக்கிறார். பேசுகிறார். ஆனால், கோபம் வந்தால், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி விடுகிறார். இங்கே, ஒவ்வொருவருக்கும் விதி எழுதப்பட்டிருக்கிறது. அந்தத் தலை விதிபடி தான் சூழ்நிலைகள் பேச்சுக்கள், மக்களின் மன மாற்றங்கள் அமையும் . அதனால்,விஜய் இந்த தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக மாறுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மேலும்,எல்லோரும் திட்டமிட்டு தேர்தல் களத்தை சந்திக்கிறார்கள். விஜய் இதை பல ஆண்டுகளுக்கு முன்னாலே திட்டமிட்டு இருக்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்வு செய்திருக்க வேண்டும் .பூத் கமிட்டிகள் அமைத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர்கள் யார் ?யார் ?என்று ஆய்வு செய்து இருக்க வேண்டும். மேலும், விஜய்க்கு மறைமுகமாக கொடுக்கின்ற திமுகவின் சூழ்ச்சி அரசியலை எதிர்கொள்வது, மிகப்பெரிய போராட்டம் .அது எல்லாம் விஜய்க்கு பின்னடைவு தான்.
இருப்பினும், மக்களின் வாக்கு விஜயின் பேச்சு மக்களை கவர்ந்துள்ளது. அது வேட்பாளர்களை பார்த்து அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். விஜயை பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
ஆனால் திமுக, அதிமுக போன்ற மற்ற அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் தகுதியானவர்களாக இருந்தால்தான், அவர்களுக்கு போடலாம் என்ற ஒரு நினைப்பு மக்களுக்கு வரும். யாருக்கு வராது என்றால்? யார் வந்தாலும், யார் போனாலும் கவலை இல்லை.
ஆடு, மாடு வாழ்க்கை நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு தான் ,அது வராது. அங்குதான் இவர்கள் பணத்தை கொடுத்து ,அந்த ஆடு ,மாடுகளுக்கு பிரியாணி கொடுத்து, குவாட்டர் ,கொடுத்து ஓட்டுக்களை பிரிப்பார்கள் வேறு எங்கும் செல்லுபடியாகாது. அதனால்! விஜய் சொல்வது போல், நாலு முனை போட்டி ,40 முனை போட்டி, எந்த போட்டியாக இருந்தாலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி! தவெக வெற்றிக் கழகம்.