
நாட்டில் இதுவரையில் எந்த பத்திரிகை, தொலைக்காட்சியும் இந்த உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள்.
ஏன்? நாட்டில் லட்சக்கணக்கான சிறிய பத்திரிகைகள் இருந்தாலும், அவர்களும் இந்த உண்மையை மக்களுக்கும் ,செய்தி துறைக்கும், இதுவரை சொல்லவில்லை.
அதாவது செய்தித் துறையிலும், பத்திரிக்கை துறையிலும், இருக்கின்ற அவலங்களை தோல் உரித்து மக்களுக்கும், செய்தி துறைக்கும், தொடர்ந்து காட்டி வருவது மக்கள் அதிகாரம் பத்திரிகை. இது வாசகர்களாகிய உங்களுக்கும் தெரியும்.

மேலும்,செய்தித் துறையில் இருக்கக்கூடிய இந்த சர்குலேஷன் பாலிசி யாருக்கு சாதகமானது? என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே !இது சாதகமான ஒரு பாலிசி.

இதை யார் கொண்டு வந்தார்கள்? யாருடைய ஆட்சியில் போடப்பட்ட சட்டம்? என்று இப்போது என்னால் அதை சொல்ல முடியவில்லை. இருப்பினும்,இது பத்திரிக்கை துறையில், அரசியல் உள் நோக்கத்துடன், கொண்டு வந்த பாலிசி தான்.

மேலும், செய்தித் துறையில் கமிஷனுக்காக கொண்டுவரப்பட்டதா? தவிர, மக்களுக்காகவும், ஊழலுக்காகவும் போராடுகின்ற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், கார்ப்பரேட் நிறுவன பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் அடிப்படையில், இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதன் நோக்கம் என்ன?
மேலும்,இதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் கூட, இந்த பிரச்சினையை செய்தித்துறை என்ன சொல்வார்கள்? என்றால், நாங்கள் மக்களிடம் அதிகம் எந்த பத்திரிக்கை சர்குலேஷன் காட்டுகிறார்கள்?

அவர்கள் மூலம் எங்களுடைய அரசின் திட்டத்தை ,மக்களிடம் சேர்க்க, இந்த விளம்பரத்தை கொடுக்கிறோம் என்று சொல்லி, எளிதாக சர்குலேஷன் சட்டத்தின் மூலம் தப்பித்துக் கொள்வார்கள்.
ஆனால், இங்குதான் நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்? செய்தித் துறைக்கு! பத்திரிகையின் நோக்கம் என்ன? அரசன் திட்டத்தை கொண்டு, சேர்ப்பது சர்குலேஷன் பத்திரிக்கை. ஆனால், சமூக மாற்றத்தை கொடுப்பது! சமூகநலன் பத்திரிகைகள்.
இவர்கள் சொல்வார்கள், அவர்களும் தான் சமூகத்திற்காக பத்திரிக்கை நடத்துகிறார்கள். இந்த வக்காலத்தை வாங்கும் செய்தித் துறை ஊழலுக்கு எதிராக எத்தனை பத்திரிகைகள் ? எத்தனை தொலைக்காட்சிகள்?

திமுக ஆட்சியில் முட்டு கொடுத்து, அவர்களுடைய அராஜகங்களையும் தவறுகளையும் நியாயப்படுத்தியது? என் புள்ளி விவரங்களை இவர்களால் சொல்ல முடியுமா?
மேலும்,இது தெரியாமல் நீங்கள் செய்தித் துறையில் பணியாற்றுவதற்கு தகுதி இல்லை. ஒரு செய்தியைப் பார்த்து ,அந்த செய்தியின் தரத்தை பற்றியும், அதன் உள்நோக்கத்தை பற்றியும், தெரியாமல், நீங்கள் எப்படி செய்தி துறையில் பணியாற்றுகிறீர்கள் ?
மேலும்,உங்களுக்கு எப்படி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், உதவி அலுவலர்கள், இணை இயக்குனர்கள் ,துணை இயக்குனர்கள்? எப்படி இந்த பொறுப்புகளில் நீங்கள் உட்காருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
மேலும்,,இது எல்லாம் தெரியாமல் பத்திரிகை என்றால்’ யார் கமிஷன் கொடுப்பார்களோ, அவர்கள் தான் பத்திரிக்கை என்று சொல்வதற்கு தான் உங்களுக்கு செய்தி துறையில் வேலையா? தவிர,இதற்கு எத்தனை அதிகாரிகள் உங்களால் விளக்கம் தர முடியும்?

மேலும், ஒவ்வொரும் எங்களுக்கு அது வேலை இல்லைன்னு கூட நீங்கள் சொல்லலாம். அது உங்களுடைய கடமையை தட்டிக் கழிக்கும் வேலையே தவிர
,ஒரு பத்திரிகை! சமூகத்திற்கும், ஊழலுக்கும், எதிராக வெளிவரும் பத்திரிகைகள்,சமூகத்தில் அதன் போராட்டங்கள் எப்படி எல்லாம் இருக்கும்? அதுவாவது உங்களுக்கு தெரியுமா?
ஆனால்,எதுவுமே தெரியாது என்று போஸ்ட் ஆபீஸ் வேலை செய்வதற்காகவா?லட்சக்கணக்கில் உங்களுக்கு சம்பளம்? அவர்கள் ஏதோ ஒரு குப்பை செய்திகளை போட்டு, அரசு விளம்பரங்களை அதில் போட்டு,
அதை கட்டிங் போட்டு, கொண்டு போகும் ஒரு போஸ்ட்மேன் வேலை செய்து, பத்திரிக்கை துறையை இவ்வளவு நாள் ஏமாற்றிக் கொண்டிருந்தீர்கள். நாங்களும் எவ்வளவோ எழுதிப் பார்த்தோம். உங்களிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை .

காரணம் !கட்சிக்காரனுக்கும், உங்களுக்கும் ,என்ன தகுதி? இரண்டு பேரும், ஒரே மாதிரி தான் இருக்கிறீர்கள். அவன் கட்சியின் கரை வேஷ்டி கட்டிக் கொண்டு, வருகிறான். நீங்கள் அதிகாரி என்று பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு வருகிறீர்கள். ஒரு பி. ஆர் .ஓ வாவுது இதற்கான விளக்கத்தை உங்களால் சொல்ல முடியுமா?
மேலும்,பத்திரிக்கை துறையே !ஒரு போட்டி உலகம். இதில் யார் மக்களிடம் ஜெயிக்கிறார்கள்? என்பதுதான் ஒவ்வொரு பத்திரிகைக்கும், உள்ள முக்கிய பிரச்சினை.

ஆனால்,இங்கே! அரசியல் அதிகாரம் உள்ளவர்களை, கைக்குள் போட்டுக் கொண்டு, அவர்களுக்காக பத்திரிகை நடத்தி, கோடிக்கணக்கான சலுகை, விளம்பரங்கள், வாங்குவது இந்த பத்திரிகைகளின் திறமையா?
மேலும் ,30% கமிஷனுக்காக செய்தித் துறை அதிகாரிகள் காட்டும் பாரபட்சமா? தவிர,இது இல்லை என்று மறுத்தால், சிபிஐ விசாரணை வையுங்கள் உண்மை வெளிவரும்.
மேலும், நான் எழுதிய உண்மைகளை எல்லாம் எத்தனையோ பி. ஆர். ஓக்கள் கேலியும், கிண்டலும் செய்திருப்பார்கள் . இதை இவர்கள் மட்டுமே ,செய்திருக்க மாட்டார்கள்.கூடவே இந்த கட்சி பத்திரிகை நிருபர்களும், ஜால்ரா பத்திரிகை நிருபர்களும், ஊழலுக்கு முட்டுக் கொடுக்கின்ற பத்திரிகை நிருபர்களும், சேர்ந்து தான், இதையெல்லாம் பேசி இருப்பார்கள்.
மேலும் ,தலைமைச் செயலகத்திலே, செந்தமிழன் என்ற பி.ஆர்.ஓ முகத்தை கூட பார்த்து, இந்த புத்தகத்தை வாங்க மாட்டார். அந்த அளவுக்கு இந்த பத்திரிகை என்றால், உண்மையை எழுதிக் கொண்டே இருக்கிறான் என்று இவர்களுக்கு எல்லாம் ஒரு பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது.

அதேபோல் தான், திருவள்ளூர் மாவட்டத்தில் அஸ்வின் என்ற பி.ஆர்.ஓ தேர்தல் நேரத்தில் என்னுடைய பத்திரிக்கைக்கு, அரசின் அடையாள அட்டை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்திலே ஒரு திமுக கட்சிக்காரன் போல், இவர்களெல்லாம் பணியாற்றுகிறார்கள்.
இப்போது ஒரே அடியாக தவெக கட்சிக்காரனாக ஒருவேளை மாறி விடுவார்களா? எவ்வளவு கேவலம்? அரசியல் கட்சி பின் புலத்தில்! வேலைக்கு வந்தால், உங்களுக்கு பத்திரிக்கை பற்றி என்ன தெரியும்?
ஒருத்தராவது இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் அவசியம் கொடுக்க வேண்டும் என்று எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா ?

மேலும், பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தில், இந்த சிறிய பத்திரிக்கை ,பெரிய பத்திரிக்கை என்ற பேதம் இல்லாமல், சலுகை, விளம்பரங்கள், ஒரே மாதிரியாக கொடுக்கிறார்கள். ஆனால், இங்கு தான், செய்தித்துறை அதிகாரிகள் அலட்சியமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு காரணம்!இங்கு தான் கார்ப்பரேட் நிறுவன பத்திரிகைகளின் மறைமுக அரசியல் தாக்குதலால், இதனுடைய வளர்ச்சியை இவர்கள் மூலம் சிதைத்து கொண்டே இருக்கிறார்கள்.
மேலும்,சமூகத்திற்கு உண்மையை வெளிப்படையாக கொண்டு செல்பவர்கள், மக்களிடம், மக்களாக பேசுபவர்கள், இவர்களுக்கெல்லாம் அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்பதில் போட்டி, பொறாமையில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ,இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்!
அரசியல் மாற்றம் நிகழாது என்று திமுகவுக்கு முட்டுக் கொடுத்தவர்கள், அவர்களுடைய ஊழலையும், அராஜகத்தையும் நியாயப்படுத்தியவர்கள் ,இப்போது தவெக பக்கம் சாய்ந்து, இதில் அரசியல் உள்ளடி வேலையை தொடர்ந்து 50 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்று தொடர்ந்து மக்களிடம் இவர்களுடைய அராஜகங்களையும், ஊழல்களையும், மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறிப்பிட்ட சில சிறிய பத்திரிக்கைகள் தான்.
மேலும்,ஒரு காலத்தில் இவர்களும் சிறிய பத்திரிக்கையாக இருந்தவர்கள் தான், இன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்டார்கள். இதற்குக் காரணம்? அரசியல் சப்போர்ட். எனவே,
பத்திரிக்கை துறையில்,இந்த வரலாற்றை தமிழக முதல்வர் விஜய் மாற்ற வேண்டும். எந்தெந்த பத்திரிக்கைகள் அதற்கு தகுதியானது? என்பதை அறிந்து அதற்கான சலுகை, விளம்பரங்கள், மற்றும் அங்கீகாரம் கொடுத்து ,அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும் ,இது சம்பந்தமாக பல சங்கங்கள், பத்திரிகைகள் முதல்வர் விஜய்யை சந்தித்து, தங்கள் கோரிக்கையை தலைமைச் செயலகத்தில் தெரிவிக்க முன் வந்துள்ளனர் . இது தவிர,அதற்கான செயல் திட்டத்தில் இறங்கி உள்ளனர்.
மேலும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரி துறை பல்வேறு ஏஜென்ட்களிடமே அரசின் விளம்பரங்களை இதனால் வரை வாங்கி வந்துள்ளனர்.

மேலும்,ஒரு அரசு விளம்பரத்தை எதற்காக ஏஜெண்டுகளிடம் கொடுக்க வேண்டும்? 30% கமிஷன் தொகைக்காக தான் இந்த வேலையை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் பார்த்துள்ளனர் என்பதை முதல்வர் விஜயின் கவனத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக தெரிவிக்கும் தகவல்.
எனவே, பத்திரிக்கை துறை! கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்களுக்கும், சமூகநலன் பத்திரிகைகளுக்கும் இடையே ஒரு இடைவெளிக்கு தமிழக முதல்வர் விஜய் சமூக நலன் மற்றும் மக்கள் நலன் பத்திரிகைகளின் மாற்றத்திற்கான முற்றுப்புள்ளி வைப்பாரா ? – ஆசிரியர்.
