அரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி.

இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அரசியல் கட்சிகள் ,இதுதான் அரசியல் !என்று நாம் ஒருவரை ஒருவர் திட்டி பேசிக் கொண்டிருந்ததை, அப்படியே அதை சுலபமாக தங்கள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மக்களிடம் சேர்த்தார்கள்.

இது தவிர,அரசியல் என்று நம்முடைய பேட்டிகளும், மக்களிடையே காண்பித்துக் கொண்டு ,ஏமாற்றிக் கொண்டிருந்தது.இப்போது அந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும்,போட்டிகள் உருவாகி, அவர்களுடைய செய்திகள், மக்களிடம் எடுபடவில்லை.

மேலும், சமூக ஊடகங்களில், சமூக ஆர்வலர்கள் இதைப் பற்றி அசிங்கமாக கூட விமர்சிக்கிறார்கள். அந்த அளவுக்கு பத்திரிக்கைத்துறை, தரம் தாழ்ந்து விட்டதா ? காரணம்,

கார்ப்பரேட் அரசியலும் ,கார்ப்பரேட் பத்திரிகைகளும் ,சேர்ந்து கார்ப்பரேட் அரசியல் வியாபாரம் செய்தார்கள். ஆரம்பத்தில் இந்த பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகள், எல்லாம் மக்கள் பெரிய பத்திரிக்கை என்று முட்டாள்தனமாக நம்பி வாழ்ந்தார்கள்.

இதற்குக் காரணம் காலத்தின் சூழ்நிலை . மக்களிடம் படிப்பறிவு, சிந்திக்கும் திறன், இல்லை. இப்போது செல்போன்கள், வந்ததிலிருந்து ஒரு பக்கம் பொய்யை சொன்னாலும், மறுபக்கம் அதற்கான உண்மை இணையதள பத்திரிகைகளில், கிடைக்கிறது.மேலும் ,

தற்போது அதிமுக ,திமுக ,அரசியல் கட்சிகள் ஊழல் நிர்வாகத்தை கொடுத்து மக்களுக்கு நம்பகத் தன்மையில்லாத ஒரு அரசியலை தொடர்ந்து மாறி மாறி கொடுத்து வந்தார்கள் அதன் விளைவு தான் ,தமிழகத்தின் அரசியல் வெற்றிடம் என்தான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில், விஜயின் அரசியல்! இளைஞர்களை ,அரசியலுக்கு கொண்டு வந்து விட்டார்.

அவர் வரவில்லை என்றால் !இந்த இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. இந்த அரசியல் விழிப்புணர்வு இல்லை என்றால், அவர்களுடைய வருங்காலம் மிகப்பெரிய சூனியம் ஆகி இருக்கும். அவர்கள் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி வருமானால், ஊருக்கு இரண்டு மது கடைகளை திறந்து, போதை பொருளை தாராளமயமாக்கி, அவர்கள் அனைவரையும் வாழத் தகுதியற்றவர்களாக ஆகியிருப்பார்கள். இது தவிர,

தொடர்ந்து ஊழல் ,அராஜகங்கள் ,பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பது ,இதுதானே இந்த இரண்டு கட்சிகளும் செய்து கொண்டிருந்தது. இவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள் என்பதை கணக்கெடுப்பதா அரசியல்? மேலும்,இதை கேட்பவர்கள் அவர்களுக்கு சமூக விரோதி. தவிர, இந்த இரண்டு ஆட்சியிலும், சமூக ஆர்வலர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும்,சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டில் மக்கள், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. .

இதில், காவல்துறை அதிகாரிகள் அவர்கள் பக்கம் நின்று கொண்டு, இப்படிப்பட்ட சமூக விரோத கும்பலுக்கு குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ,பல கிராமங்களில் இந்த அரசியல் கட்சியினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ,பொது மக்களுக்கும், இடையே மோதல்கள் உருவாகிறது.

மேலும்,அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கட்சி போர்வையில் உள்ள சமூகவிரோதிகள், நாட்டில் கற்பழிப்பு ,கொலை, பாலியல் குற்றங்கள் எது நடந்தாலும், ஆனால் அதற்கு விதிவிலக்கு ஜெயலலிதா, மந்திரியாக இருந்தாலும், பார்க்க மாட்டார். ஆளும் கட்சி என்றால், அந்தக் கட்சியின் குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். மேலும் ,

இவர்கள் சமூக விரோத செயல்களை செய்து கொண்டு ,கேட்பவனை சமூக விரோதியாக்கி, காவல்துறை உதவியோடு பொய் வழக்கு போடுவார்கள்‌.

இனி எத்தனையோ அரசியல் கட்சிகள் ,தமிழ்நாட்டில் காணாம போகப் போகிறது என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியும்.

மேலும் இப்படிப்பட்ட அரசியல் கட்சியினர் பாதிப்புகள் மக்களை சிந்திக்க வைத்துள்ளது .அதுதான் அரசியல் விழிப்புணர்வு .இது ரெண்டும் சேர்ந்து இப்போது அரசியலை பற்றி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும்,இன்று இந்த கட்சிகளின் செயல்பாடுகள் ,சமூக நலன்களை விட, அவர்கள் சொந்த நலத்திற்காக அரசியல் ஆக்கிவிட்டார்கள். அவர்களுடைய சொந்த குடும்பத்திற்காக , கட்சியாக ஆக்கிவிட்டார்கள். பொதுநலம் என்பதே அரசியலில் துளி கூட இல்லாமல், எல்லாமே சுயநலமாகிவிட்டது.

இந்த சுயநலத்தின் எதிர்பார்ப்புகள், ஆசைக்கு அளவில்லாமல், ஆளாளுக்கு எவ்வளவு ?கொள்ளையடிக்க முடியுமோ ,அது திறமையாக நினைத்துக் கொண்டு சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது, இந்த வெறுப்பு அரசியல் இரண்டு கட்சிகளின் மீது தமிழக மக்களுக்கு இது, இன்று, நேற்று அல்ல , சுமார் 10 ஆண்டு காலத்திற்கு மேலாகவே, அதாவது ஜெயலலிதா இறந்த பிறகு ,தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளின் ஊழல்கள், அராஜகங்கள், ரவுடியிசங்கள், குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவிகள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் எல்லோருக்கும் நம்முடைய குழந்தை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வரை, அவர்கள் வயிற்றில் நெருப்பை தான் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனை பெண் பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு ,உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய வேதனை சும்மா விடாது. காரணம் இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? என்றால் ஆட்சியாளர்கள் தன் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், அலட்சியமாக இருந்தார்கள். இப்போது ,இவர்களுடைய தவறுகளை எல்லாம் மறைத்துவிட்டு, விஜய் மீது பழி போட்டுக் கொண்டு ,அரசியல் செய்தால், மக்கள் ,இவர்களுக்கு துளி கூட ஆட்சி செய்ய தகுதி இல்லை என்று தான் மக்களின் முடிவு .

அரசியல் என்பது சேவையா? அல்லது கொள்ளையடிப்பதா? எல்லை மீறி அரசியல் கட்சி பின்புலத்தில் என்ன யார் ?தவறு செய்தாலும், அதை எல்லாம் மூடி மறைக்க பத்திரிகைகள், காவல்துறை எல்லாமே துணையாக நின்று கொண்டு மக்களுக்கு எதிராகவே நின்று கொண்டிருந்தது.

இப்போது இந்த இரண்டு கட்சிகளுக்கும் ,செய்த தவறுகள், ஊழல்கள் ,எல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் விழித்துக் கொண்டார்கள். இனி நாம் இவர்களை ஏமாற்ற முடியாது.

நாம் அவர்களுக்கு இதுவரை எஜமானர்களாக இருந்தோம். இனி மக்கள்தான் நமக்கு எஜமானார்களாக இருக்கப் போகிறார்கள் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்து, ஆடிப் போயிருக்கிறார்கள்.

இப்போது கூட பணம் கொடுத்து, இலவச பொருட்கள் கொடுத்து, இந்த இரண்டு கட்சிகளும் ஓட்டுக்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் , இரண்டு கட்சிக்கும் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். மேலும்,

தேனி மாவட்டத்தில் எமது நிருபர் என்னிடம் பேசும்போது சொன்னார், கடந்த தேர்தலில் அதாவது பாராளுமன்ற தேர்தலில், அதிமுக பணம் கொடுக்கவில்லை .திமுக ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தது அதனால், வாங்கிய பணத்துக்கு வாக்களித்து விட்டார்கள். திமுக வெற்றி பெற்றது.

இப்போது அவர்களும் கலக்கத்தில்..! தேர்தல் பயம் என்பது முதன் முதலில் அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினருக்கு வந்துள்ளது ‌ என்றால், அது 2026 சட்டமன்றத் தேர்தல் தான். அவர்கள் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது ‌‌. இப்போது தெரிகிறதா? அரசியல் என்றால் சேவையா? அல்லது கொள்ளையடிப்பதா? அல்லது வியாபாரமா?

இனி எதை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க போகிறார்கள்? விஜயின் அரசியல்! சேவையை நோக்கி பயணிக்க போகிறார். நீங்கள் எல்லாம் எதை நோக்கி பயணிக்க போகிறீர்கள்? வாக்காளர்கள் நினைக்கின்ற மற்றும் பேசுகின்ற மன ஓட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட செய்தி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *