திமுக ஆட்சியில் தொடரும் அவலங்கள், தலைமைச் செயலகத்தில்! காவல்துறையின் அடாவடித்தனங்கள், முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கும், பொது பிரச்சனைகளுக்கும் தான், அரசின் கவனத்திற்கு கொண்டுவர நினைப்பார்கள் .

அதற்காக தான் அவர்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் யாரை பார்க்க வேண்டுமோ, அதற்காக வருவார்கள். அவர்களை இந்த வெயிலில் காக்க வைப்பது, காவல்துறை அடவடித் தனமாக பேசுவது, மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமல்ல ,பத்திரிகையாளர்களையும், உள்ளே செல்வதற்கு ,அந்த வரிசையில் நில்லுங்கள் ,அங்கே போகக் கூடாது ,அந்த வழியில் போகக்கூடாது ,இந்த வழியில் போங்கள். அதிகாரங்கள் அத்துமீறி போய்க் கொண்டிருக்கிறது.

மேலும்,செய்தித்துறையில் தான் போலிகளுக்கும், உண்மையான , தகுதி ,தரம் தெரியவில்லை என்றால், காவல்துறைக்கு எங்கே தெரியப்போகிறது? யாரைப் பார்த்தாலும், இவர்கள் கண்ணுக்கு கிரிமினல்களாக தெரிகிறதா?

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பத்திரிகைகளுக்கு அரசின் அடையாள அட்டை கொடுக்கவில்லை. இந்த ஆட்சி வந்த பிறகும், இன்னும் அது தொடர்கிறது. செய்தித் துறையில் கார்ப்பரேட் பத்திரிகையின் ஏஜெண்ட் அதிகாரிகள் செய்தித் துறையில்,உள்ளே மறைமுகமாக எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளை உள்ளே வரக்கூடாது. அரசின் அடையாள அட்டை இருந்தால், உள்ளே விடுங்கள் .

இந்த செக்யூரிட்டி களுக்கு மறைமுகமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் . இவர்கள் எப்படி பத்திரிக்கை துறையை சீர் செய்வார்கள்? பத்திரிகை துறையை மக்கள் நலனுக்காக மாற்றம் கொண்டு வருவார்கள்? இதையெல்லாம் தமிழக முதல்வர் கவனத்திற்கு, சமூக நலன் பத்திரிகைகளின் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் கோரிக்கை.

மேலும் ,பொது மக்களை இந்த வெயிலில் நிற்க வைத்து, வேதனையில் ஆழ்த்துவது, இவர்களுடைய அதிகாரத்தை, பாதிக்கப்பட்ட மக்கள் தான் கோரிக்கை மனுக்களை கொண்டு வருவார்கள். அவர்களிடம் தான் இந்த செக்யூரிட்டிகள்,காட்ட வேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *