
இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை.
மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்?

இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி பணிந்து பா. சிதம்பரம் வேண்டுமானாலும், செய்வார் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் ,சோனியா காந்தி செய்து கொண்டு இருப்பார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தேசம் தான் முக்கியத்துவம் இங்கு தீவிரவாதத்திற்கு இடமில்லை. ஆனால், இது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால், இவர்கள் சொல்வதற்கெல்லாம் அடிபணிந்து இருப்பார்கள்.

மேலும், அமெரிக்கா ஒரு பக்கம் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக குரல் கொடுக்கும் .இன்னொரு பக்கம் அவர்களை வைத்து அரசியல் செய்யவும் திட்டமிடுவார்கள். குறிப்பாக சொல்லப்போனால், உறவாடிக்கொண்டே எதிரிகளாக இருப்பார்கள். இதுதான் அமெரிக்காவின் அரசியல்.
இந்த அரசியல் தெரியாமல் தான், காங்கிரஸ் கட்சி அவர்களிடம் நீண்ட காலம் நட்புறவிலிருந்து, அதை பிரதமர் நரேந்திர மோடி இடம் பலிக்கவில்லை.

இந்த தீவிரவாத கும்பல் நாட்டில் எதற்காக. இப்படிப்பட்ட நாச வேலையை செய்ய வேண்டும்? அதற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதற்காக குரல் கொடுக்க வேண்டும்? இவர்களுடைய அரசியல் என்ன? அதன் பின்னணி என்ன? தேச விரோத சக்திகளுக்கு எதற்காக குரல் கொடுக்கிறார்கள்? மற்றொரு பக்கம் அமெரிக்காவின் செனட் உறுப்பினர்களை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? சிறுபான்மை என்றால், அவர்களுடைய தீவிரவாதத்தை ஆதரிக்க வேண்டுமா? அல்லது பெரும்பான்மை என்றால் ,ஆதரிக்கக் கூடாதா? எதற்காக? இந்த தீவிரவாத கும்பலுக்கு இவ்வளவு பெரிய அழுத்தம்?

மக்களுக்கு உண்மையை தெரிவிக்காத பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், சொந்த நலனுக்காக, பத்திரிக்கை நடத்துகிறார்களா? அல்லது தொலைக்காட்சி நடத்துகிறார்களா? அதற்குத் தான் மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களா?

மேலும்,குறிப்பிட்ட சில பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ரகசிய தகவல் வெளியானது. இதைப் பற்றி உளவுத்துறை என்ன ?ஆய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது என்று தெரியவில்லை.

மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது. தவிர
செய்தித் துறை அதிகாரிகள்? மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்கிறது? செய்தியின் தரம் என்ன? சமூக நோக்கமா? அல்லது அது வியாபார நோக்கமா? எதற்கு முதலில் முக்கியத்துவம்? பத்திரிகையின் சமூக நோக்கமென்ன? இணையதளத்தில் அதன் பார்வையாளர்கள் எவ்வளவு பேர்? இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, கணக்கெடுப்பு செய்து ,பத்திரிக்கை தொலைக்காட்சிகளை வரைமுறைப்படுத்தி அதற்கான விளம்பரங்களை மத்திய, மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

மேலும்,தற்போது கூட இது பற்றி மத்திய செய்தி துறை அமைச்சர் வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி சி .பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இது பற்றி மத்திய செய்தித்துறை அமைச்சகம், உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இப்படி நாட்டின் அன்னிய சக்திகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவது, அவர்களிடம் பணம் வாங்குவது, இந்திய இறையாண்மைக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது.

எனவே, அமெரிக்காவின் அழுத்தம் ? நாட்டில் எதிர்க்கட்சிகளின் ரகசிய அரசியல் அழுத்தமா? ஏனென்றால் இங்கு ஆதரவு இல்லாமல், அந்த அழுத்தம் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு வாய்ப்பில்லை.மேலும், பிரதமர் நரேந்திர மோடி ,இதற்கு ஒரு காலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
அதனால்தான், நாட்டில் தீவிரவாதம், பிரிவினை வாதம், ஒடுக்கப்பட்டுள்ளது . நாட்டு மக்களுக்கு (எதிர்க்கட்சிகளின் அரசியல் என்ன? ) தவிர,அரசியல் கட்சிகளின் உண்மை நிலை என்ன? அதாவது,பேசுவது என்ன? செய்வது என்ன?இதை புரிந்து கொண்டால் சரி.