
தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க அவர்களின் பொய்பிரச்சாரங்களை நம்பி ஏமாந்தால் !மீண்டும் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
அதேபோல், இதற்கு துணை போகக்கூடிய அவர்களின் ஊடகங்கள், போலி அரசியல் ஊடக பிம்பத்தை கையில் எடுத்துள்ளது. இவர்கள் கூலிக்காக எப்படியும் செய்திகளை வாசிப்பார்கள். செய்திகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல், சோசியல் மீடியாவில், பேசிக்கொண்டிருப்பார்கள்.

மேலும்,விஞ்ஞான பூர்வமான ஊழல் கருணாநிதி காலத்தில் இருந்து இக்காலம் வரை, திமுகவின் ஊழல் ஆட்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரையில், இதற்கு மக்களால் எதிர்த்து போராட முடியவில்லை. தவிர,நேர்மையான, நடுநிலையான, ஊடகங்களின் செய்திகள் கூட, மக்கள் அலட்சியமான மன நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். இது வருங்கால சந்ததிகளுக்கு ஆபத்தானது.

மேலும்,படித்த இளைஞர்கள் அரசியல் பற்றி புரிதல் இல்லாமல், இந்த போலி அரசியல் ஊடக பிம்பத்தை நம்பி ஏமாறாதீர்கள். இது தவிர,பெரிய பத்திரிக்கை எல்லாம் உண்மையை எழுதுகிறது என்று நம்பி விடாதீர்கள். அதுதான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

அவர்கள் இதுவரையில் எந்த ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், செய்திகளை போட மாட்டார்கள். காரணம் அப்படி போட்டாள் ,அவர்களுடைய சலுகை, விளம்பரங்கள் அடுத்த நொடியே நிறுத்தப்படும். இதுதான் அவர்களுடைய பத்திரிக்கை கூலி. இதற்காகத்தான் நாட்டு மக்கள் எப்படி போனாலும், கவலை இல்லை என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,எங்களைப் போன்ற ஒரு சில ஊடகங்கள் தான், அது சிறிய ஊடகங்களோ, பெரிய ஊடகங்களோ , அவர்கள் தான் உண்மையை மக்களிடம் கொண்டு சென்று தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கூட, இந்த ஊடகங்களுக்கு இதுவரை எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்கவில்லை.
இருப்பினும், நாட்டு மக்கள் நலனில் உண்மையை சொல்ல வேண்டியது பத்திரிகைகளின் கடமை . ஆனால், தற்போது, அது வியாபாரம் ஆககப்பட்டுள்ளது. இந்த வியாபார ஊடகங்களின் செய்திகள் சமூக நலனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எந்த அரசியல் கட்சி பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் .

இதை நம்பி ஏமாறும் மக்கள் ஏமாளிகள் தான். அது மட்டுமல்ல,திமுகவில் பேசத் தெரிந்த கிரிமினல்கள் அதிகம், வாய்ச்சவடல்கள், அடாவடி பேர்வழிகள் அதிகம் ,மனசாட்சி இல்லாமல் எப்படியும் பேசுவார்கள், இதுதான் அவர்களுடைய ஆயுதம் . இதற்கு ஜாதியை மூலதனமாக ஆக்கிவிட்டார்கள்
மேலும்,மதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்வது இவர்கள், ஆனால், பழியை பிஜேபியின் மீது போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒத்து ஊதக் கூடிய திருமாவளவன், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், போன்ற அனைத்தும் இதே வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் !இவர்கள் எங்கு போய் அரசியல் செய்கிறார்கள்? என்றால், அரசியல் தெரியாத அடித்தட்டு மக்களிடம் தான் போய் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். அரசியல் புரிதல் இல்லாத மக்களிடம், பேசிக் கொண்டிருக்கும் இந்த கூட்டம் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது விஷயம் தெரிந்த ,படித்த நபர்களிடம், அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்களை பேச சொல்லுங்கள் பார்க்கலாம் ?பேசமாட்டார்கள். அதனால், அரசியல் தெரியாதவர்களிடம், அதிபுத்திசாலி மேதையை போல், காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

தற்போது, ஆட்சி, அதிகாரம், கையில் இருப்பதால், இப்போது எங்கு வேண்டுமானாலும், யார் மீதும் வழக்கு போட ,அடியாள் வேலைக்கு காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர ,ஐந்து ஆண்டுகளில் காவல்துறையை அடியாள் ஆக்கிவிட்டார்கள்.

ஏனென்றால், இவர்களுடைய ஊழல்களை எதிர்த்து போராடக் கூடியவர்கள் மீது ,உடனே கைது செய்ய, அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, அடக்கி விடுவார்கள். இதுதான் திமுகவின் அராஜகம். இது தவிர, போதைப் பொருள் கலாச்சாரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் இளைஞர்களை சீரழித்து விட்டார்கள். மேலும்,

மாணவர்களின் கல்வித் தரத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும், தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும், உள்ள கல்வி தரம், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகிவிட்டது . மேலும்,
சமூக ஆர்வலர்கள், சமூகப் பிரச்சனைகளுக்காக போராட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்கள், ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக மாற்றிவிட்டார்கள்.

அப்படி என்றால், மக்கள் பணிக்காக இவர்கள் படித்தது வீணாகி விட்டதா? அதற்கு ஐ.ஏ.எஸ் தேவையில்லை. ஐ .பி .எஸ் தேவையில்லை. இது நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்த மனக் குமுறல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால், மக்கள் விழிப்புடன் இந்த ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்! மக்களுக்கு விடியல் இல்லை.