
தமிழக கவர்னர் ஆர். வி. அர்லேகர், 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,பொதுமக்களை பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதில் சுய விபர கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலும், வீட்டு பதிவு பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1 முதல் 30 வரையிலும், நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் அதற்கான ஆவணங்கள், தரவுகள் கொடுத்து ,மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு ,ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
