பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும்,

ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், நாட்டையும் நேசிக்கக் கூடிய ஒரே தலைவன் நரேந்திர மோடி.

இப்படிப்பட்ட பிரதமரை, ஒரு இந்திய நாட்டுத் தலைவரை, ராகுல் தர குறைவாக பேச, எந்த தகுதியும் இல்லை. உலக நாடுகளில் போரின் அபாயம் சூழ்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அத்தகைய நிலை இல்லாமல், இருப்பதற்கு காரணமே, நரேந்திர மோடியின் அரசியல் சாணக்கியத்தனம் தான்.

மேலும்,இந்தியாவை பொருளாதார வீழ்ச்சியை இல்லாமலும், போர் நெருக்கடி இல்லாமலும், கொண்டு செல்லக் கூடிய அவருடைய அவருடைய ராஜதந்திரம் ,வேறு யாருக்காவது வருமா? தவிர,உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், நன்மதிப்பைப் பெற்ற ஒரே பிரதமர் நரேந்திர மோடி.

இது போன்ற தருணத்தில் ஏன்? மௌனம் காக்கிறார் என்ற கேள்வி ?சின்ன பசங்க கேட்கிற கேள்வி? ராகுலுக்கு அந்த அளவுக்கு அரசியல் ஞானமும் இல்லை அரசியல் சாணக்கிய தனமும் இல்லை. ஒரு அடிப்படை பேசிக் நாலேஜ் கூட ராகுலுக்கு கிடையாது. இங்க எப்படி ஸ்டாலின் எழுதி கொடுத்து படித்துக் கொண்டிருக்கிறோ அதே நிலைமைதான் ராகுல் காந்தி.

மேலும்,மேடையில் வீர வசனம் பேசுவதெல்லாம், அரசியல் தெரியாத அடியாள் கூட்டம், இதை வைத்துக் கொண்டே நீங்கள் அரசியல் பேசலாம், எப்படியும் பேசலாம். இது தவிர,ஒருத்தருக்கு, ஒருத்தர் வாய்க்கு வந்தபடி தீட்டிக் கொள்வது தான், இவர்களுடைய அரசியல்.

ஆனால், அரசியல் தெரிந்தவனுடைய அரசியல் என்பது வேறு. அது எப்படி இருக்கும்? என்பது கூட இவர்களுக்கு தெரியாது. அவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? இவருடைய அரசியல் நோக்கம் என்ன? இவருடைய எதிர்கால அரசியல் திட்டம் என்ன? இது எல்லாம் அரசியல் தெரிந்தவனுடைய அரசியல். மேலும்,

இதை எந்த பத்திரிகை, தொலைக்காட்சியாவது, இதுவரைக்கும் மக்களிடம் சொல்லி இருக்கிறார்களா? ஊர் சொத்து எப்படி கொள்ளை அடிக்கலாம்? எதில் எல்லாம் ஊழல் பண்ணலாம்? அந்த ஊழல் பணத்தை கொண்டு போய் வெளிநாடுகளில் எப்படியெல்லாம் முதலீடு பண்ணலாம்?

அதை இங்கே மீண்டும் போலி கம்பெனி பெயரில் பதிவு செய்து இந்தியாவுக்கு எப்படி கொண்டு வரலாம்? அந்நிய செலாவணி மோசடி எப்படி எல்லாம் மறைமுகமாக செய்யலாம்? இதுதான் இவர்களுடைய அரசியல் திட்டம். அதனால் காங்கிரஸ் கட்சி திமுக மற்றும் அதனுடைய அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்றாகத்தான் ஊழல் கூட்டணியாக சேர்ந்திருக்கிறது.

மக்கள் ஏமாந்து விட்டார்கள். நம்ம தமிழக மக்கள் நன்றாக பேசினாலே நல்லவன் என்று நம்பி விடுவார்கள். ஊரிலும், அப்படிதான். நாட்டிலும், அப்படி தான். பிறகு புலம்புவார்கள். அதேபோல் தான் இப்போது தமிழக மக்கள் திமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி புலம்பிக் கொண்டு ,போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,ராகுல் காந்திக்கு இவருடைய அப்பா ராஜீவ் காந்தியின் ஊழலைப் பற்றி தெரிந்திருக்காதா? (ஹெரால்டு பத்திரிகை ஷேர்ஸ்)அந்த உலக மகா ஊழல், இன்னும் வழக்காக போய்க் கொண்டிருப்பதும், நாட்டு மக்களுக்கு தெரியாதா?

ஊழலுக்கு அர்த்தம் தெரியாத மக்கள் வாக்களித்து இருக்கிறார்களா? அதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள்! உங்களுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் வாக்களித்தால் தானே ,அதைப்பற்றி சிந்திப்பான் .மேலும்,

கூலிக்கு எப்படியும் பேசுபவன் ,ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, ஓட்டு போடுபவன், இவனுக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும்? ஆயிரம் ரூபா கொடுத்தால் ,ஓட்டு போடுவான். இலவசம், கொடுத்தால் ஓட்டு போடுவான். இவனுக்கெல்லாம் நாட்டைப் பற்றியோ, இது போன்ற போர் சூழல் வந்தால்! நாட்டின் நிலைமை என்ன ஆகும் ?என்பது பற்றியோ தெரியுமா? எதுவும் தெரியாது.

இந்த வெத்து கூட்டங்களை வைத்து, இவர்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வியாபார ஊடகங்களை வைத்து, இவர்களுடைய பேச்சை மக்களிடம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல தேவையற்ற செய்திகளை திணித்து கொண்டிருப்பதாகவே பத்திரிக்கை பற்றி தெரிந்து சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மக்கள் அதிகாரம் போல், உண்மை எழுதக்கூடிய எத்தனை பத்திரிக்கைகள் ? எத்தனை தொலைக்காட்சிகள் இருக்கிறது? விரல் விட்டு தான் எண்ண முடியும்.

எனவே, நாட்டு மக்கள் அரசியலை பேசுகின்ற தகுதி யார் ?யாருக்கு இருக்கிறது? என்பதாவது தெரிந்து கொண்டாவது வாக்களியுங்கள் .உங்களுடைய சுயநலம் தான் இந்த நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

அதனால், படித்த இளைஞர்கள், இங்கு இருக்கிற பிஜேபியின் அரசியல் கட்சியினரை, பார்த்து மோடியை எடை போடக் கூடாது. அவர் யாரையும் ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு , அவருடைய தகுதியும், திறமையையும், செயல் திறனும், தேசப்பற்றும், வேறு ஒரு நபரை,ஒப்பிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *