
மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனும் ,முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன்?
நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, எவ்வளவு மண் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நாங்கள் அதற்கான தொகையை மதிப்பீடு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவோம் என்று கனிம வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் ,இதற்கான காலதாமதம் ஏன்? தவிர,பிரச்சனை நீதிமன்றத்திற்கு ஒரு முறையாவது கொண்டு சென்றால் தான், மீண்டும் இது போன்ற கனிம வள கொள்ளை நம் கிராமத்தில் நடக்காது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் இதற்கு முறையான ஆய்வு மேற்கொண்டு ,நீர்வளத் துறை செயற்பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா?
ட்