நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அரசியல் நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரும் பேசவில்லை.

மேலும்,இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் இந்த ஊழல்வாதிகளின் ஆட்சியே தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதாவது திமுக விட்டால் ,அதிமுக !அதிமுக விட்டால் திமுக !இப்படி மாற்றி ,மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சி இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நோக்கமாக இன்றும் இருக்கிறது.

இதைத்தான் எடப்பாடி பழனிசாமியும், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை எப்படியாவது அதிக நாள் நீடிக்க வைக்க கூடாது என்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.

அதேபோல், ஸ்டாலின்! தவெக அரசை எந்த விதத்திலயாவது கவிழ்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். தவிர,டிடிவி தினகரன் இந்த ஆட்சி மக்களை மீம்ஸ், ரீவ்ஸ் போட்டு ஏமாற்றி வந்த ஆட்சி என்கிறார்.

அதேபோல் தான் பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் சினிமா ரசிகர் மன்ற தலைவர்கள் போல் அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்று விமர்சிக்கிறார். அதேபோல் ,சீமான் இப்படி ஒவ்வொருவரும் ,தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் !ஊழலே இல்லை என்றாலும், ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்களுடைய ஐடி விங் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,பல லட்சம் கோடி அதிமுக, திமுக ஆட்சியில் கொள்ளையடித்த போது இந்த ஐடி வீங்குகள் எல்லாம் எங்கே போனது? அப்போது நடந்த குற்றங்கள் ,மோசடிகள் ,கொலைகள் அதைப் பற்றி எல்லாம் பேசாமல் எங்கே போனார்கள்? தொடர்ந்து இவர்களுடைய ஊடகங்கள் மக்களை ஏமாற்றலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது.

ஏனென்றால்,மக்களை இனி பேசியே மாற்றும் காலம் இந்த ஊடக வாய்களால் முடியாது. மக்கள் தெளிவாக இருந்ததால் தான், ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை இந்த ஊழல்வாதிகள் ,ஊழல் அரசியல் கட்சியினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,,இனி தமிழ்நாட்டுக்கு அதிமுக ,திமுக தேவையில்லை என்றுதான் ஒரு புதிய மாற்றத்தில்! தமிழக வெற்றிக் கழக ஆட்சியை உருவாக்கி இருக்கின்றனர். இதை அரசியல் தெரிந்தவர்கள், புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் ,மக்கள் அந்த அளவுக்கு? இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகளின் அராஜகங்களை, அநியாயங்களை வெறுத்து விட்டார்கள். என்பது இதுவே சாட்சி .

மேலும்,பத்திரிகைகளில் கூட சுதந்திரமாக எழுத முடியாது. உண்மைகளைப் பேச முடியாது, உண்மைகளை எழுத முடியாது. அதற்கு பத்திரிகைகளே போட்டு கொடுப்பார்கள். நிருபர்களை போட்டு கொடுப்பார்கள். அவ்வளவு கேவலமான ஒரு ஆட்சியை அதிமுக, திமுக காலத்தில் நடந்தேறி உள்ளது.

மேலும்,ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி ஆட்சி !அந்த அளவுக்கு மக்களுக்கான ஆட்சி இல்லை. அவரவர் வந்த வரைக்கும், சுருட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவரால் கேள்வி கேட்க முடியவில்லை.

இது இப்படி என்று! ஸ்டாலினுக்கு மக்கள் மாற்றி வாக்களித்து பார்த்தார்கள். இது அதைவிட கொடுங்கோள் ஆட்சியாக இருந்தது. அப்போதுதான் மக்கள் வெறுத்து ஒரு புதிய கட்சி !ஆட்சிக்கு வர வேண்டும் என்று ,வேட்பாளர்களின் முகமோ ,பெயரோ, எதுவுமே யாருக்கும் தெரியாது .இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் ,விஷயம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், எல்லாமே மாற்றி ஓட்டு போட்டார்கள்.

மேலும்,இவர்கள் 28 கட்சிகளை ஒன்றாக சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து கூட அதிமுக ,திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. பணத்தைக் கொடுத்துப் பார்த்தார்கள். இலவச பொருட்களை கொடுத்து பார்த்தார்கள். எத்தனையோ பொய்களை சொல்லிப் பார்த்தார்கள். மக்களிடம் எதுவும் பயனளிக்கவில்லை.

எனவே ,இந்த ஊழல் வாதிகள் இனியும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காணக்கூடாது. உங்களுடைய கனவுகள் எல்லாம் முடிந்து விட்டது. அடுத்து இளைய தலைமுறைகள், அவர்கள் வேறு மாதிரி கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அதனால், இனிமேல் உங்கள் கனவு பலிக்காது. இனி வேறு ஏதாவது புதிய கட்சி வந்தால், அதற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்களே ஒழிய, இனி பழைய கட்சிகளுக்கு! அது ஜாதி கட்சியாக இருக்கட்டும் ,ஜாதி இல்லாத கட்சியாக கூட இருக்கட்டும்,

இனிமேல் மக்களை கார்ப்பரேட் பத்திரிக்கை மைக்கைகள் !ஏமாற்ற முடியாது என்பதை ஊழல்வாதிகள் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *