விஜய் ஆட்சி பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? – பிரேமலதா விஜயகாந்த்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் சொல்வதை கேட்டு பார்த்து பேச வேண்டும் . அவரவர் அரசியல் கட்சியினர் சொல்வதைக் கேட்டுப் பார்த்து பேசக் கூடாது. மேலும் தவெக அரசு ஒவ்வொரு தொகுதியிலும் அடிப்படை வேலைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இது தவிர, ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுத்துப் போடுவதற்கும், இது சினிமா இல்லை என்ற குற்றச்சாட்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார்.

மேலும் ,இந்த ஆட்சி பற்றி மக்கள் தான் நல்லாட்சியா? அல்லது கெட்டாட்சியா? என்பது அவர்கள் தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்காமலே பிரேமலதா விஜயகாந்த் தவெக ஆட்சி மீது இந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். மேலும்,

அரசியல் கட்சி சாராத பொதுவான மக்கள் சொல்வது தான் விஜய் ஆட்சிக்கு நற்சான்று. அந்த வகையில் பொதுமக்கள் !திமுக ஆட்சியில் பட்ட கொடுமைக்கு ,இது எவ்வளவு மேல் என்றுதான் பேசுகிறார்கள். அதுவாவது பிரேமலதா விஜயகாந்த் க்கு தெரியுமா?

பட்டா ,சிட்டா வாங்க வேண்டும் என்றால் கூட, பணத்தை கொடுத்து விட்டு ,நாள் கணக்காக, தாலுகா அலுவலகத்திற்கும், விஏஓ அலுவலகத்திற்கும் ,பொது மக்கள் நடக்க வேண்டும் .இப்போது அது இல்லை .ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்கிறது என்கிறார்கள். மேலும்,

அதிகாரிகள் பணம் வாங்குவதற்கு கூட பயப்படுகிறார்கள் .அந்த அளவிற்கு அதிகாரிகளுக்கு பயம் வந்து விட்டது. ஏதோ இஷ்டப்பட்டு கொடுத்தால், வாங்குவார்களே ஒழிய, கண்டிஷன் என்பது இல்லை.

மேலும்,இந்த ஆட்சியில் பொது சொத்துக்கள், அரசியல் கட்சியினர் பெயரில், கொள்ளையடிப்பது நடக்காது. தவிர,திமுக ஆட்சியில் பொதுமக்கள் ஒரு புகார் மனு கொடுத்தாலும், மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மந்திரி சொல்வது தான் எடுப்பார்கள், எம்எல்ஏ சொல்வது தான் எடுப்பார்கள், அரசியல் கட்சியினர் சொல்வது தான் எடுப்பார்கள்.

இங்கே மக்கள் சொல்வதுதான் அதிகாரிகள் எடுக்கிறார்கள் .எந்த அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அந்த அதிகாரத்தை விஜய் வழங்கவில்லை என்பது எங்களை போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரிகிறது.

மேலும்,இதுதான் மக்களாட்சி !மக்களுக்காக நடக்கின்ற ஆட்சி! இந்த ஆட்சியை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள் .எதிர்பார்த்த அளவைவிட ,சிறப்பான முறையில் விஜய் ஆட்சி செல்கிறது. ஆனால், மக்களிடம் நல்ல பெயர் வரக்கூடாது என்பதில் ,திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ,உறுதியாக இருக்கிறது. அதில் பிரேமலதா விஜயகாந்த் அதிகமாகவே இருக்கிறார்.

மேலும்,பிரேமலதா விஜயகாந்த் மக்கள் என்ன தெரிவிக்கிறார்கள்? என்பதை பற்றி நேரடியாக சென்று கேள்வி கேட்கலாம்? அது மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் ,இவை அத்தனைக்கும் தீர்வு அதிகாரிகளால் கொடுக்கப்படுகிறது.

மேலும்,50 ஆண்டு காலமாக சமூகநலன் பத்திரிகைகள் பிரச்சனை திமுக ,அதிமுக ஆட்சியில் செய்யாதது ,தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியில் செய்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக இந்த பத்திரிகைகள் பிரச்சனையை பார்க்கிறேன்.

மேலும்,ஏழை, எளிய நடுத்தர மக்கள் காவல்துறையில் புகார் செய்தால் , அரசியல் கட்சியினர் தலையீடு இன்றி காவல்துறையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.தவிர, இது ஊழலற்ற ஆட்சி !இவை அத்தனையும் சிறப்பான முறையில் விஜய் ஆட்சி செயல்படுவதை மறுக்க முடியாது. மேலும்,

இவருடைய ஆட்சியில் எம்எல்ஏக்கள், மந்திரிகள், யாரும் கொள்ளையடிக்க முடியாது. மக்கள் பணத்தை நிச்சயமாக அவர் சாப்பிட ஒரு காலம் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதை எல்லார் முன்னிலையிலும் எச்சரிக்கையும் செய்துவிட்டார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்து தான் எதிர்க்கட்சிகள் புலம்பி கொண்டிருக்கிறார்கள் .

ஏதாவது ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும், அதை சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங் செய்வது, அதை வைத்து அரசியல் செய்வது, இதையெல்லாம் சின்ன பசங்க செய்கிற வேலை. எங்களுக்கு தெரியும் .உங்களுடைய தகுதி என்ன? என்பது இந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுடைய சோத்து கணக்கு, ஒவ்வொருவரும் மனசாட்சி படி வெளியில் சொல்வார்களா ?

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் இந்த கூட்டத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள் அதனால் தான்,மக்கள் தெரிந்துதான் உங்களை மண்ணைக்கவ்வ வைத்தார்கள்.

இப்பவும் உங்களுடைய அரசியலை நியாயப்படுத்தும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtubeபர்கள், இவர்கள் எல்லாம் மக்களிடம் நல்லவர்கள் வேஷம் போடுவது போல, அவர்கள் பத்திரிக்கை துறையில் போலியான பத்திரிக்கை பிம்பத்தை வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

அதனால் ,மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நிச்சயம் மக்கள் அதிகாரம் மக்களுக்கான பத்திரிகை.எனவே, தமிழக மக்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டார்கள் .போலி பத்திரிக்கை பிம்பத்திற்கும் ஏமாற மாட்டார்கள். மக்கள் பட்டு தெளிந்திருக்கிறார்கள்.

யாரை ஏமாற்றலாம் என்றால்? அந்தந்த அரசியல் கட்சியினர் தான், தற்போது நீங்கள் சொல்வதைக் கேட்டு ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் எந்த பக்கம் போனால் பிழைப்பு நடத்தலாம் என்று ஓடிப் போகலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள். இனி எதிர்க்கட்சிகளின் அரசியல் எடுபடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *