
தமிழில் வழக்காடு மொழியை வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த திமுக ஆட்சியிலும் போராடியது.
ஆனால், அதற்கான தனித் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. தமிழக முதல்வர் விஜய் அதற்காக சட்டமன்றத்திலே தனி தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் மொழி யாருக்கும் எதிரான மொழி அல்ல, இதனுடைய உரிமையை நீதிமன்றத்திலே ,வழக்காடும்போது வழக்கறிஞர்கள் பேசுவது நீதிபதிகளுக்கு தான் ஆங்கிலம் தெரியும்.

வழக்கறிஞர்களுக்கு தெரியும் .ஆனால் ,தெரியாத மக்கள் வழக்காடும்போது தங்களின் வழக்கு குறித்து என்ன பேசினார்கள்? என்பது கூட தெரியாது. ஆனால், அது இப்போது இந்த வழக்காடு மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று தனித் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
இது குறித்து குடியரசு தலைவருக்கு இந்த தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்படுகிறது. இது உண்மையிலேயே எத்தனையோ வழக்கறிஞர்கள், ஆங்கில மொழி அரைகுறையாக இருப்பவர்கள் எல்லாம், இது உண்மையிலேயே அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும்,சட்டங்கள் படித்து இருப்பார்கள். ஆனால், அதை எப்படி நீதிமன்றத்திலே வழக்காடும்போது ஆங்கிலத்தில் புலமை இருந்தால் மட்டுமே ,அது பற்றி எடுத்துரைத்து வாதிட்டு வெற்றி பெற முடியும் .
அந்த நிலையை இப்போது தமிழக முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தினால், குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பாரா? அங்கே தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
