
2026 சட்டமன்ற தேர்தலில் , ராமதாஸ் திமுக ,அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து பலன் அளிக்காமல், முடியாது என்று ஓரம் கட்டி விட்டார்கள்.

அதே போல், சசிகலாவும், விஜய்க்கு தூண்டில் போட்டு பார்த்தார்கள், இதுவும் நடக்கவில்லை. இறுதியில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்,நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு அர்த்தம் தெரியாமல், அதற்கான மரியாதை தெரியாமல், பணம் இருந்தால் கட்சி ஆரம்பித்து விடலாம். இந்த இரண்டு பேரிடமும், பல லட்சம் கோடிகள் பணம் இருக்கிறது. பாவம் அந்த பணத்தை வைத்துக் கொண்டு இருவரும் என்ன செய்வார்கள்? ஏதோ கணக்கு காட்டுவதற்காக அரசியல் கட்சி தேவையல்லவா?

மேலும், இப்படி எல்லாம் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இருப்பதற்கு முக்கிய காரணமே மக்களுக்கு அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு தெரியாமல் இருப்பது தான் முக்கிய காரணம். இது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் தெரிந்து இருக்க வேண்டும்.

பல சோம்பேறி கூட்டங்கள் இணையதளத்தில் வரக்கூடிய பொய் செய்திகளை பார்த்துவிட்டு, இதுதான் அரசியல் என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, உண்மையான செய்திகளை அலட்சியப்படுத்துவதும், பெரிய பத்திரிகைகள் சொல்லும் பொய்களை நம்பி ,அதுதான் அரசியல் என்று இன்றுவரை படித்தவர்களும், படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் தமிழ்நாட்டில் ,இப்படிப்பட்ட பண முதலாளிகள் அரசியல் வியாபாரம் தொடங்கி ,மக்களை வைத்து அரசியல் கட்சி வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த வியாபாரத்தில் இவர்கள் போடும் முதலீடு என்ன என்றாவது தெரியுமா?

இவர்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை வைத்து மக்களை அரசியல் வியாபாரமும் , அரசியல் கட்சி வியாபாரமும் ,நடத்துகிறார்கள். அரசியலுக்கான அடிப்படை தகுதி ,அறிவு எதுவும் இல்லாத மக்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தது தான், மிகப்பெரிய தவறு.
சட்டம் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது படித்தவர்களுக்கு பட்டதாரிகளுக்கு ஓட்டு உரிமை. ஆனால், இங்கே ஓட்டுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய தவறு.

மேலும், இவர்களிடம் என்ன பொய் சொன்னாலும் இவர்களுக்கு அரசியலைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத படிக்காத மக்களிடம் அரசியல் செய்து இன்னும் பல கோடிகளை பதவிகளை சம்பாதிப்பதற்கு ஒரு வியாபார கம்பெனிகளாக அரசியல் கட்சிகள் மாறிவிட்டது.

மக்கள் அதிகாரத்தில் எவ்வளவோ உண்மைகளை மக்களிடம் இந்த அரசியல் பற்றிய புரிதல் பாடமாகவே இவர்களுக்கு சொல்லி வருகிறோம். அதைப் படிப்பதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கக்கூடிய மக்கள், youtube களை பார்த்து, என்ன சொல்கிறார்கள்? அதுதான் அரசியல் என்று இன்றுவரை ஏமாந்து கொண்டிருக்கிறது. படித்த சமுதாயமும் ,படிக்காத சமுதாயமும், இணைதள செய்திகளை படியுங்கள். மேலும்,

மக்கள் அதிகாரம் மக்கள் நலனுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. இந்த அரசியல் வியாபாரத்திற்கு யார் தேவைப்படுகிறார்கள்? என்றால் அரசியல் என்றால் என்ன ?என்று தெரியாதவர்கள், அதாவது அடி முட்டாளகள் ,இவர்களுடைய கட்சிகளில் சேர்த்துக்கொண்டு, இவர்களை ஐயா வாழ்க ,ஐயா வாழ்க, என்று கத்துவார்கள். சும்மா கருத்துவார்களா? இவர்கள் பணம் கொடுப்பார்கள். அவர்கள் கத்துவார்கள். இப்படிப்பட்ட போலி அரசியலுக்கு,உழைக்கும் மக்கள் ஏமாளியாகிறான். படித்தவன் ஏமாளி ஆகிறான்.

ஆனால், ஊரை ஏமாற்றும் சோம்பேறிகள் கூட்டம், அடியாட்கள் கூட்டம், இவர்களை வைத்து சட்டத்தை ஏமாற்றி, மக்களையும், எல்லோரையும் சேர்த்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கையில் ஒரு சாயக் கொடி , கட்சி பெயர் கொடுத்து விட்டால், அதை வைத்துக்கொண்டு எல்லோரையும் அடக்குவதற்கு என்ன வழி இருக்கிறது? சட்டத்தை ஏமாற்ற என்ன வழி இருக்கிறது? மேலும்,

எப்படி பொது சொத்துக்களை ஆக்கிரமிக்க வழி இருக்கிறது? மக்களுக்கு 1000, 500 கொடுத்து பஞ்சாயத்து தலைவராகவோ ,கவுன்சிலராக வருவதற்கு என்ன வழி இருக்கிறது? இப்படிப்பட்ட வழிகளில் ,ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமாக இன்றைய அரசியல் கட்சிகள்.எனவே,

இனி அரசியல் கட்சி என்றால்? மக்களுக்கு என்ன நன்மை செய்கிறது? என்ன நன்மை செய்தது? சமூகத்திற்காக என்ன போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றது? கணக்கு காட்டுவதற்கு கூட்டத்தை காண்பித்து, கொடிகளை நட்டு போராட்டம் என்ற பெயரில் நடத்துவது போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் மக்களுக்கான போராட்டமாக இருக்க வேண்டும் .அது மக்களுக்கான வெற்றியாக இருக்க வேண்டும் .அதுதான் அரசியல் கட்சி. அதேபோல்,

நாட்டில் எத்தனையோ லட்சம் பத்திரிகைகள் போல, அரசியல் கட்சிகளும், இலட்சக்கணக்கில் உருவெடுத்து விட்டது. இதில் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, தேச நலனுக்காக ,எந்தெந்த பத்திரிகைகள் ?என்பதை இன்றுவரை மத்திய, மாநில அரசின் செய்தித்துறை தேர்வு செய்து அதற்கான முக்கியத்துவம் தராமல் இருப்பது தான் பத்திரிகை துறையில் போலிகள் அதிக அளவில் உருவெடுத்துள்ளது. இதை மத்திய அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வர வேண்டும்.

இதன் விளைவு ,தான் நாட்டில், கோடிக்கணக்கில் போலி அரசியல்வாதிகள் உருவெடுத்து இருக்கிறார்கள். இந்த உண்மைகளை தெரியாமல், இந்த போலி அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து, அவர்களை மந்திரி பதவிகள் உட்கார வைக்கிறார்கள். அதன் விளைவு இன்று நாட்டில்!

எதிலும் ஊழல்களே ஆட்சி நிர்வாகத்தில் அதிகரிக்கிறது. உழைப்பவன் முன்னேற்றம் கேலிக்கூத்தாகிறது. இதையும், கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் சலுகை, விளம்பரங்களுக்காக இவை எல்லாம் அவர்கள் மக்கள் சேவை செய்பவர்களாக காட்டிக் கொள்வது, சுயநலத்திற்கு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இன்றும் மக்களின் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் காரணம்,

சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, ஜாதி ,மதத்தால் பிரித்தாலும் சூழ்ச்சி, இதுதான் இந்த அரசியல் கட்சிகளுக்கு வியாபாரம் செய்ய முக்கிய காரணமாக இருக்கிறது. இதைப் பற்றி ஒரு பத்திரிகைகள் கூட, இந்த உண்மைகளை சொன்னதுண்டா? மேலும்,

அரசியல் தெரியாதவர்களிடம், வறுமையில் வாழக்கூடிய மக்களிடம், உங்களுக்கு இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சொல்லி, குறிப்பாக சொல்லப் போனால், அரசியல் தெரியாத குருடர்களை கொண்டு போய் பாழும் கிணற்றில் தள்ளி விடுகிறார்கள். பேசுவதெல்லாம் அவர்களுக்காக, ஆனால், பலன் எல்லாம் இவர்களுக்காக ,அப்படி தான் ராமதாஸ் வன்னியர் சமுதாயத்தை 45 ஆண்டு காலம் ஏமாற்றி இட ஒதுக்கீடு அரசியலை வைத்து இவருக்கு போராளி என்ற பட்டம் இவரே ஏற்படுத்திக் கொண்டு, இந்தப் போராளி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த சமுதாயத்தை ஏமாற்றியது போதாது என்று இன்னும் ஏமாற்ற இன்னொரு கட்சி ஆரம்பிக்கிறார் . அந்த அளவுக்கு நாட்டில் அரசியல் என்றால் என்ன? என்று அடிப்படையில் அறிவு தெரியாமல், மக்கள் இருப்பதால் தான், அரசியலில் கொள்ளை அடித்த பணத்தை சசிகலாவும், ராமதாசும் புதிய கட்சியா? மேலும், இதனால், தேவர் சமூகத்திற்கும், வன்னியர் சமூகத்திற்கும் என்ன பயன்? தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பயன்?இவர்கள் பயனடைவதற்கா? இல்லை,இவர்கள் பின்னால் சாயக் கொடி பிடிப்பவர்கள் பயனடைவதற்கா?
மேலும், நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தான், ரவுடியிசம் ஊக்குவிக்கப்படுகிறது. இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது.இதனால், அவர்களுடைய வாழ்க்கை போராட்டம் ஆகிறது. இவர்கள் அரசியல் கட்சி கிரிமினல்களாக மாறுகிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.

இப்படிப்பட்ட போலி அரசியல் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கொலைகள், வன்முறைகள், அரங்கேறுகிறது.எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சி கிரிமினல்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ,ஆய்வு செய்து, அந்தக் கட்சிகளை பதிவு நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக ஒரு தனி துறையே ஆரம்பிக்க வேண்டும்.இது நாட்டுக்கும், தேசத்திற்கும், மிக, மிக அவசியமானது.
மேலும், அரசியல் கட்சி என்ற போர்வையில், இந்த கிரிமினல்கள், கையூட்டு வாங்குகின்ற காவல்துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு, இவர்கள் செய்கின்ற அத்தனை ரௌடியிசத்திற்கும், முட்டுக் கொடுக்கிறார்கள். எப்படி கார்ப்பரேட் ஊடகங்களோ, அதே நிலை தான் காவல்துறையில் இருக்கக்கூடிய கருப்பு காவலர்கள், இந்த வேலையை செய்கிறார்கள்.மேலும்,

மக்களின் பிரச்சினைகளுக்கு இவர்கள் போராடாமல், இவர்களே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காவல்துறையின் மறைமுக சப்போர்ட் .
தவிர,இப்படிப்பட்ட குண்டர்களை வைத்து , தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள், தொண்டன் என்று அரசியல்வாதி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இவர்களுடைய தகுதி என்ன ?என்று கூட தெரியாமல், இருக்கும் இவர்கள், கட்சிக்கு அர்த்தம் தெரியாமலும், அரசியலுக்கு அர்த்தம் தெரியாமலும், இவர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், கிராமங்களில், நகரங்களில், இந்த வெத்து வெட்டு குண்டர்கள் , படித்த வன்னியர்களையும், ,தகுதியானவர்களையும்,ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இந்த குண்டர்களுக்கு பெயர் எல்லா அரசியல் கட்சிகளிலும் தொண்டர்களாம் ,தொண்டனுக்கு அர்த்தம் தெரியாத பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இவர்களும் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டர்களுக்கு என்ன அரசியல் தெரியும் என்றால்?
ஊரில் பொது சொத்துக்களை எப்படி கொள்ளையடித்து பணக்காரன் ஆவது? இதைத்தான் ராமதாஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார? என்ற கேள்வி வன்னிய சமூகத்தின் கேள்வி? இதுவரை எதுவுமே செய்யாத ஒரு ராமதாஸ் உங்களுக்கு எதற்கு கட்சி? இன்னும் வன்னியர்கள் ஏமாறுவார்கள் என்ற நினைப்பில் கட்சியா? ஏமாந்தது அந்தக் காலம். இனி ஏமாற மாட்டார்கள்.

மேலும்,உங்களை எல்லாம் கார்ப்பரேட் பத்திரிகைகள், உங்களை வைத்து வியாபாரம் செய்கிறது. இதை வாங்கி படிப்பவர்கள் உண்மைகளை இப்போதாவது சிந்திப்பார்களா? மேலும், மத்திய மாநில அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகள் இப்போது சிந்திப்பார்களா? உங்களுடைய சர்குலேஷன் போலி சட்டம் எதற்கு? கார்ப்பரேட் பத்திரிகைகள் மக்களை ஏமாற்றுவதற்காக? இப்போதாவது அந்த சட்டத்தின் உண்மை நிலை உங்களுக்கு புரிகிறதா?
மேலும், இதிலிருந்து ஒவ்வொரு பத்திரிக்கையின் தரம் ,தகுதி ,உங்களுக்கு என்னவென்று புரிகிறதா? பத்திரிகை என்றால், அரசியல் கட்சிகளோடு சேர்ந்து மக்களை ஏமாற்றுவதற்கு பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் தேவையில்லை அது எத்தனை கோடியில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது ஒரு குப்பை ,அது எத்தனை லட்சம் பிரதிகள் அடித்தாலும் அது ஒரு குப்பை.

இப்படிப்பட்ட போலியான அரசியல் பற்றியும், போலியான பத்திரிகைகள் பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மைகளை தெரிந்து ,மக்கள் அரசியல் ஏமாற்றத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், ,ஒவ்வொருவரும், அரசியலைப் பற்றி அடிப்படை அறிவு, அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும்,அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் என்பது வியாபாரம் செய்வதற்கு அல்ல. மக்களை பணம் கொடுத்து ,இலவச பொருட்கள் கொடுத்து ,அவர்களை விலைக்கு வாங்கும் வேலை அல்ல. அரசியல் என்பது உழைக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆனது . ஆனால், அதை ஊரை ஏமாற்றுபவர்களுக்கு சொந்தமானதாக அரசியல் கட்சியினர் ஆக்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.