ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது.

மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் கட்டுப்பட்டு செயல்படும். அவர்களுடைய அனுக் கிரகத்துக்கு எல்லா கிரகங்களும் கட்டுப்படும் .

அதுமட்டுமல்ல ஜோதிடத்தில் விதியும் ,விதி விலக்கும் ஒவ்வொரு முறையிலும் வேறுபடுகிறது. நீங்கள் எந்த விதி முறையில் ஜோதிடத்தை ஆய்வு செய்கிறீர்கள்? என்பது தெரியாது.

இருப்பினும், நீங்கள் கடவுள் போன்று பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் ,நடைமுறையில் இது நடக்குமா? அதற்கான சூழ்நிலைகளை எதுவுமே இல்லை. மேலும்,ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்றால், அதற்கான சூழ்நிலையை காலங்கள் உருவாக்கும் அதுதான் விதி. அதுதான் கிரகங்களின் செயல்பாடுகள்.

மேலும்,தமிழ்நாட்டில் விஜய்யை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் விஜயை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஒவ்வொரு மாநிலத்திற்கும், பல்வேறு வேறுபாடுகள் உள்ள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒன்று பிடிக்கும், ஒன்று பிடிக்காது. மேலும் விஜய் இன்னும் தேசிய அரசியலுக்கே போகவில்லை. அவர் மாநில அரசியலுக்குள்ளே தான் இருந்து கொண்டிருக்கிறார். இங்கு வேண்டுமானால் சொல்கிறீர்களா, அதை ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால், இந்திய அளவில் நீங்கள் பேசும்போது ,எங்களைப் போன்ற ஓரளவுக்கு ஜோதிட அனுபவம் உள்ள எங்களால், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜோதிடம் என்பது நடைமுறையில் ஒத்து வர வேண்டும். நடக்க வேண்டும் ‌‌.அதுதான் ஜோதிடம் !இல்லையென்றால், அது பொய். நீங்கள் சொல்லுகின்ற கருத்து ,அதற்கு முரணாக இருக்கிறது.

மேலும்,விஜய் ஜாதகத்தை போல் எத்தனையோ பேர் அன்று பிறந்திருப்பார்கள். அவர்களால், முதலமைச்சராக ஆக முடியவில்லை. சினிமாவில் ஹீரோவாக ஆக முடியவில்லை. அப்படி இருக்கும்போது, அந்த அதிர்ஷ்டம் ஒருவருக்கு மட்டுமே இறைவன் கொடுத்திருக்கிறார்.

அதை அரசியலாக ஆக்க கூடாது. ஜோதிடம் வேறு அரசியல் வேறு. இது ஆன்மீகம், அது அரசியல். இங்கே நீங்கள் சொல்வது எப்படி இதை நிரூபிக்க முடியும் ?ஒன்று நீங்கள் சொல்லி இவர் முதல்வர் ஆகிவிட்டார் ஓகே. அதற்கான சூழ்நிலை இவருக்கு அமைந்தது.

ஒருவருக்கு சூழ்நிலை அமைந்தால் மட்டுமே, ஒருவர் வெற்றி பெற முடியும். சூழ்நிலை அமையாவிட்டால் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியாது. இவரே நினைத்து பார்க்கவில்லை. தான் 108 சீட்டு வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை.

அது கடவுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தீர்மானித்தது. ஆனால், ஜோதிடர்கள் தீர்மானிக்க முடியாது அல்லவா? ஜோதிடர்கள் கணக்கை போட்டு சொல்லலாம் ஆனால், அது நடைமுறையில் சாத்தியமா ?என்பதும் பார்க்க வேண்டும்.

மேலும்,எத்தனையோ ஜோதிடர்கள், எத்தனையோ நாடி ஜோதிடர்கள், சாமியார்கள், சொன்னதெல்லாம் போயிட்டு போய் விட்டது. இந்த நிலையில் ராகவன் பண்டிட் விஜய் ஜாதகத்தைப் பார்த்து, இவர் பிரதமராக வந்து விடுவார் என்று சொன்னால், நடைமுறையில் இது எல்லாம் நடக்குமா?

மேலும்,தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் மட்டும்தான் நடிகர்களை அரசியலில் இதுவரை தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற எந்த மாநிலத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? மேலும்,எந்த ஹீரோவையும், இதுவரை அவர்கள் முதலமைச்சராக ஆக்கியதாக வரலாறு தெரியவில்லை.

அதனால், ராகவன் பண்டிட் சமூக வலைத்தளத்தில் பேசுவது, ஜோதிடத்தின் மீது இருக்கின்ற நம்பிக்கையை சீர்குலைப்பதாக தெரிகிறது. எனவே,தமிழ்நாட்டில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இங்கே சிறப்பான ஆட்சி கொடுத்து, மக்களுக்கு நல்லது செய்தாலே போதாதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *