நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்காக வா? இல்லை ரசிகர்களுக்காகவா? யாருக்காக இவர்களுடைய அரசியல்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் நடிகர்கள் எம் ஜி ஆர் ஐ பின் தொடர்ந்து பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில், பாக்யராஜ், டி ராஜேந்தர், வந்து காணாமல் போய்விட்டார்கள். இருப்பினும்,விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்று,சில காலம் எதிர் கட்சி தலைவர் வரை வந்து விட்டுப் போய்விட்டார்.

மேலும்,ஜெயலலிதா ,எம்ஜிஆரால் முதலமைச்சரானவர். அதற்குப் பிறகு விஜய் ,தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதுதான் இப்போது மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முக்கிய அரசியல் . மேலும்,

இதை பார்த்து தற்போது நடிகர் தனுஷ்! அரசியல் கட்சியை பதிவு செய்துவிட்டார் என்று டெல்லியிலிருந்து வரும் தகவல் . (தமிழர் எழுச்சி கழகம்)இருப்பினும், இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்ற தகவல் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் செய்திகள்.

மேலும்,இவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா , அரசியல் களத்தில் வருவார் என்று பேசப்பட்டு வருகிறது. இப்படி நடிகர்கள் அரசியலுக்கு வந்து அரசியலில் மக்களுக்காக சேவை செய்ய வருவார்களா? இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு!

ஆனால், ஏற்கனவே இருக்கும் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தான் அரசியல் கட்சிக்கு வருகிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு மக்களுடைய எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கிறது.

இந்த சூழலில், தமிழகத்தின் அரசியல் களம் நடிகர்களின் அரசியல் களமா? அல்லது சினிமா ரசிகர்களின் அரசியல் களமா?

இதில், அண்ணாமலை ஐ.பி.எஸ் என்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தால்! போட்டி ,அரசியல் களம் மிகக் கடுமையாக தான் இருக்கும். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,அப்போதுதான் களத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகள் நிற்கப் போகிறது? மக்களின் பிரச்சினைகளை பேசிவிட்டு போவார்களா? அல்லது செய்வார்களா?

மேலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள்! இவர்கள் தங்களுக்கு போட்டியாக வருகிறார்கள் என்று இப்போதே சமூக வலைதளங்களில் அவர்களுடைய பூர்வீகத்தை எல்லாம் கிளரிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால், மக்களுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் ,ஆனால், அதற்கான தகுதி ,திறமை ,உழைப்பு ,தியாகம் இது யாரிடத்தில் இருந்தாலும் ,அதை வரவேற்க வேண்டியது தான் என்றனர்.

மேலும்,அது இல்லாமல் அரசியல் கட்சி கொடியை காட்டிக் கொண்டு ,வண்டியில் கட்டிக்கொண்டு, மேடையில் பேசிக்கொண்டு, ரசிகர்கள் கத்திக்கொண்டு, இதனால் ,மக்களுக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

மேலும்,ரசிகர்களுக்கு ஒரு ஆசை! நம்முடைய தலைவன் அரசியலுக்கு வந்து விட்டால் ,நமக்கு எல்லாம் பக்க பலமாகிவிடும் என்று நினைக்கிறார்கள் .அது எதார்த்தமும் அதுதான், நினைப்பது தவறு இல்லை.

ஆனால் ,அரசியலில் உண்மையான நோக்கமே, பொதுநலம்தான் . அந்த பொதுநலத்தை இதுவரை சுயநலமாக அரசியல் கட்சிகள் ஆக்கி, வைத்திருந்தார்கள் .அதை உடைப்பதற்கு வருவது நல்லது தான்.

மேலும்,பொதுநலத்திற்கும், சுயநலத்திற்கும் ,வித்தியாசம் தெரியாத அரசியல் கட்சிகள், மத்தியில் தற்போது நடிகர்கள் ,ஒன்றன்பின் ஒன்றாக கட்சி ஆரம்பிப்பது ,மக்களுக்கு அது ஒரு நல்ல சேவை அமைப்பாக இருக்குமா? என்பதுதான் மக்களின் கருத்து.

மேலும் ,தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், இனி என்ன பாடு பட போகிறார்களோ, ஜாதி அரசியல், மத அரசியல், இந்த கட்சிகள் எல்லாம் நடிகர்கள் அரசியலோடு ,எப்படி போட்டி போட போகிறதோ அல்லது கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறதோ யாருக்கு தெரியும்? கடவுளுக்கு தான் தெரியும் .

மேலும், தமிழ்நாட்டின் அரசியல் களம் ரவுடிகளாக இருந்த களம்! இனி சமூக சேவை செய்யக்கூடிய தகுதியான சேவகர்கள் களமாக மாறுமா? கருணாநிதி அரசியலுக்கு எப்போது வந்தாரோ, அப்போது பிடித்த பீடை எப்போது ஒழியும்? என்றுதான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *