
திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக தங்களுடைய ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. தங்களுக்கு தேவைப்படும்போது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். இல்லையென்றால், நீதிபதி உத்தரவுகளை கூட மாவட்ட ஆட்சியர்கள் முதல் மந்திரிகள் வரை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள்.

இங்கே உழைப்பவன் அவனுக்கு வேண்டிய ஊதியத்தில் கை வைக்கிறார்கள். இது அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை மக்களின் வாழ்வாதாரத்தின் உரிமை பிரச்சினை. அடுத்தது,

மக்களின் பாதுகாப்பு ,அது ஒவ்வொருவரின் உரிமை பிரச்சன, அதில் கை வைத்திருக்கிறார்கள். அது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதில் பெண்கள், மாணவிகள், இப்படி அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் அந்த வலி ,வேதனை தெரியும். மேலும் ,கோயில்களில் சாமி கும்பிடும் பக்தர்களின் வலி வேதனை அதைவிட கொடுமையானது

மேலும்,2000, 3000, இலவசமாக கொடுத்து, வரி உயர்வு ,சொத்துவரி உயர்வு , வீட்டு வரி உயர்வு,மின்சார கட்டண உயர்வு, தண்ணி வரி உயர்வு, , பத்திரப்பதிவு வரி உயர்வு, எதில் எல்லாம் உயர்த்த முடியுமோ, அத்தனையும் உயர்த்தி, இந்த இலவசத்தை கொடுப்பது, இது இலவச ஏமாற்று வேலை. இதுவும் மக்களின் உரிமையில் ,அதாவது வாழ்க்கை என்னும் உரிமைப் பிரச்சனையில் கை வைத்துள்ளது.

இது தவிர,அடுத்தது, ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் சாமானிய பத்திரிகையாளர்கள் வரை அதாவது சமூக நலன் பத்திரிகையாளர்கள் வரை, அவர்களுடைய உரிமை பிரச்சினையில் கை வைத்துள்ளது. அது என்ன என்றால்? பத்திரிகையாளர்கள் நல வாரியம் என்பது கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே என்று இவர்கள் சட்டம் இயற்றிக் கொண்டார்கள். மேலும்,

ஆட்டோ ஓட்டுநர்கள் சொல்கிறார்கள் .அடுத்து திமுக ஆட்சி வந்தால், நாங்கள் எல்லாம் ஆட்டோவை கூட ஓட்ட முடியாது. பள்ளி ஆசிரியர்களின் குமுறல் , உள்ளாட்சித் துறை அரசு ஊழியர்களின் குமுறல், எந்த அளவுக்கு அவர்களுடைய மனநிலை? பாதிக்கப்பட்டுள்ளது?. இது சட்டத்தின் ஆட்சியா? இதுதான் மக்களாட்சியா ?ஆக கூடி ,இது ஒரு கட்டப்பஞ்சாயத்து நிர்வாகத்தை ஸ்டாலின் ஆட்சி ஐந்தாண்டுகளில் நடத்திருக்கிறார். படிக்காத ஆடு, மாடு, மேய்ப்பவர்களுக்கு ஆட்சி நடத்த வேண்டியவர் ஸ்டாலின். அதிர்ஷ்டத்தால்! முதல் மந்திரி ஆகிவிட்டார்கள். அதன் விளைவு தமிழக மக்கள் ஐந்தாண்டுகளாக அனுபவித்து விட்டார்கள்.

மேலும்,எல்லாத் துறைகளிலும் ஊழல், மந்திரிகளின் மீது ஊழல், இந்த ஊழலை மறைப்பதற்கு கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதே சமூக நலன் பத்திரிகைகளுக்கு இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுத்திருந்தால், உண்மைகள், மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருப்பார்கள். மத்திய அரசும் இதில் கார்ப்பரேட் ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.மேலும்,ஏதோ ஒரு சில பத்திரிகைகள் தவிர, நூற்றுக்கு 99 சதவீதம் ,இவர்களுடைய அடிமை பத்திரிகைகளாகத் தான் இருக்கிறது.

மேலும், திமுக ஆட்சியில்,மக்கள் பிரச்சனையை விட ,மக்கள் நலனை விட, ஆட்சியாளர்களின் நலனும், இந்த அரசியல் கட்சிகளின் நலனும், முக்கியமானதாக திமுக ஆட்சியின் நிர்வாகம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
மேலும்,மக்கள் வாழக்கூடிய பகுதியில், ஒரு மாவட்ட ஆட்சியரிடம் எதற்கு புகார் அளிப்பார்கள்? அந்தப் பிரச்சனை குறித்து புகார் அளிப்பார்கள். ஆனால், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமை. ஆனால், இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர்கள்! அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை தான் இந்த மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டு செயல் படுகிறார்கள்.
ஆனால்,கடந்த காலங்களில் அதாவது, ஏன் திமுகவின் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கூட இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்போதெல்லாம் மந்திரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் சொன்ன ஆலோசனைப்படி தான் நடந்திருக்கிறார்கள்.மேலும்,

அவர்கள் முடியும் என்றால், முடியும். முடியாது என்றால் போய்விடுவார்கள். இப்போது இவர்கள் அவர்கள் என்ன சொல்கிறார்களோ ,அதை அப்படியே செய்யக்கூடிய கிளர்க்கு வேலைக்கு வந்தவர்களாக தான் இவர்கள் இருக்கிறார்கள்.
அதனால், இந்திய ஆட்சிப் பணியின் தரம் தாழ்ந்து விட்டது. சிகப்பு விளக்கு இந்த கார், அரசின் சலுகை, இது எல்லாம் எதற்கு? மக்களின் வரிப்பணத்தில் இருந்து தானே, இது வருகிறது. இல்லை ஆட்சியாளர்களின் வீட்டில் இருந்தா வருகிறது? அதுமட்டுமல்ல, கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தான் முக்கிய உடந்தையாக செயல்படுகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலே, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்க்கு விடையூரில் இந்த கனிம வள கொள்ளை குறித்து, புகார் அளிக்கப்பட்டது. பொதுமக்களும் இது குறித்து புகார் அளித்திருக்கிறார்கள்.
இவ்வளவு புகாரின் மீதும், ஒரு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் ஸ்டாலின் ஆட்சி! மக்களுக்காக ஆட்சி இல்லை! என்பதை 2026 தேர்தலில்! மக்கள் தான் ,இதை புரிந்து சொல்வார்களா?