ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் ,இவர் வாடகை வண்டியை தான் ஒட்டி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,பாடி அருகில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில், வாடிக்கையாளருக்காக (கஸ்டமருக்காக) வண்டியை போத்தீஸ் துணி கடை பகுதியில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் டிராபிக் ஜாம் ஆகிறது என்று அப்போது பணியில் இருந்த பெண் காவலர், இவருக்கு அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்து உள்ளார்.

மேலும்,ஏனென்று பேசியதற்கு ஒரு வழக்கு, யூனிபார்ம் போடாததற்கு ஒரு வழக்கு, டிராபிக் ஜாம் ஆனதற்கு ஒரு வழக்கு, இவரா டிராபிக் ஜாம் ஆக்கினர்? இப்படி இந்த வழக்கு பற்றி இவர்களுக்கு தெரிவிக்காமலே, காவல்துறையினர் இணையதளத்தில் வழக்கு பதிவு செய்து விடுகின்றனர்.

மேலும், இந்த வழக்கு பதிவு பற்றி சமீபத்தில், இவருடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு பில் வந்த பிறகு தான், இவருக்கு தெரிகிறது.அந்த அளவுக்கு காவல்துறையினர் சட்டத்தை மீறுகின்ற வேலைகளில் இறங்கி விட்டார்கள்.

மேலும்,இந்த ஆட்டோ ஓட்டுனர்கள், தினமும் அவரது வண்டிக்கு 500 ரூபாய் வாடகை கொடுத்து, அதற்கு மேல் கேஸ் அல்லது பெட்ரோலோ அவர் வண்டிக்கு போட்டு, ஓட்டினால் தான் ,அவர் பணம் சம்பாதிக்க முடியும். அதுவும் ஒரு நாளைக்கு 500 அல்லது ஆயிரமோ வரும் .ஒரு நாளைக்கு வராது.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒரு மாதிரியான வருமானம் தான் எங்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட நிரந்தரமில்லாத வருமானம் உள்ளவர்களை, ஒரே நாளில் அங்கிருந்த காவலர் இவருக்கு 3000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அது தவிர ,இதற்கு அபராதம் 355 என்று தெரிவிக்கிறார்.

இப்படி ஏழை மக்களிடம் பணத்தை தேவையின்றி, பறிக்கும் வேளையில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் தெரிவிக்கின்றனர். உண்மையிலே தவறு நடக்கும் பட்சத்தில், அதற்குரிய அபராதமோ, தண்டனையோ கொடுங்கள் தவறு இல்லை .

ஆனால், பிழைப்புக்காக அவர்கள் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றால் ,உடனே போக்குவரத்து ஜாம் என்று அவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஏழை, நடுத்தர ,ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் மனக்குமுறலை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனால், இப்படிப்பட்ட அபராதங்களை பணம் கட்ட முடியாமல் வேதனையில் தவித்து வருகின்றனர். ஆனால், இதுபோன்ற தவறுகளை பொறுப்பு மிக்க காவல் துறையின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப் படுட்டவர்களுக்கு, அபராத தொகை கட்டுவதில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *