The central government led by Prime Minister Narendra Modi has done a better job in terms of national security.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செய்துள்ளது . அதாவது உலக அளவிலான விமானப்படையின் வலிமையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியாவுக்கு 69.4 புள்ளிகளும், சீனாவுக்கு 63. 8 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இந்த தரவரிசை விமானப்படையின் செயல்படும் திறன் ,வேகம், ஒருங்கிணைந்து தாக்குதல் ,போன்றவற்றின் அடிப்படையில் ,இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும்,
உலக அரங்கில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக ,ராணுவத்தில் வலிமை பெற்று போட்டி போடும் அளவில், அமெரிக்கா ரஷ்யாவுடன் இருந்து வருவது இந்தியாவின் வலிமை உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு சாரும்.

மேலும்,அறிவியல் தொழில் நுட்பத்திலும், மருத்துவத் துறையிலும், விண்வெளி ஆராய்ச்சியிலும்,இன்று சிறப்பான ஒரு முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றால், அது பிஜேபி அரசுக்கு தான் பெருமை.
இது தவிர, தொழில்துறையில் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி விஷயத்திலும், அயல்நாட்டு கொள்கை விஷயத்திலும் ,பிரதமர் மோடியின் சாணக்கியத்தனம் உலக அரங்கில் பேசப்படும் ஒன்று. இது நாட்டின் எந்த பிரதமருக்கும் கிடைக்காத ஒரு செல்வாக்கு நரேந்திர மோடிக்கு மட்டுமே !

மேலும்,அரசியல் தெரியாத மக்களை வைத்துக்கொண்டு ,அரசியல் செய்கின்ற கம்யூனிஸ்டுகள், திருமாவளவன் ,வைகோ, சீமான், திமுக ,காங்கிரஸ் ,மற்றும் மம்தா போன்ற அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், பிஜேபி ஏதோ இந்த நாட்டுக்கு உதவாத கட்சி போலவும், அது மதவாத கட்சி! என்று இவர்கள் எல்லாம் எதிர்ப்பது போன்று அரசியல் தெரியாத மக்களிடம்’ பேசிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ,இவர்களையெல்லாம் மக்கள் அதிகாரத்தில் கேட்கின்ற கேள்விக்கு ஒரு அரசியல்வாதி கூட பதில் சொல்ல முடியாது. நிற்க வையுங்கள்.பேசத் தயார். மதத்தை எதிர்க்கின்ற இந்த கூட்டம் ?எந்த மாதத்தில் இவர்கள் இருக்கிறார்கள்? அதை சொல்லுங்கள்? அப்படி என்றால்!

முஸ்லிம் ,கிறிஸ்தவ மதங்களுக்கு மட்டும் இவர்கள் ஏன் ? மேலும், இவர்கள் இந்து மதத்தை மட்டும் தான் மதவாத சக்தி என்று சொல்கிறார்களா? கிருத்துவமும் ,முஸ்லிமும் மதம் இல்லையா? இரண்டும் தான் உண்மையான மதம். இந்து மதம் மதத்தில் சேர்ந்தது அலல, அது சனாதனத்தில் சேர்ந்தது. மேலும்,
இந்தக் கூட்டம் எந்த மதவாத சக்திக்கு துணை போகிறார்கள்? அடுத்தது பிஜேபியை எதிர்க்கக் கூடிய இந்த மதவாத சக்தி கூட்டங்கள் ஏன்? ஊழலை எதிர்ப்போம்? என்று ஒருவர் கூட வாய் திறக்கவில்லை?

மேலும்,ஊழலுக்கு எதிரான கட்சிகள் என்று ஒருவராவது சொல்வதற்கு தைரியம் இருக்கிறதா? மேலும் ,நாங்கள் ஊழலை எதிர்க்கின்ற கட்சிகள் என்று இந்த கூட்டம் பேச முடியுமா? தவிர , இந்த அரசியல் கட்சிகள் , அரசியல் தெரியாத மக்களிடம் பேசிவிட்டு போகக்கூடிய அரசியல் கட்சிகள்.

மேலும், இவர்களை நாட்டில் சுயநலவாதிகள் , ஊழலுக்கு துணை போகிறவர்கள், தேச விரோதா கும்பல்,அரசியல் தெரியாதவர்கள், கொள்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள், கொள்கையை பற்றி பேசும்,அரசியல் தெரியாத கூட்டம் தான், இவர்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறது.

மேலும்,அரசியல் என்பது உங்களுக்காக மட்டும் அரசியல் அல்ல, நாட்டுக்காக அரசியல்! என்பதை அரசியல் தெரியாத கூட்டங்கள் இன்னும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இவர்களெல்லாம் வெந்ததைத் தின்று, வந்த வரைக்கும் பேசும் கூட்டங்கள் தான் ,இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். மதம் என்றால் என்ன? மதவாத சக்தி என்றால் என்ன? எவனாவது இதற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறானா?

மேலும் மதத்திற்கும், மதவாத சக்திக்கும், என்ன வித்தியாசம் என்பது இவர்களுக்கு தெரியுமா? ஏதோ அரசியல் தெரியாத வெத்து வெட்டு, கைக்கூலிகள் ,கைதட்ட ,நீங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

மேலும், அவர்களுக்கு அந்த ஏரியாவில், அந்த பகுதியில் ,கொடியை காட்டி அல்லது இந்த கட்சி சின்னத்தை வைத்து ,ஊர ஏமாற்றிக் கொண்டு ,மக்களை ஏமாற்றிக் கொண்டு ,இவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். மேலும், நாட்டில்! அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில்,50 காலம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் செய்த செயல்பாடுகளை இவர்கள் பட்டியல் போட்டு சொல்வார்களா? அவர்கள் ஆட்சியின் ஊழலை பட்டியல் போடுவார்களா? அல்லது மதச்சார்பற்ற சக்தி என்று சொல்லும் இவர்கள் திமுகவின் ஊழலை பட்டியல் போடுவார்களா?
தவிர, இவர்களின் ஊழல்!உலக நாடுகளில், எந்தெந்த நாடு என்றும் , அதன் முதலீடுகளை பட்டியல் போடுவார்களா? உளவுத்துறை ,சிபிஐ,அதிகாரிகளே அசந்து போய் இருக்கிறார்களாம்.

தமிழ்நாட்டின் ஊழல்வாதிகள், பிஜேபியை எதிர்ப்பதற்கு சக்தி இல்லாமல், மதவாத சக்தி !மதவாத சக்தி! என்று இந்த ஊழல்வாத சக்திகள் பேசிக் கொண்டு ,அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே,தமிழக மக்கள் இவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு கொள்வது அவசியம். மேலும்,இது எதிர்கால தலைமுறைகளுக்கும், நாட்டின் வலுவான அரசியல் உருவாக்குவதற்கும், இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து ஏமாறாமல் ஒவ்வொருவருக்கும் நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்கு உண்டு என்பதை புரிந்து கொண்டால் சரி.
