
திமுக ஆட்சியில் ஊழல் ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் இது போன்ற சமூக விரோத தொழிலதிபர்கள், சமூக விரோத கும்பல், சமூக விரோத அமைப்புகள் ,எல்லாம் பணத்தால் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்தார்கள்.

இதனால்தான், உழைப்பவர்கள் , நேர்மையானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். திமுக ஆட்சியில்! அடித்தட்டு மக்களுக்கு, நீதி கிடைக்காது, நியாயம் கிடைக்காது. காவல்துறையும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் ஏவலாளிகளாக அரசாங்கத்தின் அடியற்றல் போல் வேலை செய்தார்கள்.

எனவே, தற்போது ஊடகங்களில் பேசுகின்ற தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும், கட்சி தலைவர்களும், ஜெம். வீரமணியிடம் பணம் வாங்காதவர்களே இல்லை என்றுதான் இதன் அடி ஆழம் வரை தோண்டினால் இருப்பார்கள்.

ஏனென்றால் திமுகவுடன் மிக நெருங்கிய உறவில் இருந்தவர் ஜெம் வீரமணி. இவர், முக்கிய வி ஐ பி யாக வலம் வந்தவர். இந்த நிலையில் தான் காவல்துறை இவருக்கு முக்கிய பக்க பலமாக இருந்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் மீது ஒரு பக்கம் ,இது குற்ற சம்பவம்! தவிர, குற்றவாளிகளுக்கு துணை போவது தவறு. இருப்பினும் ,மேலிடத்தில் இருந்து, அவர்கள் சொன்னால், செய்ய வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கிறார்கள். மேலும்,

காவல்துறை யாருக்கு சப்போர்ட்? என்றால் ,அடிக்கடி நான் நண்பர்கள் வட்டாரத்தில் பேசுவேன். இப்போதெல்லாம் காவல்துறை திருடனுக்கு தான் சப்போர்ட் ,நமக்கெல்லாம் காவல்துறை சப்போர்ட் அல்ல, இப்போது ஜெம் வீரமணி சப்ஜெக்ட், தமிழகமெங்கும் மூளை முடுக்கெல்லாம் ஒலிக்கிறது.
மேலும்,திமுக கட்சி! எவ்வளவு பெரிய கேவலமான கட்சி? பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும், பேசுபவர்கள். பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும், செயல்படுபவர்கள். இதுதான் தற்போதைய திமுகவின் நிலைமை.
இது தவிர,இன்றைய அரசியல் கட்சிகள்! எப்படிப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும், சமூக விரோதி, தேசவிரோதியாக இருந்தாலும், பணம் இருக்கிறதா ? அவர்கள் எல்லாம் தொலைக்காட்சியில் நல்லவர்களாக பேசி, வலம் வரலாம் .கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகள்,பத்திரிகைகளில் பேசி நல்லவர்களாக பரிசுத்தம் செய்து விடலாம்.

மேலும்,வீடியோ போட்டு உங்களை எல்லாம் மக்களின் பார்வைக்கு கொண்டு போகலாம். இப்படிப்பட்ட போலியான அரசியல் கலாச்சாரம், மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமாக தான் இருக்கும். இந்த உண்மைகளை படிக்காத வரை, மக்கள் இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகளிடம் ,இப்படிப்பட்ட போலியான பத்திரிக்கை பிம்பம் ,சமூகத்திற்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும்.

இந்த கார்ப்பரேட்டுகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! விஜய் மாற்றத்தை கொடுப்பார் என்று எதிர்பார்த்துதான் மக்கள் வாக்களித்தார்கள். தவறில்லை. ஆனால், திமுக ஆட்சியில் செய்த அதே தவறை தான், அமைச்சர் ராஜ்மோகன் செய்திருக்கிறார்.

மாற்றத்தை கொண்டு வர வேண்டிய பல துறைகளில் பத்திரிக்கை துறையும் ஒன்று என்று பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தெரிவித்து வந்துள்ளது மக்களுக்கு தெரியும். பத்திரிகை உலகத்திற்கும் தெரியும்.

இப்போது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பணியாற்றக்கூடிய இவர்களை மட்டுமே பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் நிர்வாகிகளாக போட்டிருப்பது நிச்சயம் மீண்டும் இது ஊழல் ஆட்சிக்கு அடிபோடுகிறது. எப்போது ஒருவன் விளம்பரத்தை தேடுகிறானோ அவனால் சமூகத்திற்கு எந்த நன்மையும் மாற்றத்தையும் கொடுக்க முடியாது.

இந்த விளம்பர ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற தவெக ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டு வருவது கஷ்டம் தான் . இதுகுறித்து முதல்வர் விஜய்க்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. பழைய திமுக ஆட்சியில் என்ன நடந்ததோ, அதே தான் நடக்கிறது. மக்கள் இனி எந்த அரசியல் கட்சிகளிடமும், எந்த அரசியல்வாதிகளிடமும், விழிப்புடன் இருப்பது அவசியமானது.
