
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது மட்டுமே ,அதன் கடமையாக நினைக்கக் கூடாது.
அது இந்த தேசத்திற்கும், சமூகத்திற்கும் உயிர் மூச்சான பணி என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும்,தேர்தலை வைத்து தான் அதிகாரம். அதிகாரம் கையில் வந்தவுடன் மக்களுக்கான பணியை மறந்து விட்டு, அவர்களுடைய சுய லாபத்தையும் ,சுயநலத்தையும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தகுதி இல்லாத அரசியல் கட்சிகள் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்த சமூகத்திற்கு அது போராட்டமாகவும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளை நாட்டில் தடை செய்ய வேண்டும். நாட்டில் அரசியல் கட்சிகளால் ரவுடிசம் பெறுகிறது ,ஊழல்கள் அதிகரிக்கிறது .மக்களின் வாழ்க்கை போராட்டம் ,சமூக போராட்டம் இணைந்து, இந்த அரசியல் கட்சிகளின் பின்னணியில் தொடருகின்ற அவலங்கள், இது நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக உருவெடுத்துள்ளது .

மேலும்,இதைப் பற்றி எந்த பத்திரிகை ,ஊடகங்களும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறது? அந்த அரசியல் கட்சியினரால் சமூகத்திற்கு என்ன நன்மை? என்பதை கணக்கெடுங்கள் .இவர்கள் சமூகத்திற்கு நன்மையா? இல்லை ,சமூகத்திற்கு போராளி என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், மணல் கொள்ளை, பல இல்லீகல் ஆக்டிவிட்டி ஸ் (illegal activities )செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஜாதி கட்சிகள் வந்ததிலிருந்து அவர்களுடைய சுயநலத்திற்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் பேசுவதெல்லாம் கொள்கை, எங்கள் கொள்கை, அந்த கொள்கை, இந்த கொள்கை ஆனால், செயல்பாடு எந்த கொள்கை?
இதுவரை இவர்களுடைய கட்சியினர், இவர் செய்தது என்ன? பேசுவதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தமே இருக்காது. இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் செயல்பாடு. இதை தடுக்க வேண்டும் என்றால்! நாட்டில் தேர்தல் ஆணையம் தகுதியற்ற அரசியல் கட்சிகளை தகுதி நீக்க செய்ய வேண்டும்.

அதாவது இந்த தேசத்திற்கும், சமூகத்திற்கும் விரோதமாக செயல்படக்கூடிய அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். இது தவிர, தேர்தல் நேரத்தில் மக்களிடம் தெரிவிக்கும் வாக்குறுதிகள் எந்த காலத்திலும், அது நடத்த முடியாத ஒன்று. அப்படி பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றும் வேலையை அரசியல் கட்சிகள் செய்ய ,தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது.

மேலும். தற்போது உத்தரப்பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, என்ற தேர்தல் வாக்குறுதி பொதுமக்களை ஏமாற்றும் வாக்குறுதி. இது எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாது. அப்படி வீட்டுக்கு ஒருவருக்கு அரசின் வேலை வாய்ப்பு கொடுத்துவிட்டால், அரசாங்க கஜானா காலி ஆகி அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதி இருக்காது. வாயிலே சொல்வது மிகவும் சுலபமான வேலை. ஆனால் அது செயல்படுத்துவது தான் மிகக் கடினமான வேலை.

அதேபோல். தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த பொய் தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பதில் மிக சாமர்த்தியசாலிகள். திமுக இதுவரை தேர்தல் வாக்குறுதியில் ஒன்றுகூட அதை உருப்படியாக நிறைவேற்ற வில்லை. உதாரணத்திற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்வோம் ,அதுவும் குறிப்பாக ஐந்து சவரன் வரை சொன்னார்கள்.

ஆனால் ,கடமைக்கு வங்கிகளில் ஒரு நூறு பேருக்கு இந்த கடனை தள்ளுபடி செய்துவிட்டு, நாங்கள் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் இது பற்றி வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆமா சார் நாங்கள் 110 பேருக்கு கொடுத்து விட்டோம் .கடன் தள்ளுபடி செய்து விட்டோமா? இல்லையா? அவ்வளவுதான். அது எவ்வளவு பேர் என்று எல்லாம் நீங்கள் கணக்கு கேட்கக்கூடாது என்று வங்கி அதிகாரி சொன்னார்.
அப்படி என்றால்! திமுக எப்படிப்பட்ட பொய் வாக்குறுதியை மக்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்? அது மட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது சொல்கிறார். வரப்போவது நம்ம ஆட்சி தான், தலைவர் சொல்லிவிட்டார். கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும். நகை கடன் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து விட்டார். அதனால் இப்போதே நீங்கள் தைரியமாக இருங்கள் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.

அதுதான் சொன்னேன், இவர்கள் பேசுவதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. இதையெல்லாம் ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கக் கூடாது. இந்த தேர்தலை நம்பி தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஜனநாயகத்தின் உயிர்நாடி.

இதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு, இப்படிப்பட்ட பொய் வாக்குறுதிகள் கொடுக்கின்ற அரசியல் கட்சிகள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா? மேலும், இவர்கள் சொல்லுகின்ற திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரத்தை எப்படி உங்களால் ஏற்படுத்த முடியும்? என்ற கேள்வியும், தேர்தல் ஆணையம் அவர்களிடம் கேட்க வேண்டும்.

அது வாயிலே சொல்லிவிட்டு, போற வேலையாக இருக்கக் கூடாது. அதற்கான ஆதாரத்தை அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியும், எழுத்து மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி எழுத்து மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், செயல்படுத்தப்பட விட்டால் மக்களின் நம்பிக்கை தேர்தல் என்பது ஏமாற்றமாக அரசியல் கட்சிகள் செயல்படுத்த அனுமதிக்க கூடாது. அதற்கான ஒழுங்கு நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் நாட்டுக்கு தேவை இல்லை. மக்களை ஏமாற்ற கூடியவர்கள், மக்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் எதற்கு? ஆயிரம் அரசியல் கட்சிகள் இருந்து பயனில்லை. நாலு அரசியல் கட்சிகள் மக்களுக்காக பணியாற்றக்கூடிய அரசியல் கட்சிகள் என்ற தகுதி உள்ள கட்சிகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றுவதற்கு, அவர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதற்கு, அவர்களை பணம், பொருள் கொடுத்து, அவர்களுடைய அதிகாரத்தை விலைக்கு வாங்கி, ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக் கூத்தாக்கும் வேலை. அதனால், தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் மீது, அவர்களுடைய அங்கீகாரத்தை ரத்து செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்குமா?