
2026 சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், தமிழக முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,
இதற்கு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 18,000 பேர் துணை இராணுவத்தினருடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

தவிர,62 வாக்கு எண்ணும் மையங்களிலும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர ,வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் சீருடை அணிந்தோ அல்லது அணியாமலோ வாக்கு எண்ணும் அறைக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் ,தேர்தல் அதிகாரிகள் அழைத்தால், மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் மேற்பார்வையாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள், ஏஜெண்டுகள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும்,தேர்தல் சம்பந்தமான தகவல்கள் குறித்து, மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் காணொளி மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,வாக்கு எண்ணும் மையங்கள் குறித்து, அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களை கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ,ஒவ்வொரு மாநிலத்திலும் ,தேர்தல் ஆணையம் இனியாவது தேர்தல் நடக்கும்போது அந்தந்த மாநிலத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தப்பட வேண்டும்.
மேலும் ,தாய்மொழி அனைவருக்கும் முக்கியமானது. தாய் மொழி தெரிந்த ஒருவரை இனி வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும்.

அப்போது தான் அந்தந்த மாநிலத்தில் என்னென்ன? பிரச்சனைகள் ?எந்தெந்த அரசியல் கட்சிகளின் ,அவர்களுடைய நடவடிக்கைகள்? அவர்களுக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்கும் .தெரியாத வரை கொண்டு வந்து தேர்தல் ஆணையராக நியமித்து, அவர்கள் பேப்பரில் தான், ஊடகங்களிலில் தான், செய்திகளைப் பார்த்து, நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர,

ஒவ்வொரு அரசியல் கட்சியும், தமிழ்நாட்டில் அதனுடைய உண்மைத்தன்மை பற்றி அர்ச்சனா பட் நாயக் அறிந்திருக்க மாட்டார்கள் . மேலும்,ஒரு சாதாரண திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் மீது கூட இவர்களால் நடவடிக்கை எடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்யவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியவில்லை என்றால்! இவர்கள் எப்படி தேர்தல் ஆணையராக பணியாற்றி இருப்பார்கள்?

மேலும்,பணப்பட்டு வாட இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு தாரளமாக விநியோகித்தார்கள். அதை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்கால் தடுக்க முடியவில்லை.

இப்படி பல பிரச்சனைகள் சரி செய்ய முடியாமல், இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும்,முடிவுகள் எப்படி இருக்கும்? என்று அரசியல் கட்சிகள் பல ஆதங்கத்தில் இருந்து கொண்டு, சாமியார்களையும், ஜோதிடர்களையும், நம்பி இருக்கிறார்கள்.
அவர்களுடைய நம்பிக்கை எப்படி இருக்கும்? என்று இறைவன் கையில்தான் இருக்கிறது. மேலும், 10 பேர் ஸ்டாலின் முதலமைச்சர் என்றால், இந்த தேர்தலில் 15 பேர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்கிறார்கள்.
இன்னும் 10 பேர் ,விஜய் தான் முதலமைச்சர் என்கிறார்கள், ஆகக் கூடிய முதலமைச்சர் வேட்பாளர்களை இவர்களே youtube இல் பேசி தேர்வு செய்து விடுவார்கள் போல தெரிகிறது. நாட்டில் எல்லாமே வியாபாரமயம் என்றால்! மக்களின் வாழ்க்கை சந்தோஷம் கேள்விக்குறியாகி உள்ளது.மேலும்,

கடவுள் யாருக்கு அந்த மணி மகுடத்தை சூட்ட தீர்மானித்து இருக்கிறாரோ, அவர்கள் தான் நாட்டை ஆளப் போகிறார்கள் என்பது உறுதி.