
நாட்டில் கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் ,வித்தியாசம் தெரியாத அளவில் தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல்.
மேலும், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஐநூறு ரூபாய் ,கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது. தற்போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் தர்மபுரி அருகே தவறான விலாசத்தை கொடுத்து, மேற்படி 200 நோட்டுகள் 23 ஆயிரம் கொடுத்து ஒருவர் பைக் வாங்கி சென்றுள்ளதாக தகவல்.
மேலும்,பாமர மக்கள் இதை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமாக முடியாத காரியம். அது வங்கிக்கு செல்லும் போது தான் அந்த பணம் கள்ள நோட்டா? நல்ல நோட்டா ?என்று பெரும்பாலும் வங்கி அதிகாரிகள் தான் கண்டுபிடிக்கிறார்கள்.
இந்த கள்ள நோட்டு கும்பல் தமிழகத்தில் இந்த நாச வேளையில் இறங்கியுள்ளது . இருப்பினும், இதை மத்திய உளவுத்துறை கண்காணிக்கிறது. பொதுமக்கள் உஷார்.