
தமிழக வெற்றி கழகத்தின் பல் மருத்துவரான அமைச்சர் டி கே பிரபு தன் மீது youtube மாரிதாஸ், அவதூறாக கூறிய கருத்துக்கள் ஆதாரமற்றவை. உள்நோக்கம் கொண்டவை என்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மேலும் நான் தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வருவதால், என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து என்னுடைய நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் அவருடைய குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் வந்துள்ளது. இதை அவர் பட்டியலிட உத்தரவு விட்டுள்ளார்.
இது தவிர, இந்த வழக்கில், எதிர் மனுதாரராக Google LLC , X Corporation, YouTube of India, போன்றவற்றையும் , சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்று அவதூறு செய்திகளை பரப்புவது , தவிர ,பத்திரிகை, ஊடகங்கள் போல் பிம்பத்தை காட்டுவது, சமூகப் பிரச்சனைகள் வேறு ,தனி மனித பிரச்சனைகள் வேறு ,இது தெரியாமல் அதிக வீவ்ஸ் கிடைக்க வேண்டும் என்று, இப்படி பல youtuber கள் தெரியாமல் பேசிவிட்டு, இன்று பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தேவை தானா?
