
இளைஞர்களின் வாக்கு 90% க்கு மேல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை உணர முடிகிறது.
இதற்கு காரணம், இரண்டு கட்சிகளின் மீது உள்ள எதிர்ப்பு வாக்குகள், மற்றொருபுறம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்கிறார்கள்.
அப்படி என்றால், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய டப் கொடுக்கப் போவது தமிழக வெற்றி கழகம் தான் என்பது உறுதியாக தெரிய வருகிறது.மேலும்,

இங்கே எம்ஜிஆரை போன்று விஜய் மட்டுமே ஒன் மேன் ஆர்மி, அவரைப் பார்த்து தான் வாக்குகளே தவிர, இந்த வாக்குகள் வேட்பாளர்களை பார்த்து அளிக்கும் வாக்கல்ல. ஆனால், இரண்டு கட்சியிலும் வேட்பாளர்களை பார்த்து அளிக்கும் வாக்குகள் உள்ளது.
மேலும்,இவர்கள் இருவருமே ஊழல் புகாரில் சிக்கியவர்கள், ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் ,தொகுதிக்கு எதுவும் செய்யாதவர்கள், மக்களை மதிக்காதவர்கள், இந்த சூழ்நிலையில் மக்களின் வாக்கு தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது.

இது தவிர, கிராமங்களிலும், நகரங்களிலும் இருக்கக்கூடிய திமுக கட்சியினருடைய அராஜகங்கள், அடாவடித்தனங்கள், ஆறு குளம் குட்டை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பது, மண்ணை விற்று கொள்ளையடிப்பது, போன்ற சமூக விரோத கும்பலை அரசியல் கட்சியினர் என்று மக்கள் விரும்பவில்லை. இது அதிமுகவிலும், திமுகவிலும் இருக்கிறது. இதுவும் இரண்டு கட்சிகளுக்கு மைனஸ் தான்.
மேலும் இரண்டு கட்சியிலும் பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் இவர்கள் வெற்றி! அது ஒரு வெற்றியா? ,

விஜய் பணம் கொடுக்காமல், வாக்களித்த மக்கள்!எந்த நம்பிக்கையில் வாக்களித்தார்கள்? வாக்களிக்கிறார்கள்? எனவே,தேர்தல் களம் எப்படி மாறி இருக்கும்? தேர்தல் சர்வேக்கள் எப்படி மாறி இருக்கும்? என்ற கணிக்க முடியாத ஒரு தேர்தல்!
ஆனால் ,ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. எனவே, இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி ஆகத்தான், இந்த தேர்தல் களம் இருக்கப் போகிறது என்பது உறுதி.