
தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், எல்லை மீறி அரங்கேறிய சம்பவம்.
மேலும்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற தகப்பன், மகன் இருவரையும் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். இது மனிதாபிமானம் அற்ற ஒரு செயல்.
மேலும்,காவலர்கள் எதற்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது அவர்கள் நினைத்துப் பார்த்து இருந்தால் ,இப்படிப்பட்ட கொலை குற்றத்தை அரங்கேற்றி இருக்க மாட்டார்கள்.
மேலும், அதிகாரம் இருக்கிறது. அது எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது? அடித்து துன்புறுத்தி கொலை செய்ய வா? அந்த இரண்டு உயிரும் வலியால் எவ்வளவு துடித்து இருப்பார்கள்? அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே. அவர்கள் செய்த தவறு என்ன? கொரோனா காலத்தில் அவர்களுடைய செல்போன் கடை ஏழு மணி வரை திறந்தே வைத்திருந்தது தான் அவர்கள் செய்த தவறு. வேறு ஒரு தவறும் இல்லை.

மேலும்,அந்த தவறுக்கு ஒன்று அபராதம் ஐயாயிரமோ, பத்தாயிரமோ, கூட விதித்து விட்டுப் போய் இருக்கலாம். அல்லது ஒரு கண்டித்து ,இது எல்லாம் தவறு என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால்,வயசான ஒரு ஆளை அதுவும் 60 வயசு உள்ள ஒரு நபர் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் (சுமார் 31 வயது ) இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இதற்கு முன் தந்தையின் கைது செய்ததற்காக? மகன் காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் போலீஸ் அவர்களை, இரத்த வெள்ளத்தில் அடிக்கிறார்கள்.
இப்படி ஒரு கொடூரமான சம்பவம் காவல் நிலையத்தில் நடத்தினால், காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இவர்கள் எப்படி மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் ?என்ற கேள்வியும் எழுகிறது.மேலும்,

நாட்டில் அரசியலில் எத்தனையோ கொலை குற்றவாளிகள், உலா வந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ அரசியல் கிரிமினல்களுக்கு, காவல்துறை வணக்கம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் காவல் துறையின் மதிப்பை, மரியாதையை சீர்குலைக்கிறது.
மேலும் ,அந்த காலத்தில் காவல்துறையினர் மீது ஒரு பயமும், அச்சமும் இருந்தது. அந்த அளவுக்கு அவர்களுடைய பணி நேர்மையாக இருந்தது. குடித்துவிட்டு ஒருவர் வந்தால் கூட பயந்தார்கள். இன்று அரசாங்கமே மக்களை குடிகாரர்களாக மாற்றி இருக்கிறது அது ஒரு புறம். ஆனால், எந்த தவறும் செய்யாத இவர்கள் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த வழக்கு சிபிஐ வரை சென்று முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்பத்தில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டு, சிபிஐ விசாரணையில் சம்பந்தப்பட்ட 9 காவலர்களுக்கும், இதில் பங்கு உண்டு என்று விசாரணையில் தெரிய வர ,அவர்கள் அத்தனை பேருக்கும், இன்று மதுரை செசன்ஸ் கோர்ட் நீதிபதி முத்து குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும்,இங்கே, ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் என்னென்ன தவறுகள் நடக்கிறது ?என்பதை காவல்துறையின் உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வராமல் இருந்தது மிகப் பரிய தவறு .
மேலும்,அவர்கள் காவல் நிலையங்களில் தினமும் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் காவல்துறையின் உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.தவிர, தினமும் ஒரு எஃப். ஐ .ஆர் போடப்பட்ட நபர்களின் மீது என்ன விசாரணை? எதற்காக வந்தார்கள்? என்பதை டிஎஸ்பி, எஸ்.பி .தினமும் கவனிக்க வேண்டும்.

மேலும், ஆரம்பத்தில் இதற்கு டாக்டர்கள் வழங்கிய சர்டிபிகேட் முக்கிய ஆதாரமாக அதை பார்க்க வேண்டும். அங்கும் தவறு நடந்திருக்கிறது. இவர்களை ரிமாண்ட் செய்யும் போது, இரத்த ரத்த காயங்களை பார்க்காமல் ,அவர்களை எப்படி ரிமெண்ட் செய்யலாம் ?என்று பரிந்துரை செய்த செசன்ஸ் கோர்ட் நீதிபதியும் செய்த தவறையும் பார்க்க வேண்டி உள்ளது. இவ்வளவு தவறுகள் ஒன்றின் பின் ஒன்றாக நடந்து, இரண்டு உயிர்களின் கொலைக்கு சிபிஐ வரைக்கும் போக வேண்டிய அவசியம் என்ன? எனவே,

அப்போதே இந்த சம்பவம் , உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு போயிருந்தால் , நிச்சயம் இந்த கொலை சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இனிமேலாவது காவல்துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொரு காவல் நிலையத்தையும் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவார்களா?
மேலும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும் போது, ,அவர்களை பாதுகாக்க தான் காவலர்களே ஒழிய, அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அடித்து துன்புறுத்தி ,கொலை செய்வதற்கு அல்ல என்பதுதான், இந்த தீர்ப்பின் முக்கிய மையக் கருத்தாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது.
மேலும்,நாட்டில் காவலர்கள் பணி மக்களுக்காக இருக்க வேண்டுமே ஒழிய, மக்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்வது காவல்துறையில் இனி இப்படி ஒரு சம்பவம் நடக்குமா? அதற்காக தீர்ப்பு தான் மதுரை செசன்ஸ் கோர்ட் நீதிபதி முத்துக்குமரன் கொடுத்துள்ள தீர்ப்பு.
மேலும், தந்தை மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதில் முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் சேர்த்து 15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவல்துறை இனியாவது தங்கள் கடமையை உணர்ந்து பணியாற்றுவார்களா? அல்லது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இது போன்ற தண்டனைகள் கொடுக்கப்படாமல், நீதிமன்றம் இருந்ததன் விளைவு தான் ,இப்போது சாத்தான்குளம் கொலை குற்றத்திற்கு, சரியான நீதியை காவலர்களுக்கு நீதிபதி முத்துக்குமரன் வழங்கி உள்ளார் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் செய்தி .