
நாட்டில் ஊடக சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை தொலைக்காட்சிகள் எது? என்று அதை மட்டுமே ,அங்கீகரிக்க வேண்டும்.

மேலும், இன்றய அரசியல் கட்சிகளின் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், உண்மைக்கு புறம்பான செய்திகளை, அதாவது ஒரு எதிர்க்கட்சிகளை போல, செயல்பட்டுக் கொண்டிருப்பது, நாட்டில் மக்களுக்கு உண்மை எது? பொய் எது? தெரியாமல் குழப்பிக் கொண்டிருக்கும் வேலை. அந்த வேலையை சன் டிவி செய்து கொண்டிருக்கிறது.

மேலும்,அரசியல் படித்தவர்களா ? அல்லது அவர்கள் அரசியல் வரலாறு படிக்காதவர்களா? என்பது தெரியாது. ஆனால், அவர்களையும் உட்கார வைத்து விவாதம் என்ற நிகழ்ச்சியை ஒன்று நடத்திக் கொண்டு, அவர்களை பேச வைத்து, பார்க்கும் மக்களை முட்டாளாக்கும் வேலை யெல்லாம் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,உண்மையை சொல்வதற்கு எத்தனை பத்திரிகைகள் என்று தேட வேண்டி இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் போல, செயல்படக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், இன்று சுயநலத்தின் பேரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இதையெல்லாம் மாற்றினால் தான், மக்களுக்கு எது உண்மை ?எது பொய்? என்பதை பாமர மக்களுக்கு புரியும்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் திரை மறைவு வேலைகள் நடந்தது உளவுத்துறைக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அதை வெளிப்படையாகவே தற்போது பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல, வெளிநாடுகளில் அவருக்கு எதிரான சதி திட்டங்கள் தீட்டியது உண்மை. இந்தத் திரை மறைவுக்கு பின்னால் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற முஸ்லிம்கள் இருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது. இன்று தேச துரோக வேலைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தொடர்ந்து மக்களிடம் அதனுடைய தோல்வி. இனி நாம் மோடி இருக்கும் வரை இந்தியாவில் வர முடியாது என்பது அவர்களுக்கு உறுதியாகிவிட்டது.
அதனால், இந்த ரோகிங்கியா வெளிநாட்டு முஸ்லிம்கள் ,வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகள், வங்காளதேசத்தில் இருந்து வருபவர்கள், இவர்களையெல்லாம் வைத்து மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி ஜெயித்துக் கொண்டிருந்தது போல, தமிழ்நாட்டில் திமுக கள்ள ஓட்டில் ஜெயித்துக் கொண்டிருப்பது போல, இப்படி பல மாநிலங்களில் குறுக்கு வழியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த எதிர்க்கட்சிகள்.

மேலும்,நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி தான் ஆண்டது. அப்போது இந்தியாவின் வளர்ச்சி என்ன? வெளிநாடுகளில் அதனுடைய மதிப்பு என்ன? இதை எல்லாம் சன் டிவி பேசக்கூடிய நபர்களுக்கு தெரியுமா? தெரியாதா? இல்லை அந்த சன் டிவியின் ஆசிரியருக்காவது தெரியுமா? தெரியாதா? இதை பொதுமக்களில் ஒருவராக பேசுகிறேன் .
மேலும்,இது பிஜேபிக்கோ அல்லது திமுகவுக்கோ, காங்கிரஸ்கோ, சன் டிவி க்கோ அல்ல, ஊடகத்தின் உரிமைக்காக பேசுகிறேன். ஒரு ஊடகம், நாட்டு மக்களுக்கு எது உண்மை ?என்று எடுத்துரைப்பது தான் அதனுடைய கடமை.

இந்த சன் தொலைக்காட்சி,அரசின் அனைத்து சலுகைகளும் ,அனுபவித்துக் கொண்டு ,பல பொய்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தால், இதற்கு கீழே இருக்கக்கூடிய பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள்,சமூகத்திற்கு பங்களிப்பு உண்மைகளையா? அல்லது பொய்களையா? இதில் பெரிய பத்திரிக்கை , பெரிய தொலைக்காட்சி, சிறிய பத்திரிகை என்ற வேற்றுமைகள் செய்தித் துறையின் சலுகை, விளம்பரங்களால் இருக்கும்போது, தகுதி, தரம் ,நம்பகத்தன்மை, சமூக நலன், தேச நலன் ,மக்கள் நலன், இதில் ஒவ்வொரு பத்திரிகை, தொலைக்காட்சியும், அது எத்தனையாவது இடத்தில் இருக்கிறது ?என்பதை மத்திய மாநில, அரசின் செய்தித்துறை எப்போதாவது இதைப்பற்றிய ஆய்வுக்கு உட்படுத்தியது உண்டா?

செய்தி என்றால் என்ன? யார் என்ன சொன்னாலும் ,அது செய்தியா? அதனுடைய உண்மை எத்தனை சதவீதம்? இதுதான் செய்தி! ஆனால் இன்றைய அரசியல் கட்சியினர் பேசுவதெல்லாம் செய்தி என்று சொல்லி, மக்களை ஏமாற்றுவது, அதை சந்தைப்படுத்துவது பத்திரிக்கை துறையில் இவர்கள் நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்வதில், அதாவது அது,பெரிய பத்திரிக்கையாக இருக்கட்டும், பெரிய தொலைக்காட்சியாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் அவர்களுக்கு நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்ள தகுதி இல்லை. இது தகுதியான பத்திரிக்கையாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தெரிந்த உண்மை.
மேலும்,பொது மக்களை முட்டாளாக்க ,ஊடகத்தின் நடுநிலை என்று சொல்லிவிட்டு, இப்படி எல்லாம் செய்திகளை வெளியிடுவது ,தகுதியான ஊடகங்கள் கூட மக்களிடம் பேசு பொருளாகறது.எனவே,இதையெல்லாம் சரி செய்ய மத்திய அரசு சர்குலேஷன் சட்டத்தை விட, பத்திரிகையின் தகுதி ,தரம், தேசநலன், சமூக நலன், மக்கள் நலன், செய்திகளின் நம்பகத்தன்மை, இதன் அடிப்படையில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை அங்கீகரித்து, சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.

ஆனால், ஒரு அரசியல் கட்சி சார்ந்த தொலைக்காட்சியாக ஒரு நாட்டின் பிரதமரை யாரோ ஒரு தனிநபர் இழிவாக பேசுவது, ஊடகத்தின் நம்பகத் தன்மைக்கு எதிரான ஒன்று.அது தான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி?

மேலும்,இன்று வரை காங்கிரஸ் கட்சியில் ,பா. சிதம்பரத்தின் ஊழல், சோனியா காந்தி ,ராகுல் காந்தியின் ஊழல் வழக்குகள், போய்க்கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிந்த பாடு இல்லை. இது ஏன்? இப்படி நீதிமன்றத்தில் இந்த வழக்குகளுக்கு இவ்வளவு இழு பறிகள் ? இதுவே காங்கிரஸ் கட்சி என்றால் ,இப்படிப்பட்ட ஊழல் வழக்குகளுக்கு எல்லாம், இந் நேரம் பிஜேபியை ஒழித்து கட்டி இருப்பார்கள்.

மேலும்,மோடி எதிலும் நிதானமாக செயல்பட கூடியவர். இவரால் இந்தியாவின் பொருளாதாரம், வளர்ச்சி, எல்லாம் உலக அரங்கில் பேசப்படுகிறது. ஆனால், உள்நாட்டில் ஒரு தொலைக்காட்சியில், அதைப் பற்றி கேவலமாக பேசுகின்ற அளவுக்கு ஊடகத்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்பதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களின் கண்டன குரல்.

மேலும் ,பத்திரிகை சுதந்திரம், பத்திரிகையின் நம்பகத்தன்மை, சமூக நலன், இந்த தேச நலன் முக்கியத்துவமானதாக இருக்க வேண்டும் அதற்காக ஒவ்வொரு பத்திரிகை தொலைக்காட்சிகளையும், ஆய்வுக்கு உட்படுத்தி, அதனுடைய அங்கீகாரம், ,RNI எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதாவது இது கட்சி பத்திரிக்கையா ?கட்சி தொலைக்காட்சியா? நடுநிலையா? அல்லது வியாபாரமா ? சமூக நலனா? வியாபாரம் மற்றும் அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கு எப்படி ,சலுகை விளம்பரங்கள் கொடுக்கலாம்? தவிர, நீங்கள் சமூக நலனுக்காக பத்திரிக்கை வியாபாரம் செய்கிறீர்களா? இதை மத்திய மாநில ,அரசின் செய்தித்துறை உறுதிப்படுத்துங்கள்.