திமுக ஆட்சியில்! நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்ன ? அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் வருமானத்திற்கு கூறவில்லை. ஆனால் ,திமுக ஆட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தற்போது பரவலாக பேசப்படும் தகவல்.

இது எதனால்? ஒரு பக்கம் டாஸ்மாக் வருமானம், மற்றொரு பக்கம் பத்திரப்பதிவு, டிடிசிபி, சி எம் டி ஏ, கனிம வளம், வரி வருவாய்கள், மற்றும் பெட்ரோல், டீசல் ,ஆயில் போன்றவற்றில் வரக் கூடிய வரிகள், இது தவிர தொழில் வரிகள் ,வணிக நிறுவனங்களின் வரிகள், இவ்வளவும் நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான கோடிகளை தான் தமிழகம் கொண்டுள்ளது.

இவ்வளவு வரிகளும், தமிழ்நாட்டில் வரி வருவாயாக இருந்து கொண்டு இருக்கிற, தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏன் ஏற்படுகிறது? ஒரு பக்கம் தேவையற்ற இலவசங்கள், இந்த இலவசத்தினால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முடியவில்லை. மேலும், அரசாங்கத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கான பண பயன்களை கொடுக்க முடியவில்லை.

இன்னும் போக்குவரத்து துறையின் தொழிலாளர்கள் சுமார் 500 கோடி அளவுக்கு ,இந்த பண பயன்கள் பெறாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் வரி உயர்வு அதிகரித்தும் கூட, இந்த இலவசங்கள் கொடுப்பதால், ஒரு பக்கம் அது நிதி நெருக்கடியை உருவாக்குகிறது.

அடுத்தது உள்ளாட்சி அமைப்புகள் பொதுவாக பேரூராட்சி, நகராட்சி அதிகப்படியான செலவினங்களை கணக்கெழுதி ,ஆடிட்டீங்ல் (auditing) அது எப்படி சரி செய்கிறார்கள் ?என்பது ரகசியமாக மூடி மறைக்கின்ற வேலை . அதையும் மூடி மறைத்து விடுகிறார்கள்.

அதேபோல் கூட்டுறவுத் துறையில் சொல்ல வேண்டியதே இல்லை. அது ஊழல் துறை! அங்கு சரியான கணக்கு வழக்குகள் இல்லை. அந்த உண்மைகளை கேட்டால் , கேட்பவர்களையே குற்றவாளியாக்கி, அவர்களை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்.

எனவே திமுக ஆட்சியின் நிர்வாகம் ஃபெயிலியர் என்பது தான், டோட்டல் ஸ்டாலின் ஆட்சியின் பெயில் மார்க் . மேலும்,கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், இறுதிவரை நம்பி கழுத்து அறுத்து விட்டார்கள் . மேலும், திமுக ஆட்சியில் அவ்வளவு குடும்பங்கள், எவ்வளவு நம்பிக்கையுடன் ?எதிர்பார்ப்புடன் இருந்திருப்பார்கள்? மேலும்,அரசு ஊழியர்களுக்கு சம்பளம் என்றாலும், திமுக ஆட்சியில் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யவும் பயப்படுகிறார்கள். புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் பயப்படுகிறார்கள்.

எதற்கு பயப்படவில்லை? என்றால், ஊழல் செய்வதற்கு மட்டுமே இவர்கள் தகுதியானவர்கள், அதற்கு பயப்பட மாட்டார்கள் . பேச்சில் திறமையானவர்கள், இந்த வாய்ப் பேச்சு சவடால் தான், இவர்களுடைய அரசியல். வேறு ஒன்றும் இல்லை.

மேலும்,கோயில் நிர்வாகம் உண்மையிலேயே எல்லா கோயில்களிலும், தலைகீழாக இருக்கிறது. கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் குமுறல் .அது சொல்லி மாலாது .அவரவர் மன சாட்சிக்கே தெரியும் .

தவிர,சரியான நிர்வாகத்தை கொடுக்கத் தெரியாமல் தான், இன்று தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி கடன் ஆக்கி இருக்கிறார்கள். அதற்கு தேவையில்லாமல் வட்டி கட்டிக்கொண்டு, இலவசங்களை கொடுத்து கொண்டு, நிர்வாகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் .

மேலும்,இப்போதும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் ,இலவசங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் நிதி நிலைமை என்ன? என்று தெரியாமல் ,அரசியல் கட்சிகள், இலவசங்களை அறிவிக்க கூடாது. இந்த இலவசத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கிறது. அதை ஏன் அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை?

மேலும் ,10 லட்சம் கோடி கடன் இருக்கும் போது, எதற்கு இலவசங்கள்? ஒருவர் கூட டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் இன்று வரை சொல்லவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாமல், அதற்கான திட்டங்களை அறிவிக்காமல், ஓட்டுக்கு அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளின் நிர்வாகத்தால் ,நாடு இன்னும் பின்னோக்கி சென்று, அரசு ஊழியர்களுக்கே, சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு கூட தள்ளி விடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *