திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன ? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்களிடம் கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து, பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பது போல, மக்களை நம்ப வைத்து முட்டாளாக்கும் வேலை முதல் தோல்வி .

மேலும், கார்ப்பரேட் மீடியாவா அல்லது சோசியல் மீடியாவா என்ற நிலைமைக்கு இன்று தொலைக்காட்சிகளை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது ஒருவர் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு செல்கிறார் .அல்லது தவெக விற்கு செல்கிறார் என்றால் ,இது ஒரு பத்திரிகை செய்தியா?

அதற்கு ஒரு மியூசிக் போட்டு, அவரை வரவேற்பது ,அங்கே போய் நுழைவது, இது எல்லாம் போலியான பத்திரிக்கை பிம்பம். நீ எந்த கட்சிக்காவது போ! அது உன் விருப்பம். அது என்ன ஒரு செய்தி? மக்களுக்கான பாதிப்பா? இல்லை நன்மையா? எதுவும் இல்லாத ஒரு விஷயத்திற்கு பில்டப்.

மேலும்,இந்த பில்டப் தான், திமுக ஆட்சியின் ஊழல், அராஜகங்கள், பற்றி பேசாமல், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லி, பத்திரிக்கைக்கு அர்த்தமில்லாமல் மக்களை ஏமாற்றுவது இவர்களுடைய பத்திரிகை கடமை! எத்தனை நாளைக்கு! மக்கள் ஏமாறுவார்கள்? மேலும்,

ஒவ்வொரு நாளும்,அரசியல் கட்சியினரின் அராஜகங்கள், ரவுடித்தனங்கள், கட்டப்பஞ்சாயத்துகள், கற்பழிப்புக்கள், சுகாதாரத் துறையில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி இன்மை, காவல்துறை யாரை வேண்டுமானாலும், சட்டத்தை மதிக்காமல் சமூக விரோத ஆட்சிக்கு துணை போனது, இவையெல்லாம் திமுக ஆட்சி ,அதிகாரம் இருக்கிறது என்று மக்களிடம் ஆட்டம் போட்டது இது இரண்டாவது.

மேலும் ,எந்தத் துறையை தொட்டாலும் ஊழல் !இல்லாத ஒரு துறை ,திமுக ஆட்சியில் இல்லை. என்பதை இவர்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மறைத்தாலும், அதை மக்களிடம் சமூக நலன் ஊடகங்கள், கொண்டு சென்றது.

அடுத்தது போதைப்பொருள் கலாச்சாரத்தால், ஏழை ,எளிய நடுத்தர மக்களின் பாதிப்பு, அவர்களுடைய குடும்பத்தில் சண்டை ,வம்பு, வழக்குகள், இதனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்தது, இந்துக்களின் விரோதியாக, இந்து கோயில்களின் நிதியை தவறாக பயன்படுத்தி, அந்தக் கோயில்களில் சாமி கும்பிட வரும் பக்தர்களை காக்க வைப்பது, சொல்லப் போனால் அது ஒரு வியாபார ஸ்தலமாக மாற்றி விட்டார்கள்.

மேலும்,திருவண்ணாமலை போன்ற சிவ ஸ்தலத்தை எந்த அளவுக்கு மக்களின் தெய்வ நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு அங்கே வந்து, இவர்களுடைய ஆட்சி, அதிகார திமிரை எல்லா இடத்திலும், காட்ட ஆரம்பித்தார்கள்.

மேலும்,மக்கள் எல்லாம் இவர்களால் தான் பிழைப்பு நடத்துகிறார்கள் என்று நினைத்து விட்டார்கள். மக்கள் போட்ட ஓட்டை மறந்து, மக்களை மதிக்கத் தெரியாத ஆட்சி நடத்தினால், திமுகவை ஓட விடாமல் என்ன செய்வார்கள்?

இதற்கு அடுத்தது, வரிச் சுமை! எல்லாவற்றிலும் ஏற்றி, ஏழை, நடுத்தர மக்கள் பயப்படும் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் உயர்வு, ஏழை நடுத்தர மக்கள் வாங்கி சாப்பிட முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

இது தவிர, இந்த ஊடகங்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி யாரோ ஒருவன் யூட்யூபில் பேசுகிறான், இவர்கள் வந்து தான் ஐடி கம்பெனிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்கள்.

இவர்களுடைய பேச்சு! அரசியல் தெரிந்தவர்களுக்கு வெறுப்பேற்றும் அளவிற்கு இருந்தது. மேலும் பொறியியல் பட்டதாரிகள் 10 ஆயிரம், 15 ஆயிரம் சம்பளம் வாங்குகின்ற கொடுமை திமுக ஆட்சியை சிறப்பான ஆட்சி! என்று தொடர்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகள் பேசினால் ,,எழுதினால், மக்கள் இதை பார்த்து கொதிப்பே அடைந்து விட்டார்கள்.

மேலும்,இது ஒரு பக்கம் என்றால் இவர்களுடைய ஐடி விங் அதைவிட ஒரு படி மேலே போய் ,எவ்வளவு பொய்களை சொல்ல முடியுமோ, அவ்வளவும் சொன்னார்கள்.

மேலும்,தேர்தல் நெருங்க ஆறு மாதத்திற்கு முன்பே திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார்கள் என்று எத்தனையோ அதிகாரிகள், நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொன்னேன்.

மேலும்,மக்களின் அரசியல் மாற்றம் அவர்கள் மனதில் தெரிந்தது. திமுக இவ்வளவு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்யவில்லை என்றால் !இந்த முறையில் டெபாசிட் இழந்திருக்கும்.தவிர, சமூக நலன் ஊடகங்களுக்கு எந்த ஒரு சிறிய சலுகை, விளம்பரங்களும் கொடுக்கவில்லை.

மேலும்,நல்ல விஷயங்கள் செய்வதற்கு பதிலாக, மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி விட்டு, இன்று ஏதோ மக்கள் இவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டவர்கள் போல் கதறுகிறார்கள்.

மேலும்,கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன், அவன் செய்யக்கூடிய அலப்பறைகள் எங்களைப் போன்ற அரசியல் தெரிந்தவர்கள் எல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

மேலும்,மக்கள் திமுகவை வட்சி செய்திருக்கிறார்கள். அதாவது ஐந்தாண்டு காலம் இவர்கள் எப்படி மக்களை கொடுங்கப்படுத்தினார்களோ, அதற்கெல்லாம் ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்து, வீட்டுக்குப் போய் விடுங்கள் என்று அனுப்பி வைத்து விட்டார்கள். சொல்லப்போனால் ,மக்களுக்காக ஆட்சி இல்லாமல் ,இவர்களுக்கான ஆட்சியாக மாற்றி அரசியல் என்பது கொள்ளையடிக்கும் வேலையாக மாற்றி விட்டார்கள்.

இதில் எவ்வளவு ஜோதிடர்கள் அவர்களுடைய ஜோதிட பலனை முதல்வர் ஸ்டாலின் தான் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று சொன்னவர்கள்.

அது ஒரு புறம். இன்னொரு புறம் இந்திய டுடே ,தேர்தல் ரிசல்ட் வருவதற்கு இரண்டு நாட்கள் முன் கூட, திமுக தான் வரும். இது தவிர,ரங்கராஜ் பாண்டே விஜய் 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால், நான் அரசியலையே பேசமாட்டேன்.

இது எந்த அளவுக்கு? இந்த போலி பத்திரிக்கை பிம்பம் மக்களிடையே வியாபாரம் ஆக்கப்பட்டு இருக்கிறது என்பது நக்கீரன் கோபால் முதல் திமுக ஐடி வீங்கு வரை மக்களை முட்டாளாக்கும் வேலை எடுபடவில்லை. திமுகவின் எதிர்காலம் இனி கேள்விக்குறி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *