பொது மக்கள் தங்கள் வேலைகளை முடித்து, வீட்டுக்கு செல்லும்போது, விரைவாக செல்லும்போது, போக்குவரத்து இடையூறுகள் இன்றி செல்ல முடியுமா?

தேர்தல் நெருங்க ,நெருங்க அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது. காலையில், சென்று மாலை வரை உழைத்து விட்டு, வீட்டுக்கு திரும்பும் வேளையில், அரசியல் கட்சியினரின் கூட்டங்களால், ஒவ்வொரு பகுதியிலும், பொதுமக்களுக்கு வீட்டுக்கு செல்லும்போது, டிராபிக் ஜாம் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் சரியான நேரத்திற்கு, அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சில பேர் ஓடிப் போய் ரயில்களில் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேர் பஸ் மூலம் […]

Continue Reading

செய்யறது திருட்டு தொழில், நீ ஆளும் கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் என்ன? எம்பி ஆக இருந்தால் என்ன? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்.

நாட்டில் தகுதியான பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கரூரில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்தக்கூடிய ஒரு குவாரியை பற்றி செய்தி எடுக்க வந்த தமிழ் 24 சேனல் செய்தியாளரை அவன் உயிருக்கு போராடும் வரை அடித்திருக்கிறான் என்றால் அவன் ஒரு எம்எல்ஏவுக்கு தகுதி இல்லாதவன் . பதவி ,அதிகாரம் ,எல்லாம் மக்கள் போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களுக்கு சமூக சேவை செய்ய வருகிறோம் என்று சொல்லி, மக்களை ஒரு பக்கம் […]

Continue Reading

நாட்டில் நூறு சதவீதம், எந்த ஒரு அரசியல் கட்சியும், தற்போது ஊழலுக்கு அப்பாற் பட்ட 100 % அப்பழுக்கற்ற கட்சி என்று நினைக்க முடியுமா? – முடியாது.

நாட்டில் அரசியல் கட்சிகளால் ஊருக்குள் பிரிவினையும், உறவுகளுக்குள் பிரிவினையும், ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் மாமன், மச்சான் ,பங்காளி உறவுகள், ஜாதி ,பிறகு நீ யாரோ, நான் யாரோ, இப்படி தான் பெரும்பாலான கிராமங்களில் இந்த அரசியல் கட்சிகளால் பிரிவினைகள் ஏற்படுத்தி, தான் வாழ்வதற்கு இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும், இந்த உண்மை எல்லாம் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியாது. தவிர, பத்திரிகைகள் வெளிப்படுத்தினாள் தானே தெரியும். […]

Continue Reading

நாட்டில் ஊழலை ஒழிக்க பத்தாண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் (Registration)தேர்தல் ஆணையம் நீக்குமா?

நாட்டில் ஊழலை ஒழிக்க முக்கிய நடவடிக்கைகளில் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் . அரசியல் கட்சிகள் என்பது கடந்த காலங்களில் சமூக நலனும், தேச நலனும் மட்டுமே முக்கியத்துவம் ஆக இருந்தது. இன்று இந்த தூண்டுக் கட்சிகள் அதாவது லெட்டர் பேட் கட்சிகள் முதல் ஒரு சதவீத ஓட்டு , 2 % ஓட்டு,3% சதவீத ஓட்டு, 5% சதவீத ஓட்டு ,6 % சதவீத ஓட்டு, 7% சதவீத […]

Continue Reading

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக,அதிமுகவுக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சியை தருவதாக பேச்சு!அதை நிறைவேற்ற முடியுமா ? – ஆசிரியர்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக அவர்களுடைய கடந்த கால ஆட்சிகள், தற்போது ஸ்டாலின் ஆட்சி, தமிழக மக்களுக்கு ஒரு ஊழல்கள் நிறைந்த ஆட்சி தான், அதில் ஒன்றும் மற்ற கருத்து இல்லை . இதை விஜய்யால் மாற்றம் கொடுக்க முடியுமா? இதுதான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? இருப்பினும், அவர் உடனே முடியவில்லை என்றாலும் ,அதற்கான படிப்படியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கிறார்.மேலும்,அது படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் .ஒரே அடியாக, ஒரே நேரத்தில் ஒழிக்க […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மண் ஆய்வு செய்யாமல், நில எடுப்புக்கு தமிழக அரசின் உத்தரவு சரியானதா? – ஆய்வாளர்கள்.

தமிழக அரசு கடந்த 2023 ஆண்டிலிருந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன், நிலத்தை ஆய்வு செய்து இருக்க வேண்டும். மேலும்,மண் ஆய்வு செய்யாமலே, அரசாணை வெளியிட்டது, தமிழக அரசின் தவறு. இது ஒரு பக்கம், இருப்பினும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் நிலை எடுப்புக்கு எதிராக போராட்டம் தெரிவித்து, வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர, நில எடுப்புக்கு உத்தரவிட்ட […]

Continue Reading

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுநலன் இன்றி ,இவர்கள் சுய நலத்திற்கு அரசியல் கட்சியா? அது சமூகத்திற்கு பயன் உண்டா? எதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

Are political parties and political party members in Tamil Nadu political parties for self-interest, without public interest? Is it beneficial to society? Why should we vote for them? ஊழலற்ற ஆட்சியை கட்சியை கொடுக்காமல் மக்களுக்கான அரசியல் கொடுக்க முடியாது. தேர்தல் நெருங்குவதால் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்க கூடிய கார்ப்பரேட் அரசியல்வாதிகள் பதவிக்காக எந்த கட்சியில் சீட்டு கொடுப்பார்கள்? என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் […]

Continue Reading

மக்களின் உயிரை வாழ வைப்பது உணவு !இந்த உணவு தரமானதாக கொடுப்பது அரசின் கடமை அல்லவா? ஐந்தாண்டு காலத்தில்! திமுக ஆட்சியில் ,இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தது உண்டா?

திமுக ஆட்சி ,முடியும் தருவாயில் மக்களுக்கு எது முக்கியம்? என்பது கூட தெரியாமல் ,ஆட்சி நடத்தி விட்டார்கள். ஒரு மனிதனுக்கு உணவு தான் முதல் தேவை .அடுத்தது உடை ,இருக்க இருப்பிடம், இதன் பிறகு தான் மற்றவை .அவ்வளவு முக்கியமான ஒரு உணவு பொருளை மக்களுக்கு எப்படி தரமானதாக தர வேண்டும்? என்பதை திமுக ஆட்சியில் மறந்து விட்டார்கள்.மேலும், சாமானிய ஏழை, நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய ஓட்டல்கள் முதல் பணக்காரர்கள் சாப்பிடக்கூடிய ஹோட்டல்கள் வரை இன்று உணவு […]

Continue Reading

காவல் துறைக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை செய்வது தான் காவல் துறையின் வேலையா ? இதில்,சட்டம் முக்கியமா? அதிகாரம் முக்கியமா?

காவல்துறைக்குள் இருக்கின்ற கருப்பு சட்டங்கள் அகற்றப்படாத வரை சமான்ய மக்களுக்கு ஞாயம் கிடைக்காது. அந்த கருப்பு சட்டங்களால் தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது என்ன? சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்கின்ற வேலையா? இவர்கள் எஃப் .ஐ .ஆர், ல் எழுதிக் கொள்வது தான் சட்டமா ? இதில் நியாயமும் இருக்கலாம். அநியாயமும் இருக்கலாம். சட்டம் என்பது ஒரு கத்தி போல் உள்ளது. அந்தக் கத்தி நல்லதுக்கும் பயன்படும் .கெட்டதுக்கும் பயன்படும். அதை பயன்படுத்தக்கூடிய நபரின் கையில் […]

Continue Reading