
தமிழ்நாட்டில் யாருக்கும் மெஜாரிட்டி என்பது வருவது கடினம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மார்ச் மாதத்தின் முதல் பக்கத்திலே செய்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல் தான் மத்திய அரசின் உளவுத்துறையின் ஐபி ரிப்போர்ட் அதையே தான் சொல்கிறது. இதில் கூட்டணி கட்சிகள் அதிகம் ஜெயித்தால் அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தற்போதைய மத்திய உளவுத் துறையின் ரிப்போர்ட் தற்போது வெளி வந்துள்ளது.

இது கட்சிக்குள் இருக்கின்ற அண்டர் பாலிடிக்ஸ். நமக்கு இது தேவையில்லை. ஆனால், மக்களுடைய எதிர்பார்ப்பும், அரசியலும் ,எப்படி இருக்கிறது? எதிர்காலத்தின் அரசியல் நிலைமை என்ன? அதுதான் முக்கிய கேள்வி?
மேலும், மக்கள் அதிகாரத்தில் முன்னமே வெளியிட்ட செய்தியில் 18 வயதிலிருந்து 50 வயதிற்குள் இருக்கின்ற இளைஞர்கள் தவெகவிற்கு 75% மேல் வாக்களிப்பார்கள். இந்த வாக்கு வங்கி தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை கோடி பேர் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

ஐந்தரை கோடி தமிழ்நாட்டின் வாக்காளர்களில் ,மீதி உள்ள 3.5 கோடி வாக்காளர்கள் மற்ற அனைத்து கட்சிகளுக்கும் வாக்களிக்கும் போது ,வாக்குகள் பிரிகிறது.
மேலும்,அப்படி பிரியும் போது, இந்த ஒரு கட்சிக்கு மட்டும், இவ்வளவு வாக்குகள் விழும் போது, தமிழக வெற்றி கழகம் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளை கைப்பற்றுவதற்கும், வாய்ப்பு உள்ளது.
ஆனால், இதை அதிமுகவும், திமுகவும் அதிகம் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, விஜய்க்கு எந்த அளவுக்கு பிரச்சனைகள் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு திமுக மறைமுகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனைகளை பற்றி இளைஞர்களே பேசுகிறார்கள். அவர்களுடைய ஆர்வம் தான் விஜயின் அரசியல் ,மேலும், அது வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கு , அவர்களுடைய எழுச்சி தான் முக்கிய காரணம்.
மேலும்,இந்த மாற்றம் இயற்கையின் மாற்றமாகத் தான் தெரிகிறது. கடவுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்து விட்டால் ,அதை யாராலும் தடுக்க முடியாது. அதனால், அதிமுக, திமுக இனி தமிழ்நாட்டில் பெரும்பான்மை என்ற பேச்சுக்கு இடமில்லை.

மேலும்,இவர்கள் என்னதான் பணமும் ,பொருளும் அள்ளி வாரி கொடுத்தாலும், மக்கள் மனதிலே ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவென்றால்! என்ன இவனே வரணும்னு நினைக்கிறான்?
அவனும் தான் வந்துட்டு போறான். அவன் வந்து என்ன செய்கிறான்? என்று பார்க்கலாம் ?இப்படி எல்லாம் மக்களின் பேச்சு மாற்றத்தின் அரசியல் எப்படி இருக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.