
ஈரான் நாடு தீவிரவாதிகளின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது எல்லாம் வெளியில் வராது. உள்ளவே இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு பணம், பொருள் என்னென்ன ?கொடுக்க வேண்டுமோ, அத்தனையும் கொடுத்துக் கொண்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தவர் அயதுல்லா காமேனி .

இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரவாத செயல்களை, அதாவது ஹமாஸ் என்ற தீவிரவாத கூட்டம் அங்கு செயல்பட்டு வந்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்தார்கள். மேலும், இவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கும் , நல்லவர்கள் அல்ல. இவர் இறந்ததை அந்த நாட்டு மக்களே கொண்டாடுகிறார்கள். இவர்களுடைய வேலையே, அழிப்பது தான் வேலை. ஆக்கபூர்வமான வேலை எதுவும் இருக்காது.

இந்த நாசக்கார கும்பலுக்கு இங்கு உள்ள காங்கிரஸ் திமுக திருமாவளவன் போன்ற என். டி. ஏ கூட்டணி கட்சிகள், வக்காலத்து வாங்கி ,குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் என்ன? கத்தினாலும், மக்களுக்கு தெரியாது என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில்,திமுக அரசு தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. தவிர,
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்.28 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை திமுக அரசு அலட்சியப்படுத்துகிறது. அதனால், மத்தியப் படைகளை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கே ஈரான் காமேனிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினால், காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறார்கள். ஆனால், உள் நாட்டிலே தங்கள் உரிமைப் பிரச்சினைக்காக போராடுகின்ற ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், எவ்வளவு காவல்துறையால், பொய் வழக்குகளும், அவமானங்களும், அடக்குமுறைகளும், அனுபவித்திருக்கிறார்கள்? இதுதான் திமுக ஆட்சியின் மக்களாட்சியா? மேலும்,
ஈரான் அணு ஆயுத சோதனையை செய்ய முயற்சிகள் எடுத்து வந்தது, உண்மை தான். அதை ஆரம்பத்திலே, இப்போது தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முஸ்லிம் தீவிரவாத கூட்டங்கள், இதற்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறது.

வருகின்ற 2026 தேர்தலில், திமுக மற்றும் திமுக கூட்டணி சேர்ந்த கட்சிகளை டெபாசிட் கூட, மக்கள் வாங்க விடாமல் செய்ய வேண்டும். அதுதான் இந்துக்களின் வெற்றியாக இருக்க வேண்டும்.
மேலும்,அரசியல் கட்சி என்பது கிராமங்களில் சொல்வார்கள் வாங்கித் தின்ற பசங்க ,அந்த நிலைமைக்கு ,இந்த கட்சிக்கார கூட்டம் வந்து விட்டது. அதாவது இவர்கள் சுயநலத்திற்காக, எந்த நிலைக்கும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதே போல் தான், பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், இவர்களுக்கு சொந்தமாக இருப்பதாலும், இவர்களிடம் கைநீட்டி பணம் வாங்குகின்ற பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ,இவர்களைப் போல் ,பேசிக்கொண்டு, செய்தியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதை உண்மையா? பொய்யா? என்பது உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன் .நீங்கள் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இது ஒவ்வொருவருடைய மனசாட்சிக்கு விடப்பட்ட கேள்வியும், உண்மையும், சிந்திக்க வேண்டியது.
மேலும், கிராமங்களில் , குடிகாரர்கள் ரண்டு கோட்டர் கையில கொடுத்தால் எப்படியும் பேசுவான், ஆயிரம், 500 கொடுத்தால் , எப்படியும் பேசுவான். அதனால், ஈரான் நாட்டுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய இந்தக் கூட்டம், நம் நாட்டு மக்களும், ராணுவ வீரர்களும், காவல்துறையினரும், தீவிரவாதிகளால், இறந்தபோது, இவர்கள் எங்கே போனார்கள்? மேலும்,

ஈரானுக்கு இந்த வலி தேவை தான். மக்கள் அதிகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஊருக்குள்ளே ஒரு கெட்டவன் இருந்தால் ,அந்த ஊரே அழியும்.
அதே நிலைமைதான் ஈரானில் உள்ள கெட்ட சக்தி ,ஈரானை அழித்துக் கொண்டிருக்கிறது. இங்கே அமெரிக்காவும் ,இஸ்ரேலும் சேர்ந்து அடிக்கிறது என்றால், அதற்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். நாம் அதை செய்யவில்லை என்றாலும், யாரோ ஒரு நல்லவன் செய்து கொண்டிருக்கிறான்.

அதற்கு சந்தோஷப்பட வேண்டும். எனவே, கேட்டது அகற்றினால், தான் நல்லது வளர்ச்சி பெரும். அது மட்டுமல்ல, கெட்ட சக்திக்கு துணை போன அந்த நாட்டு மக்கள் என்று அழிந்து கொண்டு இருக்கிறார்கள். அதே நிலைமைதான் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால், வாக்களிக்கும் மக்களுக்கு ஐந்தாண்டுகளில் என்ன? நல்லது நடந்தது சிந்தித்துப் பாருங்கள்.