
நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.

தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் ஊழலுக்கு ஒத்து ஊதக்கூடிய சட்டங்களாகத் தான் இருந்து வருகிறது.

மேலும், சாமானிய மக்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், இந்த சர்குலேஷன் சட்டத்தை வைத்து பல ஆண்டுகளாக செய்தித் துறையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . இதை தான் எங்களை போன்ற பத்திரிகைகள் ஒரு சில தொடர்ந்து அது பற்றி கேள்வி கேட்டு, போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த சட்டமே தவறானது.

மேலும்,இது கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில், தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது பெரிய பத்திரிகை நிறுவனம் ஒன்று கோவையில் தினசரி ஆயிரம் பிரதிகள் (1000) தான் அச்சு அடிக்கிறார்கள். அதற்கு 400 வால் போஸ்டர்கள் அச்சடிக்கிறார்கள். அப்படி என்றால், ஒரு கடைக்கு இரண்டு பேப்பர் வீதம் இந்த பத்திரிகைகள் தொங்க விடப்படுகிறது. இந்த ஆயிரம் (1000)பிரதிகளில் எவ்வளவு விற்பனை? இதுதான் சர்குலேஷன்.

ஆனால், தினசரி பத்தாயிரம் பிரதிகள் அச்சு அடிக்க வேண்டும். ஒரு பெரிய பத்திரிக்கை கார்ப்பரேட் நிறுவனமே, ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறது என்றால்! மீதி பத்திரிகைகள் எல்லாம் தினசரி எத்தனை பத்திரிகைகள் அச்சடிக்கும்? அதற்கு எப்படி மத்திய மாநில, அரசின் சலுகைகள், விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது? இந்த தகவல் என்னுடைய நண்பர் கோவையில் கல்லூரி முதல்வர் மூலம் கிடைத்த தகவல்.
இப்படிப்பட்ட மோசடி , மூலம் செய்த துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது .இதைப் பற்றி பத்திரிக்கை துறைக்கு தெரிய வேண்டும் என்று தான் இச் செய்தியை வெளியிடுகிறேன்.

மேலும்,இதில் கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்கள் மீது, எங்களுக்கு தனிப்பட்ட முறையில் ,எந்த விரோதமோ, பகையோ கிடையாது. ஆனால் ,தரமான, தகுதியான பத்திரிகைகளுக்கு இந்த மத்திய மாநில அரசின் செய்தி துறையின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஏமாற்றி வருகிறது.
தவிர,அதே சலுகை, விளம்பரங்களை எங்களுக்கு கொடுத்தால் பத்திரிக்கையின் தரத்துக்கும், தகுதிக்கும் பார்த்து கொடுத்தால் கூட, அது சமூக நலனுக்கும், இந்த தேசத்திற்கும் மக்களின் வரிப்பணம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ,ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான விளம்பரங்கள், சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருவது, ஆட்சியாளர்களின் உள் நோக்கம் என்ன? இவர்களுடைய ஊழலுக்கு ஒத்து ஊதுவதற்காக கொடுக்கிறார்களா? தவிர,மேடையில் பேசும் போது மட்டும் அடிக்கடி ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசுவார். ஆனால், செயலில் அதை செயல்படுத்த மாட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் சமூக நீதி பற்றிய எத்தனையோ, அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால், பத்திரிக்கை துறையில் நடக்கக்கூடிய இந்த சமூக அநீதியை பற்றி ஏன் பேசவில்லை? என்பதுதான் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி?
மேலும், திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்.ஓ அஸ்வின் போல, எந்தெந்த மாவட்டத்தில் இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளின் ஏஜென்ட்களாக பி.ஆர்.ஓ க்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ, யாருக்கு தெரியும் ? அவர்களைப் போன்றவர்களுக்கு தான் ,இந்த செய்தி அவசியம் தெரிய வேண்டும்.

மேலும்,பெரிய நிறுவனம் என்றால்! அந்த செய்தியின் தரம் என்ன? அதனால் மக்களுக்கு பயன் என்ன? இது எல்லாம் இந்த குறுக்கு வழியில் வேலைக்கு வந்த இந்த பி.ஆர்.ஓ அஸ்வின் போன்றவர்களை பற்றி பத்திரிக்கை துறைக்கும், பொது மக்களுக்கு தெரியுமா? அரசியல் கட்சிகளுக்கும் தெரியுமா? தவிர, இதைப் பற்றிய உண்மைகள் எத்தனை பத்திரிகை நிருபர்களுக்கு தெரியும்?
மேலும்,இப்படிப்பட்ட மோசடி சட்டத்தை பத்திரிக்கை துறையில் இருந்து அகற்றி ,ஒவ்வொரு பத்திரிகை செய்தியின் தரமும், அதன் உண்மை தன்மையும், சமூக நோக்கமும்,நாட்டு மக்களுக்கு அதற்கான பயனும், அதை உறுதி செய்ய முடியுமா?
மேலும், ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு மறைமுகமாக அதை சப்போர்ட் செய்யும் பத்திரிகைகளுக்கு மத்திய மாநில அரசின் செய்தித்துறை கொடுக்க வேண்டிய உள்நோக்கம் என்ன?

மேலும், அரசு செய்தி பெயரில் இதற்காக பல ஆயிரம் கோடி மக்களின் வரி பணம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமானது என்றால், அதை எப்படி பத்திரிக்கை துறை ஏற்றுக் கொள்ளும்? அதனால், இதில் மிகப்பெரிய மோசடி ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலியான கணக்குகள் காட்டப்பட்டு, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளை இந்த சர்குலேஷன் சட்டத்தின் மூலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .
மேலும், இந்த பத்திரிகைகள் காட்டப்படும் கணக்குகளுக்கும் விற்பனைக்கும் சம்பந்தமே இல்லாமல் கணக்கு காட்டப்படுகிறது.
அதாவது ஆடிட்டர் ரிப்போர்ட் (audit report) இந்த ஆடிட்டர் ரிப்போர்ட் வைத்து மத்திய மாநில அரசின் உளவுத்துறை அதிகாரிகள்! இந்த பத்திரிகைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு அச்சடிக்கிறது? எவ்வளவு விற்பனை தினசரி நடக்கிறது? இதனுடைய பயன்கள் மக்களுக்கு என்ன? இதுகுறித்து மத்திய அரசுக்கு ஆய்வு செய்து ஒரு ரிப்போர்ட் பொதுமக்களிடையே எடுத்தால்! உண்மை வெளிவரும்.

இதன் மூலம் மக்களின் கோடிக்கணக்கான வரி பணம் வீணடிக்கப்படுவது தடுக்க முடியும். தவிர, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் தரமான பத்திரிகைகளுக்கு, இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்க, இது தினசரி ,மாதம் ,வாரம் என்ற பிரிவினை இல்லாமல் , பத்திரிகைகளின் இணையதளமும், செய்தித் துறையில் சர்குலேஷனாக ஏன் கொண்டு வர வேண்டும்.

மேலும்,பத்திரிகையின் தரமும் ,செய்தியின் தரமும், சமூக நலன்கள் நோக்கமும், உள்ள பத்திரிகைகளுக்கு இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால்! அதன் பயன்கள் நாட்டு மக்களுக்கானது. தேச நன்மைக்கானது. இதை ஆய்வு செய்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் வைஷ்ணவ் நடவடிக்கை எடுக்க சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .